மாலை 6 மணிக்கு வேலைக்காரன் தரும் இன்ப அதிர்ச்சி

மாலை 6 மணிக்கு வேலைக்காரன் தரும் இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சிநேகா, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் வேலைக்காரன்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கியமான அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Surprise announcement from Velaikkaran team today 6pm

சிவாஜிக்கு இனியொரு சிலை செய்வோம்; எந்நாளும் காப்போம்… கமல்

சிவாஜிக்கு இனியொரு சிலை செய்வோம்; எந்நாளும் காப்போம்… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaji statue marinaநடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவையொட்டி அவருக்கு சென்னையில் உள்ள முக்கிய சாலையில் திமுக ஆட்சியின் போது சிலை வைக்கப்பட்டது.

ஆனால் இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொதுநலன் வழக்கு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து சாலையில் உள்ள சிலையை அகற்றி, சிவாஜி மணி மண்டபத்தில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

எனவே கோர்ட் உத்தரவுபடி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டது.

இந்த செயலை சிவாஜி ரசிகர்கள் மற்றும் முக.ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட சில பிரபலங்கள் கண்டித்தனர்.

இதுகுறித்து கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால் என் அப்பா.

சிவாஜி உயிரோடு இருந்தபோதே கமலை தன் மூத்த பிள்ளை என்று கூறியதும், பிரபுவும், ராம்குமாரும் கமலை எங்கள் அண்ணன் கூறிவருவதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

மெரினாவில் சிவாஜி சிலை அகற்றப்பட்ட பிறகு அந்த இடத்தில் சில சிவாஜி ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal said another Sivaji Statue should be created

sivaji fans milk abishegam

ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்க சிம்பு திட்டம்

ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்க சிம்பு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu aka strகடந்த 5 நாட்களாக சிம்பு தன் புதிய படம் பற்றிய தகவல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.

இப்படத்தில் பாடல்கள் இல்லை; இடைவேளை இல்லை உள்ளிட்ட புதுமைகளை இதில் புகுத்தவிருக்கிறார்.

மேலும் எவரும் செய்யாத புதிய முயற்சியாக படத்தின் பின்னணி இசை கம்போஸிங்கை முடித்துவிட்டு சூட்டிங்கு செல்லவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படம் பயங்கர திகில் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்களை வைத்து படம் முழுவதும் சீட் நுனியில் ரசிகர்களை உட்காரவைத்து அசத்த போகிறாராம்.

இதில் ஒரு திகில் படம் எனவும் சொல்லப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைக்கிறார்.

Simbu plans his next movie should be with seat edged scenes

பிக்பாஸை தடை செய்யனும்; கமல்-சக்தி மன்னிப்பு கேட்கனும்… கோர்ட்டில் மனு

பிக்பாஸை தடை செய்யனும்; கமல்-சக்தி மன்னிப்பு கேட்கனும்… கோர்ட்டில் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss show should be banned Case filedதமிழில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தினமும் 4 கோடி மக்கள் பார்த்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு புறம் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என புகார் மனுக்கள் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கெட்ட வார்த்தைகள் பேசப்படுவதால் அதை வீட்டில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்பதால் தடை செய்ய வேண்டும் என இசை வேளாளர் சங்கம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் நாதஸ்வரம் வித்வான்களை நடிகர் சக்தி அவமதித்துவிட்டதால், அவரும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Bigg Boss show should be banned Case filed

விவேகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி உறுதியானது

விவேகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதி உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith anirudhநடிகர் அஜித், இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விவேகம்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.

இதில் இடம் பெற்றுள்ள சர்வைவா, தல விடுதலை, காதலாடா ஆகிய 3 பாடல்கள் இதுவரை வெளியாகிவிட்டது.

இந்நிலையில் மற்ற நான்கு பாடல்களை வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

பாடல்கள் பற்றிய முன்னோட்டத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அனிருத்.

Vivegam song preview released and Audio release date confirmed

இதோ அந்த பாடல்கள் குறித்த முன்னோட்டம்….

viveagam 7 songs

தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு; ரூ.15 ஆயிரம் அபராதம்

தனுஷ் கேரவனுக்கு மின்சாரம் திருட்டு; ரூ.15 ஆயிரம் அபராதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush help eb boxகுல தெய்வ வழிபாட்டுக்காக தேனி மாவட்டத்துக்கு சென்றார் நடிகர் தனுஷ்.

தனது பாட்டனார் பிறந்த ஊரான ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரத்தில் இருக்கும் கஸ்தூரி மங்கம்மாள் கோயிலுக்கு வழிபட சென்றிருந்தார்.

தனது மனைவி மற்றும் குழந்தைகள், பெற்றோர்களுடன் வந்த தனுஷின் பயன்பாட்டுக்காக ஏ.சி வசதியுடன் கேரவன் வேன் ஒன்றும் சென்றிருந்தது.

அப்போது கேரவன் பயன்பாட்டிற்காக ஊர் பொது மின் கம்பத்தில் இருந்து அரசின் அனுமதியின்றி மின்சாரம் கொண்டு செல்லப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் அதிகாரிகளுக்கு தெரிவதற்குள் தனுஷ் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இதகுறித்து ஆண்டிபட்டி மின்சார வாரியத்தின் தெற்கு மண்டல உதவி பொறியாளர் ராஜேஷ் கூறியதாவது…

“காலை 8 மணிமுதல் மாலை 3 வரை மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர். கிட்டதட்ட 7 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கேரவன் ஓட்டுநருக்கு ரூ.15,670 அபராதம் விதித்து, மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.” என்றார்.

Illeagal electricity taken for Dhanushs Caravan

caravan dhanush

More Articles
Follows