கதை எழுதும் போது கயல் ஆனந்தி.; படம் முடியும் போது கமலி.. – இயக்குநர் ராஜசேகர்

கதை எழுதும் போது கயல் ஆனந்தி.; படம் முடியும் போது கமலி.. – இயக்குநர் ராஜசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கமலி from நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது :

தயாரிப்பாளர் துரைசாமி பேசும்போது,

ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம்.

இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார்.

குமணன் பேசும்போது,

இப்படத்தை பெற்றோர்கள் பார்க்க வேண்டும். இப்படம் 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,

சேலம் மாவட்டம் சின்னனுர் கிராமத்தில் இருந்து வந்தவன்.

பொருளுக்காக பேசுவது, காரியத்திற்காக பேசுவது குறைந்திருப்பது கிராமப் புறங்களில் தான். நாம் அனைவரும் உலகத்திற்குள் அடங்கிய கிராமம் தான்.

நான் எப்போதும் என்னுடைய அறையில் அமர்ந்துதான் பாடல்கள் எழுதுவேன். ஆனால், இப்படத்திற்கு இயக்குநர் அறையில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

‘நீரில் மின்னல்களாய்’ என்ற வரி எனக்கு மிகவும் பிடித்த வரி. என்னைப் பொறுத்தவரை பாடல்களின் வரிகள் காட்சியிலும், கேட்பதற்கும் அர்த்தம் மிகுந்ததாக ஒரு பாதிப்பு இருக்க வேண்டும் என்றார். மற்ற கவிஞர்கள் யுகபாரதி, மதன் கார்க்கி எழுதிய படல்களும் மிகவும் பிடித்திருந்தது.

நடிகை ஸ்ரீஜா பேசும்போது,

தேனியில் பிறந்து வளர்ந்ததால் இப்படத்தில் என்னை சுலபமாக இணைத்துக் கொள்ள முடிந்தது.

இந்த தருணத்தில் ‘நக்கலைட்ஸ்’ யு-டியூப்- க்கு நன்றி கூற விரும்புகிறேன். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் வள்ளி. அந்த பாத்திரத்தை என்னுடைய தோழியை உதாரணமாக எடுத்துக் கொண்டேன்.

ரேகா சுரேஷ் பேசியது:

என்னுடைய சொந்த ஊரே சென்னை. தாத்தா பாட்டி ஊர் கிருஷ்ணகிரி. இப்படத்தை இயக்குநர் ரசித்து செதுக்கியிருக்கிறார். பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

ஆனால், இப்படத்தில் அம்மா என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தது வரும் வரை விடமாட்டார்.

நடிகை அபிதா பேசும்போது,

இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நேத்ரா. நேர்மறை மற்றும் எதிர்மறை கலந்த கலவையாக இருக்கும் என்னுடைய கதாபாத்திரம்.

படத்தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் பேசும்போது,

இயக்குநர் என்னிடம் முழு கதையை கூறவில்லை. ஒரு வரியைத் தான் கூறினார். சில காட்சிகள் மட்டும் தான் கூறினார்.

அதுவே எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. படத்தொகுப்பு பணியின் போது எந்த அழுத்தமும் இல்லாமல் அமைதியாக செய்ய முடிந்தது.

இப்படத்தின் பள்ளி, மற்றும் கல்லூரி காட்சிகள் யதார்த்தமாக இருக்கும். குறிப்பாக காதல் காட்சிகள் வெகுளித்தனமாக இருக்கும்.
கல்லூரி மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் அளவிற்கு இருக்கும் என்றார்.

இமான் அண்ணாச்சி பேசும்போது…

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தேன். இப்படத்தின் மூலம் அருமையான கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்து கொடுத்த இயக்குநருக்கு நன்றி.

இப்படத்தில் நீங்கள் எல்லாவற்றையும் எதிர்பார்க்கலாம். ‘கயல்’ ஆனந்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
இப்போதைக்கு இருக்கும் சூழலில் திரையரங்கைப் பற்றி நாம் நன்கு அறிவோம்.

ஆகையால், இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்.
உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் நடிப்பு வரும்வரை விடாமல் வேலை வாங்கியிருக்கிறார்கள்” என்றார்.

இசையமைப்பாளர் தீனதயாளன் பேசும்போது,

இப்படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த அபுண்டு ஸ்டூடியோஸ் மற்றும் இயக்குநருக்கும் நன்றி. இப்படத்தின் கதைக் கூறியதில் இருந்து இப்போது வரை விறுவிறுப்பு குறையவில்லை.

அந்த அளவிற்கு கதைக் கூறும்போதே இயக்குநர் விறுவிறுப்பை ஏற்படுத்தி விட்டார் என்றார்.

நடிகர் பிரதாப் போத்தன் பேசும்போது,

இப்படத்திற்காக இயக்குநர் ராஜசேகர் அழைக்கும்போது நோபல் காதல் கதையாக தோன்றியது. இக்கதையை மிகவும் பிடித்துதான் நடிக்க வந்தேன் என்றார்.

இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசும்போது….

“நான் திருச்சி மாவட்டம் பச்சைமலை அடிவாரம்.
என்னுடைய வாழ்க்கையில் அனைத்துப் பக்கங்களிலும் தூணாக இருந்தவர்கள் என்னுடைய அண்ணன் மற்றும் அண்ணி தான்.

நான் தான் ஆண் கமலி. என்னுடைய பெண் வர்க்கம் தான் கமலி கதாபாத்திரம். அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவர் தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அந்த இடம் தான் இப்படத்தின் கருவாக தோன்றியது.

நாயகி படமாக எடுத்தால் தான் முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இப்படத்தில் கமலி காதல் செய்யும் போது எப்படி இருப்பாள்? மகளாக எப்படி இருப்பாள்? என்று ஒவ்வொரு கட்சியை நான் எப்படி எதிர்பார்க்கிறேனோ அப்படியே நடித்துக் கொடுத்தார்.

அபுண்டு ஸ்டூடியோஸ்-ன் துரைசாமி என்னுடைய கதையைக் கேட்டதும் என் பொறுப்பிலேயே அனைத்தையும் விட்டுவிட்டார்கள்.

இந்த கதை எழுதும்போது எனக்கு நினைவிற்கு வந்தது ஆனந்தி மட்டும்தான். ஆனால், ஆனந்தி ஒப்பந்தமானது எளிதாக நடக்கவில்லை.

நீங்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் வருகிறோம். கதை கேளுங்கள் பிடித்தால் பணியாற்றுங்கள் என்று கூறினோம். உடனே, வாரங்கல் சென்று கதை கூறினோம்.

கதை கேட்ட அடுத்த நிமிடம் இப்படத்தை எப்போது எடுக்கலாம். நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு முறையிலேயே நடித்துக் கொடுத்தார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கமலியாகவே வாழ்ந்தார். அவருக்கு மிக்க நன்றி.

பிரதாப் போத்தனிடம் கதை கூறியதும் மிகவும் ஆர்வமாக பணியாற்றினார். பெரிய மனிதருக்குள்ளும் குழந்தைத்தனம் இருக்கும் என்பதை அவரிடம் கண்டேன்.

இப்படத்தில் நடிகர்கள் மட்டும் அல்ல அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள்.
இசையமைப்பாளர் தனக்கென்று இசையமைக்காமல், படத்திற்கு என்ன தேவையோ அதை செய்தார் என்றார்.

நன்றி கூரிய நிர்வாக தயாரிப்பாளர் ஜெய் சம்பத்:

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மக்கள் தொடர்பாளர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

‘கயல்’ ஆனந்தி பேசும்போது,

என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்.

அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது.

ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்.
இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும் என்றார்.

Director Raja Sekar talks about Anandhi role in her next film

ஆங்கில படத்திற்காக 50 நாட்கள்..; அமெரிக்கா பறக்கும் ஹாலிவுட் நடிகர் தனுஷ்

ஆங்கில படத்திற்காக 50 நாட்கள்..; அமெரிக்கா பறக்கும் ஹாலிவுட் நடிகர் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர்’ என்ற ஆங்கில படத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடித்திருந்தார் தனுஷ்.

கென் ஸ்காட் இயக்கிய இந்த படத்தில் தனுசுடன் பெர்னிக் பிஜோ, பர்கத் அப்டி, எரின் மொராரிட்டி உள்பட பலர் நடித்து இருந்தனர்.

அதே படம் அதன் பின்னர் ‘பக்கிரி’ என்ற பெயரில் தமிழில் வெளியானது.

இதனையடுத்து ஹாலிவுட்டில் அவரின் 2வது படமாக ‘தி க்ரே மேன்’ உருவாகவுள்ளது.

ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ராயன் காஸ்லிங் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், இப்பட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் பங்கேற்க தனுஷ் நாளை (பிப்ரவரி 10) அமெரிக்கா செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘தி க்ரே மேன்’ பட படப்பிடிப்பை முடித்துவிட்டு, ‘தனுஷ் 43’ படக்குழுவினரோடு மே மாதத்தில் இணைவார் தனுஷ் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் திரும்பி இந்தியா வருவதற்குள் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ & கர்ணன் படங்கள் ரிலீசானாலும் ஆச்சரியமில்லை.

Exclusive updates on Dhanush’s Hollywood movie

ராஜ்யசபா எம்.பி சீட் கொடுத்தால் ஏதாவது செய்வேன்..; பிரஸ்மீட்டில் சந்தானம் போட்ட சரவெடி

ராஜ்யசபா எம்.பி சீட் கொடுத்தால் ஏதாவது செய்வேன்..; பிரஸ்மீட்டில் சந்தானம் போட்ட சரவெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parris Jeyaraj‘ஏ 1’ படத்தின் மூலம் நம்மை சிரிப்பு மழையில் நனைய வைத்த கூட்டணி, மீண்டும் பிப்ரவரி 12-ம் தேதி நம்மை நனைய வைக்கவுள்ளது.

இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது,…

“தயாரிப்பாளர் குமாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம், அப்போது போகலாம் என்று காத்திருந்தோம்.

ஆனால், அனைத்தையும் நல்லபடியாக முடித்து தயாரானதற்கு தயாரிப்பாளர் குமார் தான் காரணம். எங்கு செலவு செய்ய வேண்டும், எங்கு கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

ஏ 1 படமே ஜாலியாக பண்ண வேண்டும் என்ற மூடில் தான் இயக்குநர் ஜான்சனுடன் பணிபுரிந்தேன். அந்தப் படம் ஹிட்டானது. அடுத்து என்ன என்று நிறைய கதைகள் யோசித்தோம். அடுத்து நம்மளிடம் காமெடியைத் தான் எதிர்பார்ப்பார்கள் என்று இயக்குநர் ஜான்சனிடம் பேசி இந்தக் கதையை முடிவு செய்தோம்.

இது ரொம்ப தனித்துவமான கதை. காமெடி அருமையாக வந்திருக்கிறது. எனக்காக அவருடைய அணியுடன் உட்கார்ந்து காமெடிக்காக உழைத்துள்ளார் இயக்குநர் ஜான்சன்.

நிறைய விஷயங்கள் எழுதி எழுதி இந்தப் படத்தின் வசனங்களை இறுதிச் செய்தார். ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் பார்ப்பதற்கு தான் அமைதியாக இருப்பார். அவரோடு இப்போது தான் முதலில் பணிபுரிகிறேன்.

சம்சா பாடலை முழுக்க பேருந்துக்குள்ளே எடுத்துள்ளோம். சாண்டி தான் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் நடனம் அமைத்துள்ளார்.

அந்தப் பாடலுக்கு ஆர்தர் வில்சன் சாருடைய உழைப்பு மிகவும் அபாரமானது.

குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் அருமையான ஓளிப்பதிவு செய்துக் கொடுத்துள்ளார், அதற்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சார் தான். ஏ 1 படம் ஹிட்டு அவரும் ஒரு முக்கியமான காரணம். இந்தப் படத்தில் அனைத்துமே கானா பாடல்கள் தான். ரொம்பவே ரசித்து இசையமைத்தார்.

அவருடைய உழைப்புக்கு மிகப்பெரிய நன்றி. கலை இயக்குநர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் பிரபு திலக் சாருக்கு நன்றி. நல்ல படத்தை வாங்கியுள்ளீர்கள், கண்டிப்பாக மக்கள் ரொம்பவே ரசிப்பார்கள்.

லோக்கலாக கானா பாடிக் கொண்டிருக்கும் ஒருவர் என்று கேரக்டர் பிக்ஸ் பண்ணிட்டோம். அப்போது வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாரிஸ் உள்ளிட்ட ஏரியாக்கள் தான் கானா பாட்டுக்கள் மிகவும் பிரபலம்.

அங்கு தான் ஹீரோ வீடு என்று முடிவு செய்தோம். அப்போது தான் பாரிஸ் ஜெயராஜ் என்று ரைமிங்காக நல்லாயிருக்கு என்று தலைப்பு வைத்தோம். கானா பாடகரைச் சுற்றியே கதை என்பதால், அந்தப் பாடல்களுடன் அமைத்தால் மட்டுமே நம்பகத்தன்மை இருக்கும்.

கானா பாட்டு பாடுபவர் கவிதை நடையுடன் பாடினால் அந்தக் கதாபாத்திரம் ஒட்டாது என்பது தான் காரணம். கானா என்பதே காக்டெய்ல் மாதிரி தான். அனைத்து மொழி வார்த்தைகளும் மிக்ஸ் செய்தது தான். அதற்கு தமிழில் அர்த்தம் சொல்ல முடியாது.

மக்கள் மத்தியில் ஒரு கூட்டணி ஹிட்டாகிவிட்டால், அடுத்து படம் பண்ணும் போது எளிதாக இருக்கும். அதனால் தான் ஏ 1 படத்தில் நடித்த மொட்டை ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேசு உள்ளிட்டோரை இந்தப் படத்திலும் உபயோகப்படுத்தி உள்ளோம். இன்றைக்கு மொட்டை ராஜேந்திரன் ரொம்ப அருமையாக காமெடி பண்ணிட்டு இருக்கார்.

உதயநிதி சார் அரசியலுக்கு போய்விட்டார் என்பதால், நீங்கள் எப்போது என்று கேட்கிறார்கள்.

ராஜ்யசபா எம்.பி சீட் கொடுத்தால் ஏதாவது பண்ணலாம் என்று இருக்கிறேன்.

போன முறையும் இந்த மாதிரி அரசியல் கேள்வியைக் கேட்டு சிக்கலாக்கி விட்டார்கள். பாஜகவில் சேரப் போகிறீர்களா ? என்று தான் பலரும் தொலைபேசியில் கேட்டார்கள்.

உதயநிதி சாருடன் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்தேன். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் பண்ணினேன்.

இப்போதும் படம் மட்டும் தான் பண்ணுவேன். சில ஆக்‌ஷன் படங்களில் நடித்தால், ஏன் ஆக்‌ஷன் படம் காமெடி படம் பண்ணுங்கள் என்கிறீர்கள். காமெடி படம் செய்தால் ஏன் ஆக்‌ஷன் படம் பண்ணுவதில்லை என்கிறார்கள்.

இப்படி பல பேர் குழப்புவதால் தான் சில சமயங்களில் அடுத்து ஆக்‌ஷன் படம் பண்ணலாமா? என்று யோசிப்பதுண்டு. மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன். அதை சரியாக செய்வோம்” என்று பேசினார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது,….

“ஏ1 படம் பண்ணும் போது இயக்குநர் ஜான்சனிடம் ஒரு விஷயத்தை கவனித்தேன். நாம் வடசென்னை திரையில் ஒரு விதமாக பார்த்துள்ளோம். வெகு சில இயக்குநர்கள் அதை ரொம்ப ஜாலியாக காட்டியுள்ளனர்.

அதில் ஜான்சன் மிக முக்கியமானவர். ஜாதிகளை கடந்து காதல், மதங்களை கடந்து நட்பு உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் ரொம்ப சாதாரணமாக சொல்லியிருக்கிறார். அதனால் தான் ஜான்சன் ஒரு ஸ்பெஷல் நண்பர். பாரிஸ் ஜெயராஜ் மூலம் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த ஆல்பம் முழுக்கவே கானா பாடல்கள் தான். நம்மளுடைய நாட்டுப்புற இசை கானா தான். சுமார் 300 ஆண்டுகளாக அதைக் கொண்டாடியிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய இசையை சினிமாவில் கொண்டு வர முடிந்தால் அதைவிட பெரிய விஷயம் எதுவுமே இல்லை.

இந்தப் படத்தின் காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்க தாமதம் ஆனது. ஏனென்றால், காட்சிகளைப் பார்த்து சிரித்துவிடுவேன். ஆகையால் ரொம்ப தாமதமானது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்று பேசினார்.

Santhanam speech at Parrys Jeyaraj press meet

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் விலகல்..?; ‘குக் வித் கோமாளி’ நடிகர் என்ட்ரீ..??

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் விலகல்..?; ‘குக் வித் கோமாளி’ நடிகர் என்ட்ரீ..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cool with comali ashwinவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல சீரியல்களில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பிரபலமான ஒன்று.

இதில் அதிக ரசிகர்களை பெற்ற முல்லை கேரக்டர் நடிகை சித்ரா சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி அருகேயுள்ள நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கதிருடன் ஆடி பாடியதால், சித்ரா & அவரது கணவர் ஹேம்நாத் இடையே பிரச்சனை உருவானதாகவும் அப்போது செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

தற்போது முல்லை கேரக்டரில் காவ்யா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து, கேரக்டர் கதிர் விலக உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

அவருக்கு பதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

தற்போது இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்தது.

மேலும் கதிர் வேடத்தில் நடித்து வரும் குமரனே, தொடர்ந்து நடிப்பார் எனவும் தகவல்கள் உறுதியாக வந்துள்ளன.

Cooku with Comali artist to replace Kathir in pandian stores ?

பாலிவுட் இசைப்பாடகர் Tony Kakkar உருவாக்கிய Booty Shake பாடலில் ஹன்ஷிகா டான்ஸ்

பாலிவுட் இசைப்பாடகர் Tony Kakkar உருவாக்கிய Booty Shake பாடலில் ஹன்ஷிகா டான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Booty Shake (1)இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஷிகா.

அவரது நடிப்பில் 50 வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கியிருக்கும் Booty Shake ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார் ஹன்ஷிகா மோத்வானி.

கக்கார் ( Tony Kakkar ) இசையமைத்து உருவாக்கியுள்ள இப்பாடலை Satti Dhillon இயக்கியுள்ளார்.

இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது….

இசைத் துறையில் அனைவரும் கொண்டாடும், இந்தியா முழுதும் வெறித்தனமான ரசிகர்களை கொண்டிருக்கும் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar )
அவர்கள் உருவாக்கிய பாடலில் நானும் பங்கேற்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

மிகப்பெரும் சாதனைகள் படைத்து வெற்றியின் உச்சத்தில் இருந்தாலும் மிக எளிமையாகவே பழகினார்.

அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமானதாக இருந்தது.

இப்பாடல் உருவாகியுள்ள பெரும் திருப்தியை அளித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் கண்டிப்பாக அவர்களும் கொண்டாடுவார்கள்.

Hansika Motwani and Tony Kakkar joins for Booty Shake

காத்திருக்க வைத்த கமல்..; விலகி நிற்கும் விஜய்.; விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் லோகேஷ்

காத்திருக்க வைத்த கமல்..; விலகி நிற்கும் விஜய்.; விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi (1)விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை முடித்து விட்டு கமல்ஹாசன் தயாரித்து நடிக்கவிருந்த ‘விக்ரம்’ படத்தை இயக்கவிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

ஆனால் காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் ஓய்வில் இருக்கிறார் கமல்.

ஓய்வு முடிந்தாலும் அதன் பின்னர் தேர்தல் வேலைகளில் மூழ்கிவிடுவார் கமல்.

சரி மீண்டும் விஜய் படத்தை இயக்கலாம் என லோகேஷ் தயாராகி வந்தாலும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க செல்லவிருக்கிறார் விஜய்.

எனவே ‘மாஸ்டர்’ வில்லன் பவானியுடன் இணையவிருக்கிறாராம் லோகேஷ்.

மாஸ்டர் படத்தில் ஹீரோவை விட வில்லன் கேரக்டர் பெரியளவில் பேசப்பட்டதால் விஜய்சேதுபதியும் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் இணைய ஆசைப்படுகிறாராம்.

எனவே விரைவில் இவர்கள் இணையும் படம் குறித்து அறிவிப்பு வர வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

இந்த படத்தை குறுகிய காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் படமாக்க லோகேஷ் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi and Lokesh to reunite again?

More Articles
Follows