சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ டப்பிங் அப்டேட்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ டப்பிங் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinis Darbar movie dubbing updatesமுருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் பட சூட்டிங்கை முடித்துவிட்டார் ரஜினிகாந்த்.

லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினி இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் பொங்கல் சமயத்தில் வெளியாகிறது.

இதற்கான டப்பிங் பணிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் வருகிற நவம்பர் 15ம் தேதி முதல் ஒரே கட்டமாக தர்பார் பட டப்பிங்கை பேசி முடிக்க ரஜினி திட்டமிட்டுள்ளாராம்.

Super Star Rajinis Darbar movie dubbing updates

இயக்குனராகி நயன்தாராவுடன் இணையும் ஆர்ஜே. பாலாஜி

இயக்குனராகி நயன்தாராவுடன் இணையும் ஆர்ஜே. பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RJ Balaji and Nayanthara team up for Mookuthi Ammanவேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்த ‛எல்.கே.ஜி’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதனையடுத்து அடுத்த படத்திற்கான கதையை எழுதி வந்தார் ஆர்ஜே. பாலாஜி. இதற்காக இவர் இந்தியன் 2 பட வாய்ப்பை வேண்டாம் என மறுத்திருந்தார்.

தற்போது மீண்டும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நாயகனாக நடிக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.

இந்த படத்தை என்ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.

இதில் ஆர்.ஜே. பாலாஜியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாராம்.

இந்த படத்திற்கு ‛மூக்குத்தி அம்மன்’ என தலைப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு 2020 கோடை விடுமுறையில் வெளியிட உள்ளனர்.

ஏற்கெனவே நயன்தாரா நடித்த ‛நானும் ரவுடி தான்’, ‛வேலைக்காரன்’ படங்களில் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RJ Balaji and Nayanthara team up for Mookuthi Amman

முழுநேர நடிகராக மாறிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

முழுநேர நடிகராக மாறிய தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer J Sathish kumar acting movies news updates‘தரமணி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த ‘பேரன்பு’ படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார்.

தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.

இயக்குநர் நவீன் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான பாத்திரங்களுடன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சிவா தயாரிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்துடன், சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றிலும் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கும் நிலையில், தனக்கு முக்கியத்துவமுள்ள நல்ல வேடங்களை ஏற்று நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஜேஎஸ்கே.

Producer J Sathish kumar acting movies news updates

லேடீ போலீஸை கூட ஆபாசமாக பாக்குறாங்க..; அரீஷ்குமார் ஆதங்கம்

லேடீ போலீஸை கூட ஆபாசமாக பாக்குறாங்க..; அரீஷ்குமார் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arish kumar talks about Women struggles in societyவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது இந்த ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்..

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பெண் காவலர்களை பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் மிக மிக அவசரம் படம் அவற்றில் இருந்து தனித்து நிற்கும் விதமாக வெளியாகியுள்ளது.

அதனால்தான் ரசிகர்களின், குறிப்பாக தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது.

படத்தில் நாயகன் அரீஷ்குமார் இந்த படம் பற்றி கூறும்போது,

“பெண்கள் முன்னேற்றம் பற்றி நிறைய பேசுகிறோம்.

ஆனால் அதை நடைமுறைப்படுத்துகிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

காரணம் மிகக்குறைந்த அளவிலேயே அதற்கான முயற்சிகள் இருக்கின்றன.

பெண்கள் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டே, அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குகிறோம் என்கிற பெயரில், கூடவே சேர்த்து டார்ச்சரையும் அல்லவா கொடுத்து வருகிறோம்..?

அதேபோல பெண்கள் முன்னேற்றம் பற்றி இதுவரை வந்த திரைப்படங்களில் அவர்கள் இப்படி கஷ்டப்பட்டார்கள், இப்படி போராடினார்கள்….வெற்றி பெற்றார்கள் என்றுதான் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் முதன்முதலாக நடைமுறையில் ஒரு பெண் தான் பணிபுரியும் துறையில் எவ்வளவு சிரமப்படுகிறாள் என்பதை இது மிக மிக அவசரம் திரைப்படம் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் போலீசார் அந்த பணியை மேற்கொள்கின்றனர்.

அவ்வளவு ஏன், காக்கி உடையில் இருக்கும் பெண்ணையும் கூட சிலர் ஆபாசமாக பார்க்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

வேலை மீது காட்டும் மரியாதையை வேலை செய்பவர்கள் மீதும் காட்டுங்கள் என இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் எனக்கு ரொம்பவே பிடித்தது.

நாம் நடிக்கிற படம் ஓடுகிறதோ இல்லையோ ஓடுகிற படத்தில் நாம் இருக்க வேண்டும் என்பது என்னுடைய பாலிசி.. அந்த வகையில் இந்த மிக மிக அவசரம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.

Arish kumar talks about Women struggles in society

ரத்தக்கண்ணீர் MR ராதா போல ஆட்டம் போடுறாங்க…. – ‘CM’ பற்றி SAC

ரத்தக்கண்ணீர் MR ராதா போல ஆட்டம் போடுறாங்க…. – ‘CM’ பற்றி SAC

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAC reveals title meaning of Cap Maari and story lineபுரட்சி இயக்குனர் பெயர் எடுத்த எஸ்ஏ. சந்திரசேகர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு கேப்மாரி என பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தலைப்பை சுருக்கமாக CM என்றும் சிலர் அழைக்கிறார்கள்.

இதில் ஜெய், வைபவி, அதுல்யா, சித்தார்த் விபின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த பட டிரைலர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரும்பாலான காட்சிகள் ஆபாசமாக உள்ளது. முத்தக் காட்சிகளும் உள்ளன.

இந்த நிலையில் இந்த படம் பற்றி எஸ்ஏ. சந்திரசேகர் கூறியுள்ளதாவது…

தியேட்டரில் வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. வருபவர்களில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள் தான்.

எனவே அவர்களுக்காக கேப்மாரி என்ற இந்த படத்தை எடுத்தேன்.

இளைஞர்களுக்கு இந்த படம் சில புரிதல்களை ஏற்படுத்தும். ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல இன்றைய இளைஞர்கள் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறார்கள்.

அவர்கள் எல்லை மீறும்போது ஏற்படும் பிரச்சினைகளும் சிக்கல்களுமே கதையாக அமைக்கப்பட்டுள்ளது. அட்வைஸ் சொல்லாமல் சுவாரசியமாக சொல்லி இருக்கிறேன்.

ஒரு இளைஞன் 4 பெண்கள் வாழ்க்கையில் விளையாடுகிறான். அவன் கேரக்டருக்கு இந்த கேப்மாரி டைட்டில் பொருத்தமாக உள்ளது.” என்று விளக்கம் அளித்துள்ளார் எஸ்ஏசி.

SAC reveals title meaning of Cap Maari and story line

அஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’; பிரமிக்க வைக்கும் டிரைலர்

அஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’; பிரமிக்க வைக்கும் டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ashutosh Gowarikers Panipat Trailer is an Absolute Visual Treatசாதனை இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்.

சஞ்சய் தத், கிரிதி சாணன், அர்ஜுன் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘பானிபட்’ வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த டிரைலர் வெளியீட்டுக்கு முன்னதாக, ஊடகவியலாலர்களுக்கென ஒரு நட்பு ரீதியிலான சிறப்பு சந்திப்பை அவர் மும்பையில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பில்,டிரைலரின் சிறப்பு பிரீவ்யூ காட்சி திரையிடப்பட்ட நிலையில், டிரைலர் ஊடகவியலாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.

திரைப்பட குழுவினர் இத்தகைய பாராட்டுகளுக்கிடையே, மூன்று நடிகர்களும் இடம்பெற்ற ஒரு புதிய டிஜிட்டல் போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். டிரைலர் மராட்டிய சாம்ராஜ்யத்தின் காவியக் கதையை விவரிப்பதாக அமைந்திருந்தது. அருமையான பின்னணி இசை, அழகிய பின்னணிகாட்சிகள், ஆடம்பரமான கலை பங்களிப்புகள் என அனைத்தும் ஒரே புள்ளியில் இணைந்து, ரசிப்போர் கண்களுக்கு விருந்தாகிறது.

இந்த படத்தில் அர்ஜுன் ஒரு போர் வீரனாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும், நடித்திருக்க, கிரிதியின் அழகும் அழகிய கதாபாத்திரமும் படத்திற்கு மெருகூட்டுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி, டிரைலரில் இடம்பெற்றுள்ள அதிவீர போர் காட்சிகளை கண்டு மகிழுங்கள்.

http://bit.ly/Panipat_OfficialTrailer

இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் பேசுகையில், ‘ஊடகவியலாளர்களின் பின்னூட்டத்தை கேட்டு, பானிபட் திரைப்படக்குழு மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறது. டிரைலர் வெளியீட்டுக்கு முன்னரே, அவர்களுக்காக ஒரு சிறப்பு டிரைலர் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

அது மிகவும் நேர்மறையான பின்னூட்டத்தை வழங்கியிருக்கிறது. ரசிகர்ளுக்கும் இந்த டிரைலர் பிடிக்கும் என திடமாக நம்புகிறோம். அவர்களது எதிர்பார்ப்புகளை முடிந்த வரையில் நிறைவேற்றியிருப்பதாகவும் நம்புகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் சுனிதா கோவரிகர், “பானிபட் டிரைலருக்கு கிடைத்த வரவேற்ப் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த டிரைலரும், திரைப்படமும் பிடிக்கும் என நம்புகிறோம்.

இத்திரைப்பட குழுவினர் ஒவ்வொருவரும் கடின உழைப்பை தந்திருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றி அவர்களை பெருமகிழ்ச்சி அடையச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.’

ஷிபசிஷ் சர்கார், குழு தலைமை செயல் அதிகாரி – ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் பேசும் போது, ‘இயக்குனர் அஷுதோஷ் மற்றும் அவரது பெரும் இலக்கியப் படைப்பான ‘பானிபட்’ திரைப்படத்துடனும் இணைந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
இத்திரைப்படம் இவ்வுலக வரலாற்றின் மாபெரும் போரை நம் கண்முன் நிறுத்தும். டிரைலர் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், திரைப்படத்திற்கும் அனைத்து தரப்பினரும் ஏகோபித்த வரவேற்பை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.’

ரோஹித் ஷெலட்கர், நிறுவனர், விஷன் வர்ல்ட் பிலிம்ஸ், ‘வரலாறும் திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடித்த உணர்வுப்பூர்வமாக விஷயங்கள். அந்த இரண்டையும் இணைக்கும் வகையில் அமைந்த இத்திரைப்படம் எனக்கு கிடைத்த மகத்தானதொரு வாய்ப்பு.

மராட்டிய சமுதாயத்தை சார்ந்தவனாகிய நான், மராட்டிய புராணக்கதைகளை, அதன் நாயகர்களை அதிகம் விரும்புகிறவன். ‘ஜோதா அக்பர்’, ‘ஸ்வதேஷ்’, ‘லகான்’ உள்ளிட்ட பெரும் காவிய படங்களைத் தந்த மதிப்பிற்குரிய இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் உடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றுவதென்பது எனது மாபெரும் கனவு நனவானயே காட்டுகிறது’ என்றார்.

1761 ஆம் ஆண்டு பின்னணியில் அமைக்கப்பட்ட ‘பானிபட்’ திரைப்படத்தின் கதைகளம் மராட்டிய சாம்ராஜ்யத்தைப் பற்றியது. அச்சமயம் மராட்டிய சாம்ராஜ்யம் தனது உச்சநிலையை எட்டி இருந்தது.

ஒரு படையெடுப்பாளரின் கவனத்தை ஈர்க்காத வரையில், இந்துஸ்தான் மீதான அவர்களின் பிடிப்பும், அவர்களை சவாலுக்கு அழைப்பதற்கு யாருமற்ற நிலையும் நீடித்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான், படையெடுத்து வருகின்ற ஆப்கானிஸ்தான் மன்னர் அஹ்மத் ஷா அப்தாலியின் (சஞ்சய் தத்) படைகளை விரட்டும் பொருட்டு, மராட்டிய இராணுவ தளபதி சதாஷிவ் ராவ் பாவு (அர்ஜுன் கபூர்) வடதிசை நோக்கி தனது படைகளுடன் ஆப்கானிஸ்தான் படைகளை எதிர்த்து ஓரு அவசரப் போர் பயணத்தை துவக்கி, தனது படைகளை வழிநடத்துகிறார்.

‘ஏஜிபிபிஎல்’ சார்பாக சுனிதா கோவரிகர், ‘விஷன் வேர்ல்டு பிலிம்ஸ்’ சார்பாக ரோஹித் ஷெலட்கருடன் இணைந்து இப்பத்தை தயாரிக்க, அசுதோஷ் கோவரிகர் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி உலகெங்கும் திரையிடப்பட தயாராக இருக்கிறது.

Ashutosh Gowarikers Panipat Trailer is an Absolute Visual Treat

 

More Articles
Follows