தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜீன் 3ஆம் தேதி எழில் இயக்கத்தில் உருவான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் வெளியானது.
விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபா சங்கர், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரசிகர்களின் சிரிப்பலையில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு முழுமையான காமெடி படத்தை பார்த்த திருப்தி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வெற்றிக் குறித்து சூரி கூறியதாவது…
“படம் பெரிய வெற்றி அடைந்துள்ளது. என்னை பார்க்கும் சின்ன பசங்க கூட புஷ்பா புருசன் போறாரு பாருடா சொல்றாங்க.
அந்த அளவு என் கேரக்டர் ரீச் ஆகியுள்ளது. அதற்காக டைரக்டர் எழில் சாருக்கு நன்றி.
இதில் ரோபா சங்கரின் காமெடியும் நன்றாக பேசப்பட்டுள்ளது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்றார்.
இப்படத்தில் ஜாக்கெட் ஜானகிராமன் கேரக்டரில் ரோபா சங்கர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.