VERTIGE வெப் சீரிஸ் அஞ்சலி சோனியா SPB சரண் நடிப்பில் FALL ஆனது

VERTIGE வெப் சீரிஸ் அஞ்சலி சோனியா SPB சரண் நடிப்பில் FALL ஆனது

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிதாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான ‘ஃபால்’ (Fall) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வெப் சீரிஸில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர்.

திவ்யா என்ற இளம் பெண்ணிற்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது.

யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையில் இருக்கும் அவள், உண்மையில் என்ன நடந்தது என்பதையும், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகளையும் தேடுகிறாள்.

மேலும், அவளின் மறந்து போன நினைவுகளிலிருந்து முழுமையான நிகழ்வுகளை கண்டுபிடிக்க முயல்கிறாள்.

‘ஃபால்’ (Fall) தொடரை இயக்குவதுடன் ஒளிப்பதிவும் செய்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் கவனிக்கிறார்.

‘ஃபால்’ தொடர் ITV company நிறுவனமான Armoza Formats விநியோகம் செய்த, Productions Pixcom Inc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, மைக்கேல் ஆலன் எழுத்தில், விருது பெற்ற “வெர்டிஜ்” எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.

‘வெர்டிஜ்’ (Vertige) என்ற விருது பெற்ற கனடிய மினி வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்கை, பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார்

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா?

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டு நாள் வசூல் இத்தனை கோடியா?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘வெந்து தணிந்தது காடு’.

உடல் எடையை குறைத்து வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நடித்திருந்த இந்த படத்தை கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கியிருந்தார்.

சித்தி இத்னானி நாயகியாக நடிக்க ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படுகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஐசரி கணேசன் தயாரித்து இருந்தார்.

செப்டம்பர் 15 நேற்று முன்தினம் திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

இந்நிலையில், முதல் நாளில் ரூ.11 கோடி வசூலை ஈட்டியதாகவும் 2வது நாளில் ரூ.8 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதன்முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணையும் நடிகை அமலாபால்

முதன்முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணையும் நடிகை அமலாபால்

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை அமலாபால்.

சமீபத்தில் ‘கடாவர்’ என்ற படத்தை தயாரித்து அவரே நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

மலையாளத்தில் இவரது கைவசம் 3 படங்கள் உள்ளன.

தி டீச்சர், பிரித்திவிராஜ் ஜோடியாக ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உடன் ‘க்ரிஸ்டோபர்’ என்ற படத்தில் இணைந்துள்ளார் அமலா.

இதில் ஏற்கனவே சினேகா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

பி.உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பில் அமலாபால் கலந்துக் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ரீ என்ட்ரி ஸ்டார்ஸ் மூவி அப்டேட்: மோகனுக்கு விஜய்ஸ்ரீ..; ராமராஜனுக்கு ராகேஷ்.!

ரீ என்ட்ரி ஸ்டார்ஸ் மூவி அப்டேட்: மோகனுக்கு விஜய்ஸ்ரீ..; ராமராஜனுக்கு ராகேஷ்.!

1980-களில் கமல் – ரஜினி படங்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தன. ஆனால் அவர்களுக்கே பயத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நடிகர் மோகன் மற்றும் ராமராஜன் ஆகியோரது படங்களின் வெற்றி உருவானது.

இந்த இரு நடிகர்களும் வெள்ளிவிழா நாயகர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களது படங்களுக்கு பெண்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு இருந்தன.

ஆனால் 1990களின் இறுதியில் இவர்களது சினிமா சாம்ராஜ்யம் சரிந்தன. நடிகர் மோகன் ஓரிரு படங்களை இயக்கி நடித்தார் ஆனால் அவை சரியான வெற்றியை பெறவில்லை அதுபோல ராமராஜனும் சில படங்களை தயாரித்து வந்தார் அவையும் வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு இருவரும் சினிமாவில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் தான் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மோகனுக்கு ரிஎன்ட்ரீ கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. இவர் இயக்கும் ‘ஹரா’ படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பு நடித்து வருகிறார்.

அதுபோல நடிகர் ராமராஜனும் தற்போது ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த புதிய படத்தில் எம் எஸ் பாஸ்கர் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சிம்பு ஹன்சிகா நடித்த மகா படத்தை தயாரித்த மதியழகன் இந்த படத்தை தனது 14வது படைப்பாக தயாரிக்கிறார். இந்தப் படத்தை ராகேஷ் என்பவர் இயக்குகிறார்

இந்த படத்தின் தலைப்பு மற்றும் மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாக உள்ளது.

கூடுதல் தகவல்…

இந்த நிலையில் சற்று முன் ராமராஜன் நடிக்கும் படத்திற்கு ‘சாமானியன்’ என்று தலைப்பிட்டு டைட்டில் போஸ்டரை தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.

Here u go for the Title Look of #Saamaniyan *ing #MakkalNayagan Ramarajan, Radharavi & MS Bhaskar
@Etceteraenter @MathiyalaganV9
@direcrahesh
@umapathyraja @fenonn @SathsJ
@Gopieditor @johnmediamanagr
#WelcomeBackRamarajan

#సామానియన్ #സാമാനിയൻ #सामानियन #ಸಾಮಾನಿಯನ್

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணையும் பிரபல நடிகர்

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணையும் பிரபல நடிகர்

தனுஷ் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் படம் ‘கேப்டன் மில்லர்’.

சாணிக்காயுதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படம்தான் இது.

இந்த படத்திற்கு ஜிவி .பிரகாஷ் இசையமைக்க பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

அக்டோபர் முதல் வாரம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

தற்போது இதில் ‘மாநகரம்’ & ‘மாயவன்’ பட ஹீரோ சுந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இவர் தெலுங்கில் பிரபலமான ஹீரோ ஆவார்.

‘கேப்டன் மில்லர்’ படம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தீப் கிசன்

Sundeep Kishan joining dhanush starrer captain miller

JUST IN ஷங்கர் & கேஎஸ். ரவிக்குமார் கலந்த கலவைதான் அவர்… – சின்னி ஜெயந்த்

JUST IN ஷங்கர் & கேஎஸ். ரவிக்குமார் கலந்த கலவைதான் அவர்… – சின்னி ஜெயந்த்

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘டிரிக்கர்’.

இவர்களுடன் அருண் பாண்டியன், முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஆக்‌சன் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் ‘டிரிக்கர்’ டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

இந்த நிகழ்வில் சின்ன ஜெயந்த் பேசும்போது…

“நான் கடந்த 38 வருடத்தில் எத்தனையோ இயக்குனருடன் பணிபுரிந்து இருக்கிறேன். அதில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சாம் ஆண்டன்.

நான் கே எஸ் ரவிக்குமார் மற்றும் ஷங்கர் ஆகியோருடன் பணிபுரிந்து உள்ளேன். அவர்கள் இரண்டு பேரும் கலந்த கலவைதான் சாம் ஆண்டன்” எனப் பேசினார் சின்னி ஜெயந்த்.

சாம் ஆண்டன்
Director Sam Anton @ Lyca Production No 4 Pooja Stills

He is a mixture of  Ravikumar and Shankar says Chinni Jayanth

More Articles
Follows