தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக நாயகன் சந்தோஷ் நாயகனாக நடிக்க, டூரிங் டாக்கீஸ் பட நாயகி காயத்ரி மற்றும் ஓம் சாந்தி ஓம் பட புகழ் கௌதமி செளத்ரி ஆகியோர் நடிக்கும் படம் சாயா.
இதில் வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.
இவர்களுடன் ஆர் சுந்தர்ராஜன், Y.G. மகேந்திரன், ‘பாய்ஸ்’ ராஜன், பயில்வான் ரங்கநாதன், பாலாசிங், கராத்தே ராஜா, கோவை செந்தில், கொட்டாச்சி, சபீதா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜான் பீட்டர் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் எஸ். பார்த்திபன்.
அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் வழங்க, தயாரித்து இயக்குகிறார் V.S.பழனிவேல்.
இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…
“சாயா என்றால் சக்தி நிறைந்த பொருள். அந்த சக்திக்கும் ஆத்ம சக்திக்கும் தொடர்பு இருப்பதால் படத்திற்கு சாயா என பெயரிட்டுள்ளோம்.
பேய் படம் என்றாலே ஆவிகளைப் பற்றி காட்டுகின்றனர். ஆனால் இப்படம் புனிதமான ஆத்மாக்கள் பற்றி பேசும். ஆத்மாக்களின் நல்ல நோக்கம் இந்த சமுதாயத்திற்கும் மாணவர்களுக்குமான தேவையை நிறைவேற்றும்” என்றார்.