முதன்முறையாக ரஜினிகாந்துடன் டூயட் பாட ரெடியாகும் தமன்னா

முதன்முறையாக ரஜினிகாந்துடன் டூயட் பாட ரெடியாகும் தமன்னா

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார் என பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளப் போகிறாராம்.

இந்த நிலையில் இதில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இது உறுதியானால் ரஜினியுடன் தமன்னா இணைவது முதன்முறையாகும்.

விஜய் அஜித் விக்ரம் சூர்யா தனுஷ் விஷால் ஆகிய முன்னணி நடிகர்களுடன் தமன்னா நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Tamannah to play female lead in Jailer ?

பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி – கமல் – அமிதாப்.; எப்போ.? எங்கே.?

பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி – கமல் – அமிதாப்.; எப்போ.? எங்கே.?

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.

தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பான் இந்தியா படங்களுக்கு சவால் விடும் வகையில் தமிழ் சினிமாவில் மிகப்பிரமாண்டமாக பான் இந்தியா படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல்பாகம் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீசாகிறது.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஜெயராம் விக்ரம் பிரபு பார்த்திபன் சரத்குமார் ஆதேஷ் பாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மேலும் பொன்னி நதி என்ற சிங்கிள் ட்ராக் பாடலும் வெளியானது இதற்கும் ஒரு விழா நடத்தியது படக்குழு.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செனரனையில் பிரம்மாண்டமாக செப்டம்பர் 6-ல் நடைபெறுகிறதாம்.

இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொள்வார்கள் என தெரிய வந்துள்ளது.

Rajini – Kamal – Amitabh at Ponniyin Selvan’s Festival; When? Where?

இரட்டை வேடங்களில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும்.; நாயகியாக ரிது வர்மா!

இரட்டை வேடங்களில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும்.; நாயகியாக ரிது வர்மா!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், ’மார்க் ஆண்டனி’.

எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இதில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘ பட நாயகி ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாடலும் ஆக்‌ஷனும் சேர்ந்த காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர்.

நேற்று நடந்த படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்ற போது நடிகர் விஷாலுக்கு அவரது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இப்போது ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘லத்தி’ படத்தின் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பின்போதும் நடிகர் விஷால் சில முறை காயமடைந்திருந்தார்.

Vishal and SJ Suriya in dual roles. Ritu Varma as the heroine!

விருமனில் மதுர வீரன் அழகுல’ பாடலை பாடிய ஷங்கர் மகள்.; பாடகி ராஜலட்சுமி தந்த விளக்கம் இதோ…

விருமனில் மதுர வீரன் அழகுல’ பாடலை பாடிய ஷங்கர் மகள்.; பாடகி ராஜலட்சுமி தந்த விளக்கம் இதோ…

சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘விருமன்’.

இதில் அதிதி சங்கர், சூரி, மனோஜ் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிக்க யுவன் இணையமைத்துள்ளார்.

இப்படம் நாளை மறுநாள் ஆகஸ்ட் 12-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘மதுர வீரன் அழகுல’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் – அதிதி ஷங்கர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

இந்த பாடலை முதலில் பாடகி ராஜலட்சுமி பாடினார். ஆனால், அதிதி குரலில் தற்போது இப்பாடல் வெளியானதால் ராஜலட்சுமியை நீக்கிவிட்டு ஷங்கர் மகள் அதிதியைப் பாட வைத்துவிட்டார்கள் என சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், ராஜலட்சுமி அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

“இதில் எந்த வருத்தமும் கிடையாது. அதிதி நன்றாகவே பாடியுள்ளார். எனது குரல் செட் ஆகாமல் இருந்திருக்கலாம். அதற்காக கூட அதிதியை மாற்றி பாட வைத்திருக்கலாம்.

விருமன் இசை விழாவில் கூட அதிதி பாடியது நன்றாகவே இருந்தது.” என ராஜலட்சுமி விளக்கம் அளித்து பேசியுள்ளார்.

விருமன்

Singer Rajalakshmi opens up about Viruman song controversy

Boycott LaalSinghChaddha : தூங்கவே முடியல… வருத்தம் தெரிவித்தார் அமீர்கான்

Boycott LaalSinghChaddha : தூங்கவே முடியல… வருத்தம் தெரிவித்தார் அமீர்கான்

7 வருடங்களுக்கு முன்பு ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது” என பேசியிருந்தார் நடிகர் அமீர்கான். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே ஒவ்வொரு முறையும் ஆமீர்கானின் படங்கள் ரிலீசாகும்போது BOYCOTT (MOVIE NAME) என்ற வாசகங்கள் டிரெண்ட் ஆகும்.

தற்போது நாளை அமீர்கான் நடிப்பில் வெளியாக உள்ள ‘லால் சிங் சத்தா’ படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது.

அதன்படி சமூக வலைதளங்களில் boycott laal singh chaddha) ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

இது குறித்து அமீர்கான் விளக்கம் அளித்து இன்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த பட ப்ரமோஷனில்…

”நான் யாரையாவது, காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் படத்தை யாராவது பார்க்க விரும்பவில்லை என்றால், அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறேன்.

இந்தப் படத்தில் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது. படம் நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும்’.்

நான் தூங்கி 2 நாட்கள் ஆகிவிட்டது. நான் காமெடிக்காக சொல்லவில்லை.

என்னால் தூங்க முடியல.. நான் லால் சிங் சத்தா படத்தை பற்றியே சிந்திக்கிறேன்.

ஆகஸ்ட் 11-க்கு பிறகுதான் என்னால் தூங்க முடியும் என நினைக்கிறேன” என்றார்.

லால் சிங் சத்தா

Bollywood Super Star Aamir Khan issues apology ahead of ‘Laal Singh Chaddha’ release

சசிகுமார் பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த கமல்ஹாசன் – உதயநிதி கூட்டணி

சசிகுமார் பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த கமல்ஹாசன் – உதயநிதி கூட்டணி

கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி.. அரசியல் பிரச்சாரம் என பிஸியாக இருந்த கமல்ஹாசன் தற்போது ‘விக்ரம்’ என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

எனவே தனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார்.

ஒரு பக்கம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பட பணிகளில் பிஸியாக உள்ளார் கமல்ஹாசன்.

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ‘ரங்கூன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இதன் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 54வது படத்தில் உதயநிதி நடிக்கிறார் என்ற தகவலை சில நாட்களுக்கு முன் அறிவித்தனர்.

ஆனால் இயக்குனர் யார்.? இசையமைப்பாளர் யார்.? நாயகி யார்.? என்பதை அறிவிக்கவில்லை

இந்த நிலையில் இந்த படத்தை பிரசாந்த் முருகேசன் இயக்குவதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கெனவே சசிகுமார் நிகிலா வேல. ராமமூர்த்தி ஆகியோர் நடித்த ‘கிடாரி’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் முருகேசன்

Kidaari director to direct Udhayanidhi Stalin’s next film

More Articles
Follows