சிம்புவின் ‘மாநாடு’ படத்தை ஆங்கிலத்தில் டப் செய்ய புரொடியூசர் ப்ளான்

சிம்புவின் ‘மாநாடு’ படத்தை ஆங்கிலத்தில் டப் செய்ய புரொடியூசர் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

யுவன் இசையமைப்பில் உருவான இந்த படத்தை ரஜினியுடன் அண்ணாத்த படத்துடன் தீபாவளிக்கு வெளியீடாக முதலில் அறிவித்து பின்னர் நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இத்துடன் மற்றொரு தகவலும் வெளியானது. இது கொரியன் படமான ‘ஏ டே’ என்ற படத்தின் தழுவல் என கூறப்பட்டது.

கொரியன் படம் நிறுவனம் புகாரளிக்க அந்த பிரச்னையை தீர்க்கவே படக்குழு மாநாடு பட ரிலீசை தள்ளிவைத்துள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை மறுத்துள்ளார்.

‛‛டைம் ட்ராவல் என்பது உலக பொதுவான கதை. மாநாடு படத்தில் அரசியல் களமாக கோவையை பயன்படுத்தி படம் எடுத்துள்ளோம்.

இதுவரை மாநாடு டிரைலர் மட்டுமே ரிலீசாகியுள்ளது.

அதை மட்டுமே வைத்து ஒரு முழு படத்தை எப்படி முடிவு செய்லாம்?

மாநாடு படம் கொரியன் பட காப்பி கிடையாது. இந்த படத்தை நாங்கள் ஆங்கிலத்திலும் டப் செய்ய வெளியிட இருக்கிறோம். கொரியன் பட காப்பியாக இருந்தால் அதை ஆங்கிலத்தில் வெளியிட முடியுமா” என தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

STR’s Maanaadu will have English dubbing says producer

கமலுக்கு பிறகு கோவை சரளாவை மீண்டும் நாயகியாக்கும் பிர(பு)பலம்

கமலுக்கு பிறகு கோவை சரளாவை மீண்டும் நாயகியாக்கும் பிர(பு)பலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் 1970களில் வெளியான ‘வெள்ளி ரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கோவை சரளா.

கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு உள்ளிட்ட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக காமெடி செய்தவர் கோவை சரளா.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 35 வருடங்களாக காமெடி நடிகையாக திகழ்கிறார். ஆனால் இவருக்கு தைரியமாக நாயகி வேடம் கொடுத்து அழகு பார்த்தவர் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் நடித்த ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவந்தார், காமெடி மட்டுமில்லாமல் அவ்வப்போது குணசித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார்.

ராகவா லாரன்சின் பேய் படங்களில் அன்பான அம்மா இவர் தான்.

இந்த நிலையில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கவுள்ள புதிய படத்தில் மீண்டும் கதையின் நாயகியாக கோவை சரளா நடிக்க உள்ளாராம்.

அதில் வயதான பாட்டி கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.

ஆதிவாசிகளை மையப்படுத்தி பிரபு சாலமன் இயக்கவிருக்கும் படத்தில் ஆதிவாசி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடும் கேரக்டரில் நடிக்கிறாராம் கோவை சரளா.

Kovai Sarala plays female lead for her next film

அனிருத்துடன் கூட்டணி போடும் ‘எஞ்சாயி எஞ்சாமி..’ பிரபலம்

அனிருத்துடன் கூட்டணி போடும் ‘எஞ்சாயி எஞ்சாமி..’ பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் பாடகி தீ பாடிய ‘எஞ்சாயி எஞ்சாமி…’ என்ற பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த பாடல் சிறுவர் முதல் பெரியவர் வரை கவர்ந்தது.

2021 தமிழக புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் சமயத்தில் எஞ்சாயி எஞ்சாமி பாடல் டியூனை பயன்படுத்தி பல வேட்பாளர்கள் தங்கள் பிரச்சார பாடலாக மாற்றிக் கொண்டனர்.

இந்த பாடல் மூலம் பாடகர் அறிவு என்பவரும் படு பிரபலமானார்.

இவர் மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடலை பாடியிருக்கிறார்.

‘அனிருத் இசையில் மீண்டும் ‘அசுரன்’ கூட்டணியை அமைத்த தனுஷ்’

மேலும் அஜித் நடித்து வரும் வலிமை படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறாராம்.

இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத்துடன் பாடகர் அறிவு இணைந்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக ஒரு பாடலை உருவாக்கி வருகிறாராம். விரைவில் இந்த பாடல் வெளியாகவுள்ளது.

Enjoy Enjaami star joins with music director Anirudh

வித்தியாசமான படைப்புகளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மெகா விருந்து படைத்த ‘விநோதய சித்தம்’

வித்தியாசமான படைப்புகளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு மெகா விருந்து படைத்த ‘விநோதய சித்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரமாண்ட வெற்றி பெற்ற, நடிகர் சந்தானம் நடித்த “ டிக்கிலோனா” திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பிரமாதமான வரவேற்பை தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு மிகப்பெரும் வெற்றிப்படைப்பை கொடுத்துள்ளது.

“விநோதய சித்தம்” என்ற தனித்துவமான பெயர் கொண்ட இந்த புதிய படத்தை, விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி, முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

மனிஷ் கல்ரா, Chief Business Officer, ZEE5 India கூறியதாவது.

‘தரமான படங்களை தருவதே எங்கள் ZEE5-நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். . மற்ற நிறுவனங்களை காட்டிலும் கருத்தில் சிறந்த ஒரிஜினல் சீரிஸ் மற்றும் பலவிதமான தரமான படங்களை பல்வேறு மொழிகளில் நாங்கள் தந்துகொண்டிருக்கிறோம். மற்றவர்களிடமிருந்து எங்களை தனித்து காட்டுவது இது தான்.

‘நாம் இல்லாவிட்டாலும் எல்லாம் நடக்கும்.; ‘விநோதய சித்தம்’ விமர்சனம் 4/5

தொடர்ந்து சிறந்த தமிழ் கதைகளை ரசிகர்களுக்கு அளிப்பதன் மூலம், நாங்கள் தமிழில் தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறோம். டிக்கிலோனா, விநோதய சித்தம் போன்ற எங்களது தளத்தில் தொடர்ந்து வெளியாகும் படைப்புகளை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருவது மகிழ்ச்சி. பல்வேறு வித்தியாசமான கதைகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து திருப்திபடுத்துவோம் என நாங்கள் நம்புகிறோம்’.

சிஜு பிரபாகரன், Cluster Head, South, ZEE கூறியதாவது.,

‘எங்களது பார்வையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் படங்களை கொடுப்பதே, எங்களது நோக்கம். சமீபத்திய வருடங்களில், பல மொழிகளில் முக்கியமாக தமிழில், மிகச்சிறந்த திறமைகள் கொண்ட கலைஞர்களுடன் பணிபுரிந்து வித்தியாசமான படைப்புகளை பல்வேறு மொழிகளில் அளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்ததில், குறிப்பாக தமிழில் சிறப்பான படைப்புகள் அமைந்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம்.

டிக்கிலோனா திரைப்படத்திற்கு மிகபெரிய வரவேற்பு கிடைத்தது.

‘டைம் ட்ராவலில் ஜாலி ட்ரிப்..; டிக்கிலோனா விமர்சனம் 3.25/5

தற்போது விநோதய சித்தம் திரைப்படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதை பார்ப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் காத்திருங்கள், இன்னும் பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன’.

நடிகர் இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாவது…

‘சில சம்பவங்களை பார்த்திருப்போம், சில சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம், சில சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்போம், ஆனால் சம்பவங்கள் நடத்தப்படுகிறது.

அப்படி நடத்தப்பட்ட மாபெரும் வெற்றிச் சம்பவம் தான் “விநோதய சித்தம்”. காலத்திற்கு நன்றி’.

தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா, முனீஷ்காந்த், தீபக் தின்கர், ஷெரினா, சஞ்சிதா ஷெட்டி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது

படத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பணியாற்றியுள்ள திறமை மிகு தொழில்நுட்ப கலைஞர்களான, ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரம், இசையமைப்பாளர் C சத்யா மற்றும் படத்தொகுப்பாளர் A.L. ரமேஷ் ஆகியோரின் பணி, படத்தில் இயக்குனர் சமுத்திரகனியின் கதை சொல்லலுக்கு மிகப்பெரும் தூணாக அமைந்துள்ளது.

இப்படத்தை அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள், YouTuber, மீம் கிரியேட்டர்கள், விமர்சகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் என அனைவரும் தங்களின் இதயப்பூர்வமான ஆதரவை தந்து, ZEE5யின் ‘விநோதய சித்தம்’ திரைப்படத்தை ரசிகர்களின் விருப்ப திரைப்படமாக, பெரும் வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர்.

‘விநோதய சித்தம்’ டிரெய்லரை காண: https://www.ZEE5.com/videos/details/vinodhaya-sitham-trailer/0-0-1z519673

நீங்கள் முழுத்திரைப்படத்தை காண…

https://www.ZEE5.com/movies/details/vinodhaya-sitham/0-0-1z519672

Samuthirakani’s Vinodhaya Sitham streaming successfully on Zee5

டைரக்டர் ஷங்கர் மருமகன் உள்ளிட்ட ஐவர் மீது பாய்ந்தது போஸ்கோ சட்டம்

டைரக்டர் ஷங்கர் மருமகன் உள்ளிட்ட ஐவர் மீது பாய்ந்தது போஸ்கோ சட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படங்களை இயக்கியதால் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் இயக்குனர் ஷங்கருக்கு உண்டு.

லைகா தயாரிப்பில் கமல் நடிக்கவுள்ள ‘இந்தியன் 2 ‘ படத்தை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

தற்போது தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

மேலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் இயக்கவுள்ளார். இதில் விக்ரம் கேரக்டரில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதிரன் மகனும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இதில் முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி கிரிக்கெட் வீரர் தாமரை கண்ணன் கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் 16 வயது மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்

இது குறித்து மாணவி கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்த போது அனுசரித்து செல் என்று கூறினார்களாம்.

எனவே புதுச்சேரி கிரிகெட் அணியின் தலைவரும் இயக்குனர் சங்கரின் மருமகனுமான ரோஹித் உட்பட 5 பேர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள ஐந்து பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Case filed against director Shankar’s son in law

தீபாவளி ரேஸில் ‘அண்ணாத்த’ ‘ஜெய் பீம்’ ‘எனிமி’ உடன் இணைந்த ‘எம்ஜிஆர் மகன்’

தீபாவளி ரேஸில் ‘அண்ணாத்த’ ‘ஜெய் பீம்’ ‘எனிமி’ உடன் இணைந்த ‘எம்ஜிஆர் மகன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ & ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம்.

இவர் தற்போது இயக்கியுள்ள படம் ‘எம்ஜிஆர் மகன்’. இதில் சத்யராஜும், சசிகுமாரும் அப்பா, மகனாக நடித்துள்ளனர்.

சசிக்குமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படம் கடந்த ஆண்டே வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனாவால் தள்ளிப்போனது.

இந்த நிலையில், வரும் தீபாவளியையொட்டி, நவம்பர் 4 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இத கொஞ்சம் பாருங்க : ‘‘இணையதளத்தை பற்ற வைத்த சூர்யாவின் ‘பவர்’ சாங்

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் பொன்ராம்.

தீபாவளியையொட்டி சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘ஜெய் பீம்’ நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ‘அண்ணாத்த’ & ஆர்யா & விஷால் இணைந்துள்ள எனிமி படங்கள் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசாகிறது.

Sasi Kumar’s MGR Magan joins Diwali race

More Articles
Follows