OFFICIAL முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணையும் தமன்னா

OFFICIAL முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணையும் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் மூன்று சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த் மோகன்லால் சிவராஜ்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ”ஜெயிலர்’.

நெல்சன் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் சுனில், ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தமன்னா ரஜினி உடன் இணைவார் என நாம் FILMISTREET தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் தமன்னா இணைவதாக அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினி உடன் தமன்னா இணைவது இதுதான் முறை முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamannaah is on board for Rajinikanth’s jailer

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் விரைவில் ரிலீஸ்…

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் விரைவில் ரிலீஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

இப்படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்க, கன்னட நடிகர் தனஞ்சயா மற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் மஹதிர் ஸ்வர சாகரும் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தை மகாலட்சுமி ஆர்ட்ஸ் தயாரிக்க, தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் சாகர், படத்தொகுப்பு கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்.

இறுதியாக இப்படம் விரைவில் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

Vikram Prabhu’s ‘Paayum Oli Nee Yenakku’ is released soon

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளிய ஷாருக்கான்

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளிய ஷாருக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களான டாம் குரூஸ் மற்றும் ஜாக்கி சான் ஆகியோரை ஷாருக்கான் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

பாலிவுட் பாட்ஷா என்று போற்றப்படும் அவரது நிகர மதிப்பு சுமார் 770 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக புள்ளிவிவரங்கள் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நடிப்பு மட்டுமின்றி, திரைப்பட தயாரிப்பு, விஎஃப்எக்ஸ் மற்றும் கேம்ப்ளே உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.

Shah Rukh Khan overtakes top Hollywood superstars in world’s richest list

ஜஸ்ட் ரூ 20000 கூட செலுத்தாத ஐஸ்வர்யா ராய்..; வருவாய்த்துறை நோட்டீஸ்

ஜஸ்ட் ரூ 20000 கூட செலுத்தாத ஐஸ்வர்யா ராய்..; வருவாய்த்துறை நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்று இருந்தார்.

தற்போது அஜித்துக்கு ஜோடியாக ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய் பெயரில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது.

இந்த நிலத்திற்கு கடந்த ஓராண்டாக அவர் நில வரி செலுத்தவில்லை என கூறப்படுகிது.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது நாசிக் மாவட்ட வருவாய்த்துறை.

அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் Rs 21,960 தொகையை நில வரியாக செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என (under section 174 of the Maharashtra Land Revenue Act, 1966) சட்டப்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Aishwarya Rai got notice for non payment of land tax in Nashik

‘ஜெயிலர்’ பட பாணியில் உருவாகும் மணிரத்னம் – கமல் கூட்டணி படம்.?!

‘ஜெயிலர்’ பட பாணியில் உருவாகும் மணிரத்னம் – கமல் கூட்டணி படம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘ஜெயிலர்’.

இந்த படத்தில் ரஜினியுடன் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் நடித்து வருகின்றனர்.

ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. மற்றொருவர் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்.. மேலும் முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடித்து வருகிறார்.

இது போன்றே இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பாணியில் கமல்ஹாசனின் 234 வது படமும் உருவாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை மணிரத்னம் இயக்கி கமல்ஹாசனுடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் கமலுடன் ஹிந்தி மலையாளம் தெலுங்கு கன்னட சினிமாக்களில் உள்ள சூப்பர் ஸ்டார்கள் முக்கிய வேடத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒருவேளை தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கமலின் ‘ஹேராம்’ படத்தில் ஷாருக்கானும் ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் மோகன்லாலும் நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

A Mani Ratnam-Kamal collaboration film in the style of ‘Jailer’.?

இந்த டாப் நடிகருக்கு எதிராக முதல் முறையாக வில்லனாக நடிக்கும் சந்தானம்?

இந்த டாப் நடிகருக்கு எதிராக முதல் முறையாக வில்லனாக நடிக்கும் சந்தானம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. இப்படத்தை தயாரித்து வரும் லைகா சந்தானத்துக்கு வழக்கமான சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது.

ஏகே 62 படத்தில் சந்தானம் காமெடி மற்றும் நெகட்டிவ் சாயல் கலந்த கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் சிவனின் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் பார்த்திபன் நடித்த மாதிரியே இந்த கதாபாத்திரமும் இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Santhanam to play the villain against this megastar?

More Articles
Follows