விஜயசாந்தி இடத்தை நிரப்புவாரா சோனியா அகர்வால்..?

விஜயசாந்தி இடத்தை நிரப்புவாரா சோனியா அகர்வால்..?

soniaஅறிமுக நாயகன் சந்தோஷ் கண்ணா நாயகனாக நடிக்க, டூரிங் டாக்கீஸ் பட நாயகி காயத்ரி மற்றும் ஓம் சாந்தி ஓம் பட புகழ் கௌதமி செளத்ரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘சாயா’.

இதில் வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

விஜயசாந்தியை போல ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் அனல் பறக்க செய்திருக்கிறாராம்.

பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகிய மூவரும் வில்லன்களாக மிரட்டியுள்ளனர்.

Y.G. மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாக நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கிராமத்து பஞ்சாயத்தர்களாக ஆர்.சுந்தரராஜன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ‘பாய்ஸ்’ ராஜன், கோவை செந்தில், கொட்டாச்சி, சபீதா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜான் பீட்டர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்துள்ளார் எஸ். பார்த்திபன்.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் வழங்க, தயாரித்து இயக்குகிறார் V.S.பழனிவேல். தயாரிப்பு மேற்பார்வையை மதுபாலன் கவனிக்கிறார்.

இப்படம்  ரசிகர்களை பயமுறுத்தாமல், புனிதமான ஆத்மாக்கள் பற்றி பேசும் படமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

விஜய்சேதுபதியுடன் இணைந்த பாலா…. ரசிகர்கள் உற்சாகம்.

விஜய்சேதுபதியுடன் இணைந்த பாலா…. ரசிகர்கள் உற்சாகம்.

vijay sethupathi and balaசீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி, இதன் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பாலா பேசியதாவது….

விஜய்சேதுபதி மிகவும் யதார்த்தமான நடிகர்.

அவருடைய படங்களைப் பார்த்திருக்கிறேன். மிகச் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருப்பது பெருமை” என்றார்.

இதனை கேட்ட திரளான ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

சென்னையிலதான் சூப்பர் பிகர்ஸ் இருக்காங்க… தேடி அலையும் நாயகன்

சென்னையிலதான் சூப்பர் பிகர்ஸ் இருக்காங்க… தேடி அலையும் நாயகன்

kp 3மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ். P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E. சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கன்னா பின்னா”.

தியா கதையை எழுதி, இயக்குவதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

வன்மம் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்த ‘அஞ்சலி ராவ்’ நாயகியாக நடித்திருக்கிறார்.

ரோஷன் சேதுராமன் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜெரால்டு ராஜமாணிக்கம். பாடல்களை ஸ்ரீதர் ராமசாமி எழுத, படத்தொகுப்பு செய்துள்ளார் வெஸ்லி.

இப்படம் பற்றி இயக்குனர் தியா சொல்லும்போது…

“சூப்பர் பிகருன்னா அவங்க சென்னையிலதான் இருப்பாங்க அப்படின்னு நினைக்கிற ஒரு நாயகன். அவங்களதான் கல்யாணம் கட்டிக்கனும் என திருச்சியில் இருந்து சென்னைக்கு வருகிறார்.

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவையை மட்டும் நம்பி இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம்.

என் வாழ்க்கையில் என் நண்பர்கள் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை கற்பனை கலந்து கொடுத்து உள்ளோம்.

இதில் நிஜ பவுன்சர்கள் பலர் நடித்துள்ளனர். பார்ப்பதற்கு பிரமாண்டமான உருவத்தில் இருக்கும் இவர்கள் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்கள் எனக்கு நண்பர்கள் என்பதால், கடைசி வரை இப்படத்தின் கதையை அவர்கள் கேட்கவே இல்லை.

ரசிகர்களின் சிரிப்புக்கு நாங்கள் உத்திரவாதம்.” என்றார்.

நாளைய இயக்குனர் குறும்பட நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனராக விருது பெற்றவர் தியா என்பது குறிப்பிடத்தக்கது.

தன் வாழ்க்கையை மாற்றியவருடன் சூர்யா மீண்டும் இணைவாரா?

தன் வாழ்க்கையை மாற்றியவருடன் சூர்யா மீண்டும் இணைவாரா?

suriya stillsஎத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் எல்லா நடிகர்களுக்கும் பேர் சொல்லும் படியாக சில படங்களே அமைந்திருக்கும்.

சூர்யாவுக்கு அப்படி அமைந்த சூப்பர் ஹிட் படம்தான் ‘காக்க காக்க’.

கௌதம் மேனன் இயக்கிய இப்படத்தில் ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்திருந்தார் சூர்யா.

இப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், எனக்கு ஒரு ஸ்பெஷலான படம் எனவும் சூர்யாவின் ஈடுபாடு இல்லையென்றால் அது சாத்தியமாகி இருக்காது எனவும் கௌதம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சூர்யா… “எனக்கும் ஜோதிகாவுக்கும் பிடித்த படம். என் வாழ்க்கையையே மாற்றிய படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இருவரிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கியுள்ளதாக தெரிகிறது.

எனவே சூர்யா மீண்டும் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காலையில் ‘லவ்’… இரவில் ‘ரெமோ’…. கலக்கும் சிவகார்த்திகேயன்

காலையில் ‘லவ்’… இரவில் ‘ரெமோ’…. கலக்கும் சிவகார்த்திகேயன்

rremo wrap up partyஇன்று (ஆகஸ்ட் 2) விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இருமுகன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் லவ்.

இதில் நர்ஸ் வேடம் ஏற்று நடிக்கிறார்.

காலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்றே பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ரெமோ படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார் சிவா.

இதன் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.

இதன் சூட்டிங் நிறைவை ஒரு விழா போல கொண்டாடி அசத்தியுள்ளனர் படக்குழுவினர்.

‘ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்….’ ரஜினி மகள்கள் வேண்டுகோள்

‘ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்….’ ரஜினி மகள்கள் வேண்டுகோள்

nothing to worry rajini daughters request to fansசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் #HitToKill என்று ரஜினி ட்வீட் செய்திருந்தார் என்பதை பற்றி பார்த்தோம்.

ஆனால் ரஜினியின் ட்வீட்டர் அக்கௌண்டை யாரோ சில விஷமிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்களாம்.

எனவே இதுகுறித்து, ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்துள்ளதை இங்கே புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளோம்.

 

rajini twitter account hacked

 

More Articles
Follows