JUST IN ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டூடியோ கிரீன்

JUST IN ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டூடியோ கிரீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில்லுனு ஒரு காதல் படத்த இயக்கிய உபேலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பத்து தல’.

இந்த படத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பத்து தல

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

நீண்ட நாட்களாக இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பை நாளை ஜனவரி 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என முன்பே அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்து தல

Studio Green announced the first single update of ‘Pathu Thala’

பார்க்கக் கூட விரும்பல..; கீர்த்தியின் பாய் ப்ரெண்ட் லவ் குறித்து மேனகா பதில்

பார்க்கக் கூட விரும்பல..; கீர்த்தியின் பாய் ப்ரெண்ட் லவ் குறித்து மேனகா பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். சில தினங்களுக்கு முன்பு இவரது காதல் பற்றிய செய்தி இணையதளங்களில் வைரலாகி வந்தது.

தனது நீண்ட கால பள்ளி தோழரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய உள்ளதாகவும் அதற்கு பெற்றோர் சம்மதித்து விட்டதாகவும் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் கீர்த்தியின் அம்மாவும் முன்னாள் நடிகையமான மேனகா இது குறித்து அண்மையில் பதில் அளித்துள்ளார்.

“இது முழுக்கப் பொய்யான செய்தி. இது போன்ற செய்தியை பார்க்கக் கூட விரும்பவில்லை. கீர்த்தியின் திருமண செய்திகளுக்கு இதான் பதில். பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை” என டென்ஷனாக தெரிவித்துள்ளார் மேனகா.

Actress Menaka’s response to Keerthy’s love

பழனி முருகன் உதவியுடன் கேரள அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த அமலா பால்

பழனி முருகன் உதவியுடன் கேரள அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் எர்ணாகுளம் திருவைராணிகுளம் மகாதேவர் கோயிலில் அமலா பாலை உள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

அமலா பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவருக்கு இந்து கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கேரள ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

சமீபத்தில் பழனியில் உள்ள உலகப் புகழ்பெற்ற முருகன் கோவிலுக்குச் சென்ற அமலா, தனது தாயார் மற்றும் தோழியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கேரள கோயில் அதிகாரிகளுக்கு அமைதியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

Amala Paul’s silent reply to Kerala authorities with Lord Palani Murugan’s help

கவின் ‘டாடா’ படத்திற்கு ‘யு’ சர்ட்டிபிகேட்..!

கவின் ‘டாடா’ படத்திற்கு ‘யு’ சர்ட்டிபிகேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் நடித்திருக்கும் படம் ‘டாடா’.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10, 2023-ல் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், தணிக்கை குழுவில் ‘டாடா’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Kavin’s ‘Dada’ gets U certificate

‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்…

‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் பார்க்கும் நல்ல படங்களைப் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டவர்.

அப்படத்தின் இயக்குநரையோ அல்லது நடிகரையோ அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதில் நேரத்தை வீணடிக்கத் தெரியவில்லை.

கோபிசந்த் மலினேனி எழுதி இயக்கிய தெலுங்குப் படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’.

இப்படத்தில் ஸ்ருதிஹாசன், வரலக்ஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ் மற்றும் துனியா விஜய் ஆகியோருடன் நந்தமுரி பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படம் ஜனவரி 12, 2023 அன்று திரைக்கு வந்தது.

இயக்குனர் கோபிசந்த் மலினேனிக்கு ரஜினிகாந்த் படம் பிடித்திருப்பதாக தொலைபேசியில் அழைப்பு வந்தது.

கோபிசந்த் மலினேனி தனது உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்டு, “இது எனக்கு ஒரு அதிசயமான தருணம் தலைவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். அவர் வீரசிம்மரெட்டியைப் பார்த்தார் மற்றும் படத்தை விரும்பினார். எனது படம் மற்றும் அவரது உணர்ச்சிகளைப் பற்றி அவர் பாராட்டிய வார்த்தைகள். இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விட நான் உணர்ந்தேன். நன்றி ரஜினி சார். என எழுதினார்

கோபிசந்த் மலினேனி

Rajinikanth praises Gopichand Malineni’s ‘Veera Simha Reddy’

வசூலில் சாதனை நிகழ்த்தும் சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’

வசூலில் சாதனை நிகழ்த்தும் சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வால்டேர் வீரய்யா’ படத்தின் வெற்றி விழா வாரங்கலில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ராம் சரண் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய சிரஞ்சீவி, இப்படம் இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

“இந்த வெற்றிக்கான பெருமை பார்வையாளர்களையே சேரும். இந்த படம் என்னை பார்வையாளர்கள் விரும்பிய விதத்தில் சித்தரித்துள்ளது.

1980களில் ‘கைதி’ என்னை ஸ்டார் ஹீரோவாக்கியது என்றால், ‘WV’ இன்று பாபியை ஸ்டார் டைரக்டராக்கியிருக்கிறது என்று கூறினார்.

‘Waltair Veerayya’ has grossed Rs 250 Cr: Chiranjeevi

More Articles
Follows