தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் பட டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு மும்பையில் வெளியாகிறது.
இதற்காக ரஜினி தற்போது சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.
ஒரு பக்கம் தர்பார் பட புரோமோசன் பணிகளில் பிசியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் தலைவர் 168 பட பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறாராம் தலைவர் ரஜினி.
தலைவர் 168 படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இமான் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.
குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்பட பர்ஸ்ட் லுக் விரைவில் டைட்டிலுடன் வெளியாகவுள்ளது.
இதில் வெள்ளை வேஷ்டி சட்டையில் கிராமத்து ஸ்டைலில் ரஜினி இருப்பார் என நம்பலாம்.