‘பைரவா’வுடன் மோத துணிந்த ஒரே படம் ‘சாயா’

‘பைரவா’வுடன் மோத துணிந்த ஒரே படம் ‘சாயா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saayaஇவ்வருட (2017) பொங்கலுக்கு பைரவா உடன் மோத கிட்டதட்ட 8 படங்கள் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் பல காரணங்களால் மற்ற படங்கள் தள்ளிப்போகவே தற்போது ஜனவரி 12ஆம் தேதி பைரவா மட்டுமே வருகிறது.

ஆனால் தற்போது மற்றொரு படமான சோனியா அகர்வாலின் சாயா படம் களத்தில் குதித்துள்ளது.

இப்படமும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இன்று சென்சாரில் யு சான்றிதழ் பெற்ற உடனே இதற்கான ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அறிமுக நாயகன் சந்தோஷ் நாயகனாக நடிக்க, டூரிங் டாக்கீஸ் பட நாயகி காயத்ரி மற்றும் ஓம் சாந்தி ஓம் பட புகழ் கௌதமி செளத்ரி ஆகியோர் நடித்துள்ள படம் சாயா.

இதில் வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடித்திருக்கிறார்.

இப்படம் சிறந்த கல்வியை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் தயாரித்துள் இப்படத்தை V.S.பழனிவேல் இயக்கியுள்ளார்.
ஜான் பீட்டர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்துள்ளார் எஸ். பார்த்திபன்.

Saaya is only tamil movie clash with Vijays Bairavaa

தனுஷின் ஆஸ்தான இயக்குநர் வெற்றிமாறனுடன் ஜி.வி. பிரகாஷ்

தனுஷின் ஆஸ்தான இயக்குநர் வெற்றிமாறனுடன் ஜி.வி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vetrimaran GV Prakashதனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.

இதில் ஆடுகளம் படத்திற்காக தனுஷ் தேசிய விருதை பெற்றார்.

தற்போது தனுஷ் நடித்துவரும் வடசென்னை படத்தையும் வெற்றிமாறனே 3 பாகங்களாக இயக்கி வருகிறார்.

இதனையடுத்து, ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் வெற்றிமாறன்.

இப்படத்தை ஸ்ரீக்ரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கட்டாப்பாவ காணோம் மற்றும் அடங்காதே படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Vetrimaran going to direct GV Prakash

‘அப்பா’வுக்காக சூர்யா-கார்த்தியின் ‘சித்திரச்சோலை’

‘அப்பா’வுக்காக சூர்யா-கார்த்தியின் ‘சித்திரச்சோலை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakumar suriya karthiசூர்யா, கார்த்தி நடத்தும் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75 –வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களை கொண்டு கண்காட்சி விழா நடத்தி அப்பாவின் வாழ்த்துகளை பெற்றார்கள் சூர்யா, கார்த்தி.

பல்லாயிரகணக்கான பொதுமக்களும், சினிமா மற்றும் பிரபலங்களும் கண்டுகளித்தனர்.

இதைபோல் கோயம்புத்தூர் மக்களும் தங்களது விருப்பங்களை தெரிவிக்க, வருகிற 14,15,16 தேதிகளில் நடத்துகிறார்கள்.

கோயம்புத்தூர் G.D. அரங்கம், எண்: 734 பிரசிடன்ட் ஹால் , அவினாசி ரோடு விலாசத்தில் நடக்கவிருக்கும் இக்கண்காட்சி 14 –ம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரை 15,16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.

சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும், இந்த சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியகண்காட்சியில் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிவகுமார் கலந்து கொள்வார்.

Suriya and Karthi Organizing their Dad #Sivakumar ‘s Chithira Cholai

பெயர் மாற்றத்துடன் உருவாகும் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ பார்ட் 2

பெயர் மாற்றத்துடன் உருவாகும் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ பார்ட் 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadiveluஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.

இப்படத்தில் வடிவேலு ஹீரோவாக இரு வேடம் ஏற்று காமெயில் கலக்கியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது.

இப்பாகத்தில் புலிகேசியின் அடுத்த வாரிசாக 24ஆம் புலிகேசி நடிக்கிறாராம்.

எனவே இதன் டைட்டில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Imsai Arasan 23 M Pulikesi sequel title change

கமல் மகளுக்கு பதிலாக அவரது ஜோடியை செலக்ட் செய்த விஷால்

கமல் மகளுக்கு பதிலாக அவரது ஜோடியை செலக்ட் செய்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Vishalமிஷ்கின் இயக்கத்தில் விஷால் மற்றும் பாக்யராஜ் இணைந்து நடித்துவரும் படம் துப்பறிவாளன்.

இதில் பாக்யராஜ் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்தார்.

ஆனால் கமலின் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிவதால் அக்ஷராஹாசன், துப்பறிவாளன் படத்தில் இருந்து விலகுகிறாராம்.

எனவே தற்போது அக்ஷராவுக்கு பதிலாக ஆண்ட்ரியாவை புக் செய்துள்ளனர்.

கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal Joins with Andrea for Thupparivaalan movie

விஜய்-ஏஆர் முருகதாஸ் மீண்டும் கூட்டணி… பார்ட் 2 ரெடி!

விஜய்-ஏஆர் முருகதாஸ் மீண்டும் கூட்டணி… பார்ட் 2 ரெடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay AR Murugadossவிஜய்-ஏஆர் முருகதாஸ் கூட்டணி அமைத்த கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய இரு படங்களும் மாபெரும வெற்றிப் பெற்றது.

எனவே இந்த கூட்டணி மீண்டும் இணையாதா? என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் மீண்டும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் நடித்தபின் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

More Articles
Follows