தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ்-இன் பிரம்மாண்ட வெளியீடான ‘அயலான்’ இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.
இது குறித்து KJR ஸ்டுடியோஸ், கோட்டபாடி ஜே ராஜேஷ் பேசுகையில்…
“இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி. “அயலான்” திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம்.
அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது.
திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது.
மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.”
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கும் ‘அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்.
Sivakarthikeyan’s ‘Ayalaan’ release date announced
An extra terrestrial visit and a Diwali treat from beyond the stars!
Experience the awe and wonder of an alien presence 👽
#AyalaanFromDiwali2023 🔥
#Ayalaan @Siva_Kartikeyan @arrahman @Ravikumar_Dir @kjr_studios @24amstudios @Phantomfxstudio @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu #Karunakaran #Niravshah @AntonyLRuben @muthurajthangvl @anbariv @SOUNDARBAIRAVI @gopiprasannaa @Pallavi_offl @sonymusicsouth @DoneChannel1 @gobeatroute