விநாயகர்-விஜயகாந்துடன் கனெக்ஷன் ஆன சிவகார்த்திகேயன்

விநாயகர்-விஜயகாந்துடன் கனெக்ஷன் ஆன சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை தயாரித்த, 24 ஏஎம். ஸ்டூடியோஸ் நிறுவனமே அவரின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது.

மோகன் ராஜா இயக்கிவரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, ஸ்னேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்க, ஓரிரு தினங்களுக்கு முன் இதன் சூட்டிங் தொடங்கியுள்ளது.

அடுத்த வருடம் 2017ல் ஆகஸ்ட் 25, அதாவது விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தை வெளியிட உள்ளனர்.

அன்றைய தினம் நடிகர் விஜயகாந்த்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர்

ஸ்ருதிஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruthi hassanதென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவரை ட்விட்டரில் ஏராளமானவர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவருக்கு அடிக்கடி ட்விட்டரில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக போலீசில் புகார் செய்தார்.

இதனால் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அவர் பெங்களுரை சேர்ந்த டாக்டர் என்று கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

நடிகை சபர்ணா மரணம்… கொலையா? தற்கொலையா?

நடிகை சபர்ணா மரணம்… கொலையா? தற்கொலையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sabarna-anandபிரபல டிவி நடிகையான சபர்ணா, சில சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திடீரென அவர் இறந்து வீட்டில் கிடந்ததாக செய்திகள் வந்தன.

இந்த மரண செய்தி டிவி நட்சத்திரங்களை அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்துடன் அவர் இருந்துள்ளதால், தற்கொலை செய்துக் கொண்டார் என ஒரு பக்கம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால், சபர்ணா இயற்கையிலேயே தைரியமானவர்.

நாங்கள் சோர்வாக இருந்தால் எங்களுக்கு தைரியம் கொடுப்பவர் அவர் என அவருடன் பழகிய நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

எனவே சபர்ணாவின் மரணத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.

இவருக்கு சுகுணா என்ற மற்றொரு பெயரும் உண்டு.

சூட்டிங் ஸ்பாட்டிலும் மக்கள் சேவையை தொடரும் விஷால்

சூட்டிங் ஸ்பாட்டிலும் மக்கள் சேவையை தொடரும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalமிஷ்கின் இயக்கத்தில் விஷால் முதன்முறையாக நடிக்கும் படம் “துப்பறிவாளன்“

இதன் சூட்டிங் இன்று சென்னையிலுள்ள கோடம்பாக்கம், புலியூர் ஹவுசிங் போர்டில் நடைபெற்றது.

இதன் படப்பிடிப்பின் போது, புலியூர் ஹவுசிங் போர்டு சங்கத்தினர் விஷாலை சந்தித்து, தங்கள் பகுதியில் பழுதடைந்து இருக்கும் பாதாள சாக்கடை, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை சரி செய்ய அடிப்படை தேவைகளை வழங்குமாறு முறையிட்டனர்.

எனவே, அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு உதவிகளை வழங்கினார் விஷால்.

எனவே, புலியூர் ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.

மோடியை மோசமாக கண்டித்த மன்சூர் அலிகான்

மோடியை மோசமாக கண்டித்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PM Modi and Mansoor Ali Khanமைமோசா நிறுவனம் தயாரிப்பில் அறிமுக நாயகன் கோகுல், ப்ரியா, நீனு, அப்புகுட்டி, மன்சூர்அலிகான், மதுமிதா, டாப்பா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கொஞ்சம் கொஞ்சம்’.

விருந்தாளி படத்தை தொடர்ந்து உதயசங்கரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வல்லவன் இசையமைக்க, பெட்டி சி.கே.பி.ஆர். மோகன் தயாரித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சற்றுமுன் இன்று சென்னையில் நடந்தது.

இதில் இயக்குனர்கள் எஸ்பி. முத்துராமன், சீனுராமசாமி, விசி. குகநாதன், நடிகர் ரகுமான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் மன்சூர் அலிகான் பேசியதாவது….

“இந்த படத்தில் என்னை அழகாக காட்டியுள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி.

பிரதமர் மோடி அறிவித்துள்ள கறுப்பு பணத்தை ஒழிப்பு திட்டத்தை அனைவரும் வரவேற்கிறார்கள்.

ஆனால் திடீரென ரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து மக்கள் அனைவரையும் ஒரே நாளில் ராப் பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார்.

பழைய ரூ. 500 நோட்டுக்கள் நன்றாக உள்ளது. ஆனால் தற்போது வந்துள்ள ரூ. 2000 நோட்டுக்களை நம் ஆர்ட் டைரக்டர்களிடம் கொடுத்தால் நன்றாக டிசைன் செய்து இருப்பார்கள்.

வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பெரிய வரிசையில் மக்கள் கால்கடுக்க காத்துக்கிடக்கிறார்கள்.

மக்களிடம் செலவுக்கு பணம் இல்லை. 5 நாட்களாக தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன. சினிமா துறையே முடங்கி விட்டது.

மோடி இதற்கு பதில் சொல்ல வேண்டும். திரையுலகினர் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும்.” என்று பேசினார் மன்சூர் அலிகான்.

‘காற்று வெளியிடை’ ரிலீஸை கன்பார்ம் செய்த கார்த்தி

‘காற்று வெளியிடை’ ரிலீஸை கன்பார்ம் செய்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi kaatru veliyidai movieமணிரத்னம் இயக்கி தயாரிக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்ப கவனித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தெலுங்கில் இப்படத்திற்கு டூயட் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை தன் ட்விட்டரில் வெளியிட்டு அதில் அடுத்த வருடம் 2017 மார்ச் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார் கார்த்தி.

More Articles
Follows