கனா பட லாபத்தில் விவசாயிகளுக்கு உதவும் சிவகார்த்திகேயன்

கனா பட லாபத்தில் விவசாயிகளுக்கு உதவும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanaa stillsஅருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படத்தின் வெற்றி விழாவில் அவர் பேசியதாவது…

நடிகர் தான் என் அடையாளம், அது தான் நிரந்தரம். தயாரிப்பாளர் என்பதெல்லாம் அதில் இருந்து கிடைத்தது தான். நிறைய படங்களுடன் ரிலீஸ் ஆனாலும், அதில் ஹீரோ இல்லாத ஒரு படம் தான் இது.

ஆனாலும் வெற்றியை எட்ட காரணம் அதை ரிலீஸ் செய்து கொடுத்த ஆருத்ரா ஃபிலிம்ஸ்க்கு நன்றி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனக்கு திருப்புமுனை தந்த படம், இது நான் தயாரித்த முதல் படம்.

என் சினிமா கேரியரின் இந்த இரண்டு முக்கியமான தருணங்களில் உடன் இருந்திருக்கிறார் சத்யராஜ் சார். திபு நினன் தாமஸ் இசை படத்துக்கு பெரிய பலம், வைக்கம் விஜயலக்‌ஷ்மி அவர்களின் குரலும் ஆசிர்வாதமும் நல்ல துவக்கத்தை தந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அது இந்த படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி, வேறு படத்தில் நடந்தாலும் மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர்.

20 மேட்ச்க்கான காட்சிகளை படம் பிடித்து கொடுத்தாலும் அதை சிறப்பாக கட் செய்த ரூபனுக்கு நன்றி. தினேஷ் கிருஷ்ணன் மிக அழகாக ஒளிப்பதிவு செய்பவர். என்னை பாலசுப்ரமணியம் சாருக்கு பிறகு அழகாக காட்ட நிறைய முயற்சிகள் எடுப்பார்.

எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் எல்லா சுமையையும் தன் தோளில் தாங்கிய கலையரசுக்கு நன்றி. அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் நம்புகிறேன், உணர்கிறேன்.

இந்த படம் எங்கள் பேனருக்கு லாபகரமான படம். இந்த லாபத்தில் விவசாயிகளுக்கு முடிந்தவரை செய்ய இருக்கிறோம் என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியை மேடைக்கு அழைத்து கனா படக்குழுவினர் கௌரவித்தனர். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், நடிகர் தர்ஷன், நடிகை ரமா, பாடலாசிரியர்கள் ஜிகேபி, மோகன்ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

விஷால்-மைக்கேல் ராயப்பனிடம் ஒரு கோடி கேட்டு சிம்பு வழக்கு

விஷால்-மைக்கேல் ராயப்பனிடம் ஒரு கோடி கேட்டு சிம்பு வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and vishalஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புவுடன் தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை சிம்பு ரசிகர்களே ரசிக்கவில்லை என்பதால் படம் படு தோல்வியை அடைந்தது.

இந்த படத்தில் நடிக்க 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது என்றும் பட தோல்வியை காரணம் காட்டி 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக நடிகர் சிம்பு புகார் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக சிம்புவும், மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக ஒருதலைபட்சத்துடன் செயல்படுவதாக சிம்பு புகார் கூறியுள்ளார்.

மேலும் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்பு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

எனவே விஷாலும், மைக்கேல் ராயப்பனும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சிம்புவின் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் கட்ட பஞ்சாயத்து செய்வதாக சிம்பு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், புதிய படங்களில் தாம் ஒப்பந்தம் செய்து கொள்வதில், தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்க விஷால், மற்றும் மைக்கேல் ராயப்பனுக்கு உத்தரவு இட்டுள்ளார்.

மலேசியாவை மலைக்க வைக்கும் *பேட்ட* புரோமோசன்ஸ்

மலேசியாவை மலைக்க வைக்கும் *பேட்ட* புரோமோசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Petta movie promotions were rocking in Malaysiaரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் மலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது.

இதைப்பார்த்த ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களிடையும் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மலேசியாவில் இதுவரைக்கும் யாரும் செய்யாதளவிற்கு ‘பேட்ட’ படத்தின் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.

மலேசியாவில் திரைப்படத் துறையில் முத்திரை பதித்து வரும் மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் 23ஆவது திரைப்படமான “பேட்ட” 3 கோடி வெள்ளிக்கு வசூல் சாதனை படைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற விழாவில் ‘பேட்ட’ படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.

மலேசியாவில் 140 திரையரங்குகளில் “பேட்ட” திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் “உல்லாலா” பாடலை மலாய் பாடகர்கள் அஸ்வான், முவாட்ஸ் இருவரும் தமிழ்மொழியில் பாடி அசத்தியுள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இத்துடன், மலாய் பாடகர்கள் பாடிய வீடியோ, மலேசிய வீதிகளில் செய்யப்பட்டுள்ள விளம்பர வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Rajinis Petta movie promotions were rocking in Malaysia

3 இயக்குனர்களின் கையில் ரஜினி கால்ஷீட்; கடைசி படத்தை இயக்கும் ராஜமௌலி.?

3 இயக்குனர்களின் கையில் ரஜினி கால்ஷீட்; கடைசி படத்தை இயக்கும் ராஜமௌலி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and rajamouliகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படம் வருகிற ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கலாம் எனவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை முடித்து விட்டு மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்த 2 படங்களை முடித்துவிட்டு தன் கடைசி படமாக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரஜினி நடிக்க விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு முழு வீச்சில் தன் ஆன்மிக அரசியலில் ரஜினி ஈடுபட உள்ளதாக தெரிகிறது.

2021ல் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தான் அவசர அவரசமாக தன் சினிமா பயணத்தை முடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்யாவை காதலித்து திருமணம் செய்யும் நடிகை சாயிஷா

ஆர்யாவை காதலித்து திருமணம் செய்யும் நடிகை சாயிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya sayyeshaaநடிகர் ஆர்யாவுக்கு பெண் தோழிகள் அதிகம். இருந்தபோதிலும் அவர் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது சாயிஷாவுடன் நெருக்கம் காட்டியதாக கூறப்பட்டது.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து சூர்யாவின் காப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

அந்த பட சூட்டிங்கின் போது மேலும் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்து இருந்ததாகவும் இதனால் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இருவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இந்த காதலுக்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

விஜய்யை கிண்டலடித்து சிம்புவை சூப்பர் ஸ்டார் என பாராட்டிய சீமான்

விஜய்யை கிண்டலடித்து சிம்புவை சூப்பர் ஸ்டார் என பாராட்டிய சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman vijay strஅண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் பேசிக் கொண்டிருந்தார்.

அபோது குறிப்பாக நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

‘சர்கார்’ படத்திற்கு பிரச்சினை வந்த சமயத்தில் ஆளும் அரசை எதிர்க்காமல் விஜய் கைகட்டி பேசினார். முதல்வர் எடப்பாடியே ஒரு அடிமை. அவருக்கு பயந்துவிட்டார் விஜய்.

ஒரு விரல் புரட்சி அரட்சி என்கிறார். என் இயக்கத்தில் நடிக்க மாட்டார் விஜய். ஆனால் நான் பேசுவதை எல்லாம் பேசி அவர் நடிப்பார் என விமர்சித்தார்.

மேலும் சிம்பு மட்டுமே தைரியமாக நடிக்க சம்மதித்ததாகவும் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சீமான் பாராட்டினார்.

சீமானின் இந்த பேச்சை விஜய் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

More Articles
Follows