‘ஒரு ஒளியால் மற்றொரு ஒளியை ஏற்றும் முயற்சி இது.’ சூர்யா

‘ஒரு ஒளியால் மற்றொரு ஒளியை ஏற்றும் முயற்சி இது.’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Speech at 37th Sri Siva Kumar Educational & Charitable Trust Award Functionப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை கௌரவித்து வருகிறார் நடிகர் சிவகுமார்.

கடந்த 36 வருடங்களாக இந்த சேவையை தனது அறக்கட்டளை மூலம் செய்து வரும் இவர்.

தற்போது சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தனது 37ஆம் ஆண்டிற்கான நிகழ்வை நடத்தியது.

இவ்விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது…

“இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் கல்வி கற்று நல்ல மதிப்பெண்ணை பெற்று இருக்கிறார்கள்.

இவர்களை பாராட்டி கௌரவிக்கும் இந்த விழா ஒரு குடும்ப விழா போன்றது.

அப்பா நடத்திய இந்த நல்ல காரியங்களை பார்க்கும்போது எங்களுக்கும் இதை தொடர ஆசை வந்தது.

1300 க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்லூரிக் கனவை பலரின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம்.

தொழிற்கல்விக்கு முன்னுரிமை தரும் வகையில் கடந்தாண்டு முதல், 40 மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி கொடுக்கிறோம்.

ஒரு ஒளியைக் கொண்டு மற்றொரு ஒளியை ஏற்றும் முயற்சி இது. அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்க வேண்டும்” என்று பேசினார் சூர்யா.

விஜய்-லைகா கூட்டணியில் தெறி இயக்குனர்..!

விஜய்-லைகா கூட்டணியில் தெறி இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atlee May Team Up with Vijay for Vijay61 !அட்லி இயக்கத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

தற்காலிகமாக ‘விஜய் 60’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடக்கிறது.

நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும்போதே தனது அடுத்த படத்தை விஜய் முடிவு செய்துவிடுவார்.

எனவே இவரின் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தொடங்கியுள்ளது.

விஜய் 61 படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக செய்தியை நம் தளத்தில் படித்திருப்பீர்கள்.

இப்படத்தை அட்லி இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் கத்திக்கு பிறகு லைகாவும், தெறிக்கு பிறகு அட்லியும் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி விலகியதால் படையெடுக்கும் சிபிராஜ்-சிவா..!

ரஜினி விலகியதால் படையெடுக்கும் சிபிராஜ்-சிவா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sibiraj and Shiva's Movie to Release on July 1st !ரஜினி நடித்து, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கபாலி வருகிற ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

எனவே இப்படத்தின் வருகையால் பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டன.

ஆனால் தற்போது கபாலி தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், மற்ற படங்கள் வரிசைக் கட்ட ஆரம்பித்து விட்டன.

எனவே அன்றைய தினத்தில் ‘ஜாக்சன் துரை’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பர்மா’ படத்தை தொடர்ந்து தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதனைத் தொடர்ந்து திரைவண்ணன் இயக்கியுள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படமும் ஜூலை-1ல் ரிலீஸ் ஆகிறது.

மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், நைனா சர்வார், சென்ட்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா, ராஜ்கபூர், செல்வபாரதி உட்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

அஜித் சொன்னப்படி காகித கப்பலில் சிவபாலன் அறிமுகம்..!

அஜித் சொன்னப்படி காகித கப்பலில் சிவபாலன் அறிமுகம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivabalan's Kagitha Kappal Movieசிறு சிறு கேரக்டர்களில் நடித்தாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் அப்புக்குட்டி.

‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நாயகனாக நடித்து சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றவர் இவர்.

இதனிடையில் வேதாளம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் இவரது கெட்டப்பை மாற்றி நிறைய புகைப்படங்களை எடுத்தார்.

அப்போது அப்புக்குட்டியின் நிஜப்பெயரான சிவபாலன் என்ற பெயரிலேயே நடிக்க சொன்னார் அஜித்.

அதன்படி தற்போது ‘காகித கப்பல்’ என்ற படத்தில் சிவபாலன் என்ற பெயரில் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக தில்லிஜா என்பவர் நடிக்கிறார்.

இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், பரோட்டா முருகேசன், எலி ராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிரசன்னா இசையமைக்க, வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்.

எஸ்.சிவராமன் இயக்குகும் இப்படத்தை எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல் சார்பில் வி.ஏ.துரை தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

“குப்பை பொறுக்கிற வேலையாக இருந்தாலும், அதை மக்களுக்கு செய்யும் சேவையாகவும் நினைக்கிறான் நாயகன்.

இவரது நல்ல குணத்தை அறிந்த நாயகி இவரையே காதலித்து மணந்து கொள்கிறாள்.

ஆனால் திருமணத்துக்கு பிறகு நாயகிக்கு ஏற்பட்ட ஆசையால் நாயகனின் வாழ்க்கை காகித கப்பலாக மாறுகிறது. அது எப்படி? என்பதை சுவாரஸ்யமாக கூறியிருக்கிறோம்” என்றார்

 

‘நல்லதையே எங்கள் பெற்றோர் செய்து காட்டினார்கள்’ – கார்த்தி!

‘நல்லதையே எங்கள் பெற்றோர் செய்து காட்டினார்கள்’ – கார்த்தி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

37th Sri Siva Kumar Educational Charitable Trust Award Functionப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பாராட்டி தனது அறக்கட்டளை மூலம் கவுரவித்து வருகிறார் சிவகுமார்.

1979 முதல் அதாவது கடந்த 36 வருடங்களாக இந்த சேவையை இவர் செய்து வருகிறார்.

தற்போது சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 37-ஆம் ஆண்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கார்த்தி தொடக்க உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது….

“இதை எங்கள் குடும்ப விழா என்றே சொல்வேன். எங்கள் அப்பாவும் அம்மாவும் அட்வைஸ் மட்டும் செய்யாமல் நல்ல காரியங்களில் ஈடுப்படுவதை எங்கள் கண் முன்னே செய்து காட்டினார்கள்.

நன்றாக படிக்கும் மாணவர்கள் அவர்களின் படிப்பை சமூகத்திற்கு பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசினார்.

‘கபாலி’ இசையை ‘சிவாஜி’ முன்னிலையில் கொண்டாடிய ரசிகர்கள்..!

‘கபாலி’ இசையை ‘சிவாஜி’ முன்னிலையில் கொண்டாடிய ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans celebrate Kabali audio at Woodlandsசூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் பாடல்கள் நேற்று முன்தினம் வெளியானது.

எனவே இதனை கொண்டாடும் வகையில் சென்னையிலுள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் நேற்று திருவிழா களை கட்டியது.

பாலாபிஷேகம், கையில் கற்பூரம் ஏந்தி ஆரத்தி, 1008 தேங்காய்கள் உடைத்தல் என ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சம் இல்லை.

மேலும் இவ்விழாவில் ரஜினி ரசிகர் ஒருவர் கபாலி கெட்டப்பில் வந்திருந்தார். அவரை ஜீனியர் கபாலி என்றே அனைவரும் அழைத்தனர்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘சிவாஜி’ படம் திரையிடப்பட்டது. படம் தொடங்குவதற்கும் முன்பும், இடைவேளையிலும் ‘கபாலி’ படத்தின் டீசர் திரை யிடப்பட்டது.

சைதாப்பேட்டை ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த கொண்டாட்டத்தில் அனைத்து ரசிகர் மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

More Articles
Follows