இயக்குனர் பாலாவுக்கு கைகொடுக்கும் சூர்யா

இயக்குனர் பாலாவுக்கு கைகொடுக்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya will reveal Naachiyaar teaserசூர்யா என்ற ஒரு சாதாரண நடிகரை தன் இயக்கத்தின் மூலம் சிறந்த நடிகர் என பெயர் எடுக்க வைத்தவர் இயக்குனர் பாலா.

நந்தா என்ற பெயரிடப்பட்ட அந்த படத்தை தொடர்ந்து பிதாமகன் என்ற படத்திலும் இவர்கள் இணைந்தனர்.

இன்று சூர்யா முன்னணி நடிகர்கள் வரிசையில் உள்ளார்.

இந்நிலையில் தனக்கு கைகொடுத்த இயக்குனர் பாலாவுக்கு சூர்யா கை கொடுக்க உள்ளார்.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார்.

இப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணியளவில் தன் ட்விட்டர் பக்கத்தில் சூர்யா வெளியிட உள்ளாராம்.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Suriya will reveal Naachiyaar teaser

இரண்டு படங்களில் ஹீரோவாக கமிட்டான பிக்பாஸ் ஆரவ்

இரண்டு படங்களில் ஹீரோவாக கமிட்டான பிக்பாஸ் ஆரவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arav committed in two movies as heroவிஜய் டிவி ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் ஆரவ்.

இதனையடுத்து சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அவரே தெரிவித்தார்.

இதனையடுத்து அடுத்த படத்தில் ஆரவ் கமிட்டாகியுள்ளார்.

இயக்குனரும், தயாரிப்பாளருமான சமீர் பரத் ராமின் படத்தில்தான் ஆரவ் நாயகனாகவும் நடிக்கவிருக்கிறாராம்.

காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் குறும்படமான மீண்டும் ஒரு புன்னகையை தான் சமீர் முழு நீள படமாக இயக்குகிறார்.

அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள இப்படத்தில் ஆரவ்வுக்கு இரண்டு ஜோடிகள் என கூறப்படுகிறது.

Arav committed in two movies as hero

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் புதிய படங்கள்

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் புதிய படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu bikeசிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இப்படத்திற்காக தனது உடல் எடையை கிட்டதட்ட 100 கிலோ வரை ஏற்றியிருந்தார்.

இதனையடுத்து ஒரு ஹாலிவுட் படத்தை தயாரித்து இயக்கி நடிப்பதாக சிம்பு அறிவித்தார்.

இதன்பின்னர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுதவிர இவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியாகமால் இருந்து வந்தன.

இந்நிலையில் சிம்பு தன் உடலை எடையை குறைத்து பைக்கில் உட்கார்ந்து இருக்கும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆனால் இவை சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இந்த படங்களை சிம்பு ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

Simbu new stills goes viral on Social medias

ரஜினி-கமல்-ராஜமௌலி-சிரஞ்சீவி ஆகியோருக்கு ஆந்திர அரசு விருது

ரஜினி-கமல்-ராஜமௌலி-சிரஞ்சீவி ஆகியோருக்கு ஆந்திர அரசு விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamal Rajamouli Chiranjeevi selected for Andhra Govt awardஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி – சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோரின் பெயர்களில் திரைத் துறையினருக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படாத நிலையில், தற்போது அந்த மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளனர்.

அதாவது 2014, 2015 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை இன்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

விருதுப் பட்டியல்:
2014 ஆண்டுக்கான விருதுகள்

என்டிஆர் விருது – கமல்ஹாசன்
பிஎன் ரெட்டி விருது – எஸ்எஸ் ராஜமௌலி
நாகிரெட்டி – சக்ரபாணி – நாராயண மூர்த்தி
ரகுபதி வெங்கய்யா – கிருஷ்ணம் ராஜு நடுவர்
சிறப்பு விருது – சித்தால அசோக் தேஜா

2015 ஆண்டுக்கான விருதுகள்

என்டிஆர் விருது – கே ராகவேந்தர் ராவ்
பிஎன் ரெட்டி விருது – திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்
நாகிரெட்டி – சக்ரபாணி – கீரவாணி
ரகுபதி வெங்கய்யா – ஈஸ்வர்
நடுவர் சிறப்பு விருது – பிசி ரெட்டி

2016 ஆண்டுக்கான விருதுகள்

என்டிஆர் விருது – ரஜினிகாந்த்
பிஎன் ரெட்டி விருது – போயபட்டி சீனிவாஸ்
நாகிரெட்டி – சக்ரபாணி – கேஎஸ் ராமராவ்
ரகுபதி வெங்கய்யா – சிரஞ்சீவி
நடுவர் சிறப்பு விருது – பரிச்சூரி பிரதர்ஸ்

Rajini Kamal Rajamouli Chiranjeevi selected for Andhra Govt award

வடிவேலு செய்யும் இம்சையால் தள்ளிப் போகும் 24ஆம் புலிகேசி..?

வடிவேலு செய்யும் இம்சையால் தள்ளிப் போகும் 24ஆம் புலிகேசி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Imsai Arasan 23rd Pulikesi shooting postponed due to Vadivelu costume issueசிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு, நாசர், இளவரசு, மனோரமா உள்ளிட்டோர் நடித்த படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’.

இயக்குனர் ஷங்கர் தயாரித்த இப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2ஆம் பாகத்தை தற்போது ஷங்கர் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு இம்மை அரசன் 24ஆம் புலிகேசி என்று பெயரிட்டுள்ளனர்.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியதை அடுத்து பர்ஸ்ட் லுக் வெளியானது.

மேலும் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் நடைபெற்றது.

ஆனால் ஒரு வாரம் ஆன நிலையில், வடிவேலுவின் காஸ்ட்யூம் டிசைனர் மாற்றப்பட்டதால் தற்போது சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

இதனால் வடிவேலுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Imsai Arasan 23rd Pulikesi shooting postponed due to Vadivelu costume issue

சிம்பு ஒருவர்தான் கைவிடாமல் இருந்தார்… பிரபல இசையமைப்பாளர்

சிம்பு ஒருவர்தான் கைவிடாமல் இருந்தார்… பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dharan kumar‘பாரிஜாதம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண்.

அதன்பின்னர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி இணைந்து நடித்த ‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் சிம்பு பற்றி இவர் கூறியுள்ளதாவது-..

“நான் இசையமைத்த என் முதல் படத்திற்கு பிறகு என் பெற்றோர் இறந்துவிட்டனர்.

அப்போது சிலர் உறுதுணையாக நின்றார்கள். அவர்களுக்கு நன்றி.

அதன்பின்னர் சிலர் என்னை விட்டு விலகி சென்றனர்.

ஆனால் இப்போது வரை என்னை கைவிடாமல் சகோதரர் போல இருப்பவர் எஸ்.டி.ஆர். மட்டுமே” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows