தமிழ் ராக்கர்ஸ் சிறந்த வேலைக்காரன்; நான் அதிர்ஷ்டக்காரன்… : மோகன்ராஜா

தமிழ் ராக்கர்ஸ் சிறந்த வேலைக்காரன்; நான் அதிர்ஷ்டக்காரன்… : மோகன்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mohan Rajaதனி ஒருவன் படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் மோகன்ராஜா.

அவர் பேசியதாவது…

“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பேன். எனக்கு கிடைத்த பெற்றோர் முதல் அனைவரும் அதற்கு காரணம்.

என் வாழ்க்கையில் நான் எப்போதும் கஷ்டப்பட்டது இல்லை.

சொல்லப்போனால் நான் பிறக்கும்போதே ஒரு டைரக்டராகத்தான் பிறந்தேன்.

சினிமாவில் எனக்கு பின்னணி இருந்தது. எனவே அதிக பொறுப்பு இருந்தது. எந்த இயக்குனரும் முதலில் தனக்கு பிடித்த கதையை படமாக்க முடிவதில்லை.

தயாரிப்பாளருக்கு அந்த கதை பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. எனவே தயாரிப்பாளருக்காக படம் இயக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவேதான் நானும் முதலில் சில ரீமேக் படங்களை இயக்கினேன். சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களுக்கு நல்ல தாக்கம் ஏற்பட்டது.

சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. என்னை நான் நிலைநிறுத்திக் கொள்ள சில படங்கள் தேவைப்பட்டது.

அதன்பின்னரே தன் ஒருவன் படம் போன்ற சமூக பிரச்சினைகளை சொல்ல முடிந்தது.

இன்று அருவி படம் ஒருவாரம்தான் ஓடும். உடனே பார்த்து விடுங்கள் என்கிறார் தயாரிப்பாளர்.

சினிமா அப்படி ஆகிவிட்டது. வேலைக்க்காரன் படமும் அப்படிதான். 2, 3 வாரங்கள் ஓடும்.

ஏனென்றால் திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் ஆகியவை உள்ளது.

என்னை பொறுத்தவரை தமிழ் ராக்கர்ஸ் சிறந்த மூளைக்காரன். அவர் மிகச்சிறந்த வேலைக்காரன் என்பேன்.

இரவு பகல் பாராமல் வேர்வை சிந்தி அந்த படத்தை வெளியிடுகிறார்கள்.

ஆனால் அவர் சிறந்த வேலைக்காரன் என்றால், எங்கள் படத்தை தாமதாக இணையத்தில் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” என்று பேசினார்.

சிவகார்த்திகேயன் இல்லாமல் வேலைக்காரன் இல்லை : மோகன்ராஜா

சிவகார்த்திகேயன் இல்லாமல் வேலைக்காரன் இல்லை : மோகன்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohan rajaசிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. எனவே பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இயக்குநர் மோகன்ராஜா.

அவர் பேசியதாவது….

ஒரு காலத்தில் ரீமேக் படங்களை இயக்குவதால் என்னை ரீமேக் ராஜா என்றார்கள். ஆனால் அதே மீடியா என்னுடைய தனி ஒருவன் படம் வந்தபோது கொண்டாடியது.

படத்தின் முதல்நாளே நீங்கள் கொடுத்த வரவேற்புதான் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

என்னை பார்த்த பொதுமக்கள் பலரும் பாராட்டி பேசும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

நாளை மறுநாள் வேலைக்காரன் படம் ரிலீஸ். படம் வந்தபிறகும் உங்களை சந்திக்கிறேன்.

அப்படத்தில் சமூக பிரச்சினைகளை சொல்லியிருக்கிறேன். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் இல்லையென்றால் இந்த படம் வந்திருக்காது.” என்றார்.

விஜய் 62 அப்டேட்ஸ்: மீண்டும் கீர்த்தி சுரேஷ்; மீண்டும் விவசாயம்

விஜய் 62 அப்டேட்ஸ்: மீண்டும் கீர்த்தி சுரேஷ்; மீண்டும் விவசாயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay keerthy sureshமெர்சல் படத்தை தொடர்ந்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இதற்கு முன் இவர்கள் இணைந்த கத்தி, துப்பாக்கி ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது.

எனவே இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ்க்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பே விஜய்யுடன் பைரவா படத்தில் கீர்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் கதை விவசாயம் சார்ந்த கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்பே கத்தி படத்தில் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை பற்றி தெரிவித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

படத்தில் மற்றொரு நாயகியும் இருப்பார் என சொல்லப்படுகிறது.

சிறந்த மனிதர் சிம்பு; சிறந்த நடிகர் தனுஷ்.. ஓவியா ஓபன் டாக்

சிறந்த மனிதர் சிம்பு; சிறந்த நடிகர் தனுஷ்.. ஓவியா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya dhanush and simbuபிக்பாஸ் மூலம் லட்சணக்கான ரசிகர்கள் சம்பாதித்தவர் ஓவியா.

இவர் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

இனி அடிக்கடி இதுபோல் பேச இருப்பதாகவும் ஒரு வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்க ஒருவர் சிம்பு தனுஷ் பற்றி கேட்டுள்ளார்.

சிம்புவை ஒரு சிறந்த மனிராகவும், தனுஷை ஒரு சிறந்த நடிகராகவும் எனக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பா.விஜய்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பா.விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pa vijayபிரபல பாடலாசிரியர் பா.விஜய், அண்மைகாலமாக படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’, ‘ஸ்ட்ராபெரி’ ‘நைய்யப்புடை’ முதலான படங்களில் நடித்திருந்தார்.

தற்போது அவர் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆருத்ரா’ என்று பெயர் சூட்டியுள்ளார்.

இதன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும், ‘VIL MAKERS PRODUCTIONS’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை வித்யாசாகர்.

பி.எல்.சஞ்சய் ஒளிப்பதி செய்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

விரைவில் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவுள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் பிரேமம் நாயகி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் பிரேமம் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sai pallaviவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை ஜோக்கர், தீரன், அருவி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்பட நாயகியாக பிரேம்ம் புகழ் மலர் டீச்சர் சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

இத்தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

More Articles
Follows