ஸ்பெயினில் க்ளைமாக்ஸ் பைட்..; ப்ளைட்டில் பறக்கும் ‘தல’ அஜித்..!

ஸ்பெயினில் க்ளைமாக்ஸ் பைட்..; ப்ளைட்டில் பறக்கும் ‘தல’ அஜித்..!

Valimai (1)அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’.

போனிகபூர் தயாரிக்க இதில் அஜித்துடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா என பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வலிமை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், ஸ்பெயினில் ஒரு ஸ்டைலிஷான பைக்கை வைத்து நடக்கும் சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த காட்சி தான் அப்படத்தின் க்ளைமாக்ஸ் பைட் என சொல்லப்படுகிறது.

எனவே அஜித்துடன் ‘வலிமை’ படக்குழு விரைவில் ஸ்பெயின் பறக்கிறது.

Thala Ajith to shoot high octane bike chase sequence in Spain for Valimai climax

ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள்

ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள்

Arun Vijayஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள்.

இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது…

மிக சமீபத்தில் தான் அருண் விஜய் அவர்கள் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக நடிப்பது குறித்து பெருமையாக பகிர்ந்திருந்தேன் இப்போது இதை சொன்னால் மிகவும் வழக்கமான ஒரு செய்தியாகிவிடக்கூடும். ஆனால் தமிழ் சினிமாவில் பல சாதானைகள் படைத்திருக்கும் மூத்த நடிகர் விஜய குமார் அவர்கள் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதிலும் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் மூலம் இணைவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் பங்குபெற சம்மதித்தற்கு, மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அருண் விஜய் போன்று விஜய் குமார் அவர்களுக்கு கதை சொல்வது அத்தனை எளிதாக இல்லை. அவரது கதாப்பாத்திரம் குறித்தும் படத்தில் அதற்குரிய முக்கியத்துவம் குறித்தும் அவருக்கு விளக்கி கூறினேன். இது குடும்ப படம் என்பதாலும் உணர்வுபூர்வமான நிறைய சம்பவங்கள் அவரது கதாப்பத்திரத்தை சுற்றி நடப்பதாலும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படம் மிக அழகாக உருவாகி வருகிறது.

குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32 வது படமாகும். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார். சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை மைக்கேல் செய்கிறார். உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.

Three generations of actors from the same family sharing the screen space together

சூர்யாவுக்கு கொரோனா..; இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.. மக்களுக்கு அட்வைஸ்

சூர்யாவுக்கு கொரோனா..; இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.. மக்களுக்கு அட்வைஸ்

suriyaகொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்…

Suriya tests corona positive; Shares emotional note with this message

பாலாவின் உதவியாளர் வள்ளுவன் இயக்கிய ‘ஓகே கூகுள்’

பாலாவின் உதவியாளர் வள்ளுவன் இயக்கிய ‘ஓகே கூகுள்’

OK Googleவள்ளுவன் பிரபல எடிட்டர் லெனினிடம் உதவியாளராக இருந்து எடிட்டிங் தொழில்நுட்பத்தையும் பாலாவிடம் உதவியாளராக இருந்து இயக்குநர் பயிற்சியையும் பெற்றவர்.

வள்ளுவனின் அண்ணன் தியாகராஜன் (நாடக கலைஞர் – திணை நிலவாசிகள்) ‘தமிழ் ஸ்டுடியோ’வின் தன்னார்வலராக இருந்துள்ளார். ஒருமுறை பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு ஒரு கண்காட்சி நடத்தினார்கள்.

அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவருக்குப் பதிலாக வள்ளுவன் அந்தப் பணியை மேற்கொள்ள அந்த விழாவுக்கு வந்த எடிட்டர் லெனின் இவரைப் பற்றி விசாரிக்கவும் மறைந்திருந்த சினிமா ஆசை வெளிப்பட்டு அவரது உதவியாளராகியிருக்கிறார்.

பின்னர் எடிட்டர் கிஷோர், ஜி. சசிகுமார் , எல்.வி. கே. தாஸ் ஆகியோருடன் எடிட்டிங் துறை சார்ந்த நட்பான அனுபவங்கள். அவர்கள் மூலம் கிடைத்த நட்பில் பாலாவிடம் இணைந்திருக்கிறார் .

உதவி எடிட்டராக இருந்த போது பாலாவின் படப்பிடிப்பிற்குப் போய் பார்த்தபோது தான் இயக்குநரின் ஆளுமை மீது இவருக்கு காதல் வந்திருக்கிறது . அதன்பின் இயக்குநர் கனவு தீவிரமாகி இருக்கிறது . ஒருவழியாக பாலாவிடம் உதவி இயக்குநராகவும் சேர்ந்து விட்டார்.

பாலாவிடம் இயக்கம் பற்றிய அனுபவங்களைக் கற்றார்.
படித்துவிட்டு கணினி மென்பொருள் துறையில் வேலை பார்த்தவர் இப்படி மெல்ல மெல்ல நகர்ந்து சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார்.

தனது இயக்குநர் கனவை நோக்கிச் செல்லும் முதல்படியாக ‘ஓகே கூகுள் ‘ என்கிற ஒரு ஏழு நிமிடக்குறும்படத்தை இயக்கியிருக்கிறார் . இது ஒரு அடல்ட் காமெடி படமாகும்.

படத்தில் நாயகனுக்கு கள்ளச்சந்தையில் ஒரு மர்மமான மொபைல் போன் கிடைக்கிறது. அதிலுள்ள அப்ளிகேஷன்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது அவனது வாழ்க்கையே திசை மாறுகிறது . முடிவு என்ன என்பதுதான் கதை.

இதில் பேராசிரியரும் அறிவழகன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். சன் டிவி தொடர்களில் வில்லியாக நடிக்கும் காயத்ரி கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த 7 நிமிடக் குறும்படம் ஒரே நாளில் படமானது . ஆனால் இதற்காக எடிட்டிங் செய்ய ஏழு நாட்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். பாலாவின் சீடர் ஆயிற்றே.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு வினோத், இசை- கோகுல் கிருஷ்ணன் ,எடிட்டிங் -அமர்நாத். தயாரிப்பு எஸ். மலர்விழி, ஜி. பூரணி, ஜி.கே. ரம்யா, சி.வி .பச்சையா பிள்ளை, ஐ. கார்த்திக்.

தனது திரைப்பட உருவாக்கம் திறமைக்கு ஒரு மாதிரிக்காக இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் . மூன்று திரைக் கதைகள் தயாராக வைத்திருக்கிறார். நல் வாய்ப்புக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறார். பாலாவின் மாணவர் நிச்சயம் ஏமாற்ற மாட்டார் என்று நம்பலாம்..

Watch Interesting & Trending #OKGoogle Tamil Science Fiction Romantic Adults Short film

➡https://youtu.be/0SztCFsiqus

Director Bala assistant Valluvan’s short film titled OK Google

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு..; பிரபலங்கள் நேரில் வாழ்த்து

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு..; பிரபலங்கள் நேரில் வாழ்த்து

தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு..; பிரபலங்கள் நேரில் வாழ்த்து

யா யா மற்றும் பக்ரீத் படங்களை தயாரித்தவர் எம்.எஸ். முருகராஜ். இவரின் மகள் டாக்டர் லாவண்யா முருகராஜ், டாக்டர் ரூபன் எழுமலை அவர்களின் திருமண வரவேற்பு செங்கல்பட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் இயக்குனர் ஹரி அவரது மனைவி ப்ரிதா, நடிகர்கள் பொன்வண்ணன், ரவி மரியா, ஜெரால்ட், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ரெட் ஜெயன்ட் மூவீஸ் செண்பகமூர்த்தி, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்த கோபால், பூச்சி முருகன், திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், தங்கராஜ், வின்னர் ராமசந்திரன், கலை இயக்குனர் கதிர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Producer Murugaraj daughter marriage

பிக்பாஸ் முடிந்த பிறகும் நட்பை வளர்க்கும் பாலாஜி & ஷிவானி..? வைரலாகும் போட்டோஸ்

பிக்பாஸ் முடிந்த பிறகும் நட்பை வளர்க்கும் பாலாஜி & ஷிவானி..? வைரலாகும் போட்டோஸ்

பிக்பாஸ் 4 சீசன் முடிந்து 2 வாரங்களுக்கு மேலாகிறது.

ஆனாலும் பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை விஜய் டிவி நடத்துகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே பாலாஜி & ஷிவானி நட்பில் விரிசல் ஏற்பட்டது.

நிகழ்ச்சி இறுதி நாட்களில் ஷிவானி வீட்டுக்கு வந்தபோது கூட பாலாஜியிடம் சரியாக பேசவில்லை.

இந்த நிலையில் பாலாஜி , ரம்யா பாண்டியன், சம்யுக்தா மற்றும் ஆஜித் என ஒட்டுமொத்த போஸ் கேங்குடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன் முறையாக ஷேர் செய்துள்ளார் ஷிவானி நாராயணன்.

“பிரண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு” என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

அந்த போஸ்ட்டை லைக் செய்துள்ளார் ரம்யா.

இதன் மூலம் பாலாவும் தானும் வெளியேவும் நண்பர்களாகவே தொடர்வோம்” என சொல்லாமல் சொல்கிறாரோ ஷிவானி..??

Bigg Boss Balaji and Shivani recent pic goes viral

More Articles
Follows