‘இந்தியன் 2′ விவகாரம்..: லைகா-ஷங்கர் மோதல்..; கண்டுக் கொள்ளாத கமல்..!

indian 2 (2)லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில்
கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் -2′.

பல பிரச்சனைகள் உருவானதால் ‘இந்தியன் 2′ பட படப்பிடிப்பு இன்னமும் முடிந்தபாடு இல்லை.

இதனால் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படம் ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் என தயாராகி விட்டார் ஷங்கர்.

எனவே ‘இந்தியன் 2′ படத்தை முடித்து கொடுக்காமல், வேறு படங்களை இயக்க, இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது லைகா நிறுவனம்.

இதனால் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசாரணைக்கு வந்தது.

ஜூன் முதல் அக்டோபருக்குள் படத்தை முடித்து கொடுத்து விடுவதாக, இயக்குனர் ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை, தயாரிப்பு நிறுவனமான லைகா ஏற்கவில்லை. ஜூன் மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் வலியுறுத்தியது.

இதனால் இருதரப்பினரின் பேச்சும் தோல்வி அடைந்தது.

இதனையடுத்து, விசாரணையை, ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தது.

ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல், இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் முதல் பென்ச் தெரிவித்தது.

இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இப்பட நாயகன் கமல் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறாரே? என பேசத் தொடங்கியுள்ளனர்.

இந்திய சினிமாவே கொண்டாடும் கலைஞர் கமல்.

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குனர் தயாரிப்பாளர் என சினிமாவை முழுவதுமாக அறிந்தவர்.

எனவே இந்த விவகாரம் சுமூகமாக முடிய கமல் தன் மௌனத்தை கலைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Stalemate on Kamal’s Indian 2 continues, Madras HC told

Overall Rating : Not available

Related News

Latest Post