‘புலி’யை தொடர்ந்து குழந்தைகளுக்காக உருவாகியுள்ள படம் ‘சாயா’

‘புலி’யை தொடர்ந்து குழந்தைகளுக்காக உருவாகியுள்ள படம் ‘சாயா’

sonia agarwalவிஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் புலி. இப்படத்தில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை மிகவும் கவர்ந்திருந்தது.

தற்போதும் அதே குழந்தைகளை மனதில் வைத்து கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர் சாயா படக்குழுவினர்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் சாயா.

இப்படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும் என்கிறார் இயக்குனர்.

ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலை பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்த ஆத்மா ஒரு மாணவியின் சம்பந்தப்பட்டது.

ஆத்மா விட்ட சவாலை மாணவியின் ஆத்மா ஜெயித்துக் காட்டியதா? என்பதற்கான விடை படத்தில் இருக்கிறது என்கிறார் படத்தின் இயக்குனர் V.S. பழனிவேல்.

இவரே படத்தின் கதை, பாடல்கள், பின்னணி இசையையும் கவனித்திருக்கிறார்.

படம் முடிவடைந்து கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறதாம். குழந்தைகளை கவர்வதற்காகவே கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து அறுபது நாட்களுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.

Y.G.மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாகவும், பாய்ஸ் ராஜன் தலைமையாசிரியராகவும் நடித்திருக்கிறார்கள்.

saaya movie stills

பஞ்சாயத்தார்களாக ஆர். சுந்தர்ராஜனும், பயில்வானும் கலக்கி உள்ளார்கள்.

இதற்கிடையே வாய் தவறி சொன்ன ஒரு வார்த்தையால் ஆத்மாவாக மாறி படம் முழுக்க சேட்டைகள் செய்திருக்கிறார்கள் நெல்லை சிவாவும், மனோகரும்.

வில்லன்களான பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகியோர் இப்படத்தில் கிராமத்து பண்ணையார்களாக மிரட்டியிருக்கிறார்கள்.

புதுமுகம் சந்தோஷ் கண்ணா, நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும் திறமையாக நடித்துள்ளார். நாயகி டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி படம் முழுக்க அனுபவ பட நடிகை போல் அசத்தி உள்ளார்.

சோனியா அகர்வால் விஜய சாந்தி இடத்தை நிரப்பும் அளவுக்கு, நிறைய காட்சிகளில் டூப் வேண்டாம் என அதிரடி நாயகியாக நடித்துள்ளாராம்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வெயிடுகிறார் V.S. சசிகலா பழனிவேல். நவம்பர் வெளியீடாக வெளிவரவிருக்கிறது சாயா திரைப்படம். படத்திற்கு இசை ஜான் பீட்டர்.

விஜய்சேதுபதி ரசிகர்களை கன்ப்யூஸ் செய்த ‘கவண்’

விஜய்சேதுபதி ரசிகர்களை கன்ப்யூஸ் செய்த ‘கவண்’

vijay sethupathi madonnaகே.வி.ஆனந்த் இயக்கிய பல படங்களின் தலைப்புகள் ‘ன்’ என்றே எழுத்திலேயே முடியும்.

‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் வெளியானது.

ஆனால் ‘கோ’ படம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. கோ என்றால் அரசன் என்றும் பொருள்படும். (எப்பூடி கண்டு பிடிச்சோம்ல…)

இந்நிலையில் தற்போது இயக்கி வரும் படத்தின் கவண் என பெயரிட்டுள்ளார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த தலைப்பின் அர்த்தம் தெரியாமல் விஜய்சேதுபதி ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

எனவே அவர்களுக்காக நாம் விசாரித்ததில்…

கவண் என்றால்… மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னரே, அவன் தயாரித்த ஆயுதம் ‘கவண்’.

அதாவது இலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட ஆயுதம்தான் கவண் ஆகும்.

‘கவண்’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்த்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து இணைந்து பணியாற்றியுள்ளனர்.

‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சூட்டிங் பேக்-அப்; மீண்டும் செக்-அப்… அமெரிக்கா பறந்தார் ரஜினி

சூட்டிங் பேக்-அப்; மீண்டும் செக்-அப்… அமெரிக்கா பறந்தார் ரஜினி

rajini shankarகபாலி படத்தை தொடர்ந்து ஷங்கரின் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கபாலி பட வெளியீட்டின் போது, உடல்நல குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார் ரஜினி.

பின்னர் மீண்டும் ‛2.O’ படப்படிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.

சில நாட்கள் நடித்துவிட்டு, தற்போது மீண்டும் சிகிச்சை பெற அமெரிக்கா சென்றிருக்கிறார்.

ஓரிரு வாரங்கள் ஓய்வு எடுத்து விட்டு சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘விஜய்க்கிட்ட புடிச்ச விஷயங்களை லிஸ்ட் போடும் ‘பைரவா’ பரதன்

‘விஜய்க்கிட்ட புடிச்ச விஷயங்களை லிஸ்ட் போடும் ‘பைரவா’ பரதன்

bairavaa vijayஅழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார் இயக்குனர் பரதன்.

தற்போது இவர் பைரவா படப்பிடிப்பில் பரபரப்பாக காணப்படுகிறார்.

இவரது சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி கூறியதாவது…

சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியா இருக்கார். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார்.

காலையில சூட்டிங் வந்தார்ன்னா பேக் அப் சொல்றவரைக்கும் இருப்பார்.

நடந்து முடிந்த எதையும் பேசமாட்டார். மத்தவங்கள குறை சொல்ற பழக்கம் இல்லை.

இன்னைக்கு நம்ம வேலைய சிறப்பாக பண்ணிட்டோமா அது போதும் என நினைப்பவர் அவர்.

இது எல்லாம் விஜய்க்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.

‘ராதிகா-ரேவதி வரிசையில் கீர்த்தி சுரேஷ்’ – பரதன் நம்பிக்கை

‘ராதிகா-ரேவதி வரிசையில் கீர்த்தி சுரேஷ்’ – பரதன் நம்பிக்கை

keerthy sureshதமிழில் அறிமுகமாகும்போதே விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களுடன் ஜோடி போட்டவர் கீர்த்தி சுரேஷ்.

விரைவில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இவரைப் பற்றி பைரவ இயக்குனர் பரதன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“கீர்த்தி திறமையான நடிகை. நான் எழுதிக் கொடுக்கும் வசனங்களை எழுதி வாங்கிக் கொண்டு, வீட்டில் படித்துவிட்டு வருவாங்க.

அதை மனசில உள்வாங்கி ரொம்ப இயல்பா நடிப்பாங்க.

நடிகைகள் ராதிகா, ரேவதி போல இவங்களும் சிறந்த நடிகையாக வருவாங்க என்று தெரிவித்துள்ளார்.

அஜித்துடன் நடிக்க எல்லாருக்கும் ஆசை; ஆனா ஹர்ஷிகாவுக்கு வேற ஆசை!

அஜித்துடன் நடிக்க எல்லாருக்கும் ஆசை; ஆனா ஹர்ஷிகாவுக்கு வேற ஆசை!

Harshika Poonacha kannada actressதமிழ் சினிமாவுக்கு வரும் நடிகைகளுக்கு எல்லாருக்கும் அஜித்துடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்து விட ஆசை இருக்கும்.

ஒரு சிலருக்கோ, ஜோடி இல்லையென்றாலும் ஏதாவது ஒரு கேரக்டரில் அவருடன் நடித்தாலே போதும் என்பார்கள்.

இதை அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் தவறாமல் பேசி விடுவார்கள். (இல்லேனாலும் நம்ம ஆளுங்க டாப் ஸ்டார்ஸ் பத்தி கேள்வி கேட்டு சொல்ல வைச்சிடுவாங்க)

இந்நிலையில் பிரபல கன்னட நடிகையான ஹர்ஷிகா பூனச்சா (Harshika Poonacha) தன் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது அஜித் பற்றி ஒரு ரசிகர் கேள்வி கேட்க…

வாழ்க்கையில் ஒரு முறையாவது அஜித்துடன் என் பிறந்தநாளை கொண்டாட விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ஏனென்றால், இவருக்கும் அஜித் பிறந்த நாளான மே 1ஆம் தேதிதான் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. (அட. நியாயமான ஆசைதானே…)

இவர் கன்னடத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் விரைவில் ஜெய்யுடன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows