நீங்க எடுங்க நான் பாத்துக்குறேன்; கனா இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் தந்த உறுதி

நீங்க எடுங்க நான் பாத்துக்குறேன்; கனா இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் தந்த உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan gave confidence to Arunraja Kamaraj to direct Kanaaசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.

வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால் தான் அது தயாரிப்பாளருக்கு சரியாக அமையும். இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், எங்களுக்கு கிடைத்த வரம்.

சின்ன படமாக இருந்த இந்த கனா, சத்யராஜ் சார் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது. சத்யராஜ் சாரை எல்லோரும் கட்டப்பா என்று தான் அழைக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என நம்புகிறேன்.

விளையாட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் வீராங்கணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தால், ஐஸ்வர்யா ராஜேஷ் ரத்தம் சிந்தி வேலை பார்த்திருக்கிறார் என்றார் தயாரிப்பாளர் கலையரசு.

இந்த படத்தின் மீது எனக்கு ரொம்பவே காதல், இந்த படம் ரிலீஸுக்கு ரொம்ப நாளாகவே காத்திருக்கிறேன். ஒரு மகள் எந்த விஷயத்தை ஆசைப்பட்டாலும் அதை தந்தை எப்பாடு பட்டாவது செய்து கொடுப்பார்.

இந்த படம் எல்லோருக்கும் அந்த உணர்வை கொடுக்கும். ஐஸ்வர்யா ராய் போல ஐஸ்வர்யா ராஜேஷ் புகழ் பெற வேண்டும், அந்த அளவுக்கு கடினமாக உழைத்திருக்கிறார் என்றார் நடிகர் இளவரசு.

என் நண்பர்கள் அருண், சிவா, கலை ஆகியோருக்காக இந்த படத்தில் வேலை செய்திருக்கிறேன். விவசாயமும் தெரியாது, கிரிக்கெட்டும் தெரியாது நான் எப்படி இந்த படத்தை எடிட் செய்வது என்று கேட்டேன், ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் தெரியாமல் நாயகியாக நடிக்கிறார், வாங்க என அழைத்தார் அருண்ராஜா. சத்யராஜ் சார் கதாபாத்திரம் மாதிரி ஒரு தந்தை இருந்தால் எல்லோருடைய கனாவும் இன்னும் சீக்கிரமே நிறைவேறும் என்றார் எடிட்டர் ரூபன்.

சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பில் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. கனா ஒரு விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதால் சவுண்ட் டிபார்ட்மெண்டில் நிறைய வேலை பார்க்க வேண்டியிருந்தது.

நிறைய சவால்கள் இருந்தன, இசையமைப்பாளர் திபு ஸ்போர்ட்ஸ் படத்துக்கு ஏற்றவாறு மிகச்சிறந்த இசையை வழங்கியிருக்கிறார் என்றார் சவுண்ட் மிக்ஸர் சுரேன்.

என் சினிமா ஆசையை நிறைவேற்றியது சிவகார்த்திகேயன் அண்ணன் தான். இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒரு நாள் திடீரென சிவா அண்ணா படத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்து விட்டு, நான் நினைத்ததை விட நல்லா நடிச்சிருக்க என சொன்னார், அதுவே எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது என்றார் நடிகர் தர்ஷன்.

நான் கடுமையா உழைச்சிருக்கேன்னு எல்லோரும் சொல்றாங்க. கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும் தான் எனக்கு இருக்கு, ஆனால், அதை சாத்தியப்படுத்த அருண்ராஜா முதல் இந்த குழுவின் நிறைய நண்பர்கள் தான் என்னை உந்தி உழைக்க வைத்தார்கள்.

என்னுடைய அப்பா இருந்தால் சத்யராஜ் சார் மாதிரி தான் இருந்திருப்பார் என நினைக்கிறேன், என் அப்பா ஸ்தானத்தில் தான் அவரை வைத்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நடிகராக வருவார் தர்ஷன்.

தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும். எடிட்டர் ரூபன் படத்தை பார்த்து ரொம்ப நல்லாருக்குனு சொல்லிட்டார். அங்கேயே வெற்றி உறுதியாகி விட்டது. தயாரிப்பாளர் கலையரசு சார் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இன்னமும் கடுமையாக உழைத்து வருகிறார் என்றார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

படம் நன்றாக இருந்தால் மக்களே படத்தை கொண்டு சேர்ப்பார்கள். அதை புகழ்ந்து பேசி பயனில்லை. கிரிக்கெட் தெரியாமல், அதை கற்றுக் கொண்டு நடிப்பது மிகப்பெரிய சவால். ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறார்.

சினிமா தெரிந்த ஒரு படைப்பாளி ஜெயிக்கும்போது அது சினிமாவுக்கு நல்லது. அருண்ராஜா காமராஜ் அப்படிப்பட்ட ஒரு இயக்குனர். விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்கள் எங்கு போனாலும் வெற்றி பெறும். இந்த படம் தங்கல் மாதிரி சீனாவிலும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் நடிகர் சத்யராஜ்.

சின்ன பட்ஜெட்டில் நிறைய கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல பெரிய கதையா இருந்தா சொல்லு என்றார். 3 கதைகள் தயார் செய்தேன், அதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த கதையை அவரிடம் சொன்னேன். அவருக்கு பிடித்து போய் தயாரிக்க முடிவு செய்தார். எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதை கூட சிவகார்த்திகேயன் என்னிடம் சொல்லவில்லை.

நினைச்சத எடுங்க, நான் பார்த்துக்குறேன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். என்னை இயக்கியது எல்லாமே என் நண்பர்கள் தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் நான் இந்த நிலையில் இல்லை.

கௌசல்யா முருகேசன் என்ற பெண்ணின் வாழ்க்கை பயணம் தான் இந்த கதையை நகர்த்தி செல்லும். ஐஸ்வர்யா ராஜேஷ் உழைப்பு அபரிமிதமானது.

கிரிக்கெட் மேட்சை இதுவரை சினிமாக்களில் காட்டாத வகையில் நாம் திரையில் கொண்டு வர வேண்டும் என நானும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் முடிவு செய்தோம்.

சத்யராஜ் சார் என்னை நிறைய தாங்கினார். எனக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்தார். வாயாடி பெத்த புள்ள பாடல் 70 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது என்றால் அதற்கு ஜிகேபி எழுதிய, எளிமையான பாடல் வரிகளும் தான் முக்கிய காரணம் என்றார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

இந்த சந்திப்பில் நடிகர் முனீஷ்காந்த், சவுண்ட் டிசைனர் அழகிய கூத்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Sivakarthikeyan gave confidence to Arunraja Kamaraj to direct Kanaa

சீதக்காதி அய்யாவை மக்கள் கொண்டாட வேண்டும்.. : நடிகை அர்ச்சனா

சீதக்காதி அய்யாவை மக்கள் கொண்டாட வேண்டும்.. : நடிகை அர்ச்சனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Peoples must celebrate Seethakathi Ayya says Archanaசீதக்காதி படத்தில் விஜய்சேதுபதியின் ஜோடியாக லட்சுமி கேரக்டரில் பிரபல நடிகை அர்ச்சனா நடித்துள்ளார்.

அவர் தன் கேரக்டர் பற்றி கூறியுள்ளதாவது…

சீதக்காதியில் என் கதாபாத்திரம் மகிழ்ச்சி, துக்கம், அச்சம் ஆகிய உணர்ச்சிகளை கொண்ட ஒன்று.

அய்யா கேரக்டரை விஜய் சேதுபதியிடம் இருந்து பிரிக்க பார்க்க முடியவில்லை. இது படப்பிடிப்பின் போது மட்டுமல்ல, படத்தின் காட்சிகளையும், புகைப்படங்களையும் பார்க்கும் போது, இருவரையும் பிரித்து பார்க்க முடியவில்லை.

அது எனக்கு மட்டுமல்ல குழுவில் உள்ள அனைவருக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

பாலாஜி தரணீதரன் பற்றி புகழ்ந்து பேசுகிறார், அவர் கூறும்போது, “இதுபோன்ற ஒரு தனித்துவமான கதையை சிந்திக்க, அவருக்கு எது உந்துதலாக இருந்திருக்கும் என படப்பிடிப்பு முழுக்க நான் ஆச்சர்யப்பட்டேன்.

சமகால தலைமுறை இயக்குனர்கள் வழக்கமான முறையில் படம் எடுக்க, கவனம் செலுத்தும் நேரத்தில் இவரின் சிந்தனை என்னை வியப்பில் ஆழ்த்தியது. நிச்சயமாக, அவர் தான் ‘அய்யா’வின் படைப்பாளி. அவரை மக்கள் கொண்டாட வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

விஜய் சேதுபதி 75 வயது நாடக கலைஞராக நடித்துள்ள இந்த படத்தை பேஸ்ஸன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

சமீபத்திய சென்சேஷன் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Peoples must celebrate Seethakathi Ayya says Archana

ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது

ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hollywood Producer Ashok Amritraj received Chevalier Awardசிவாஜி கணேசன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிகர்களில் செவாலியர் விருது பெற்றுள்ளனர்.

தற்போது அந்த வரிசையில், ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் அவர்களும் இணைந்துள்ளார்.

பல ஹாலிவுட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் நடந்த நிகழ்வில் அளிக்கப்பட்டது.

பிரெஞ்சு அமைச்சர் H.E. Mr Jean – Yves Le Drian செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு வழங்கினார்.

Hollywood Producer Ashok Amritraj received Chevalier Award

அனிமேஷன் எம்ஜிஆர் படத்துக்கும் தடை கேட்டு வழக்கு; கோர்ட் தள்ளுபடி

அனிமேஷன் எம்ஜிஆர் படத்துக்கும் தடை கேட்டு வழக்கு; கோர்ட் தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mgrமறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை இயக்கி வெளியிட்டபோது, அந்த படத்தின் இறுதியில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாக தலைப்பாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு வெளியாகும் என அறிவித்தார்.

அதன்பிறகு, அவர் அரசியலில் இறங்கி முதல்வர் ஆனதால் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு படம் உருவாகவில்லை.

இந்நிலையில், எம்.ஜி.ஆரின் நண்பரான ஜசரி வேலனின் மகன் ஜசரி கணேஷ், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற பெயரில் அனிமேசன் எம்.ஜி.ஆரை வைத்து படத்தை உருவாக்கி வருகிறார்.

இப்படத்திற்கு தடை கேட்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் சக்கரவர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்… “கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தான் தயாரிக்க முடிவு செய்து படத்தின் தலைப்பை பதிவு செய்திருந்தேன். தற்போது அந்தப் படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ், அந்த தலைப்பை என்னிடம் இருந்து வாங்கினார்.

தற்போது அந்த படம் முடிவடைந்து வெளிவர இருக்கிறது. ஆனால் படத்தின் கதை நான் உருவாக்கி வைத்திருந்த கதையல்ல. நான் சொன்ன கதையை படமாக்காமல் வேறு கதையை படமாக்கி இருப்பதால் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க கூடாது” என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. “இது உயர்நீதிமன்ற விசாரணைக்கு உகந்ததல்ல மனுதாரார் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் முறையிட்டு தீர்வு காணலாம்” என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ள சூர்யாவின் என்ஜிகே டீம்

பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ள சூர்யாவின் என்ஜிகே டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

surya NGKசூர்யாவை இயக்குகிறார் செல்வராகவன் என்ற அறிவிப்பு வந்த உடனே எல்லாராலும் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இப்படத்திற்கு என்ஜிகே எனத் தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

ஆனால் படத்தின் சூட்டிங் மட்டும் முடியாமல் இழுத்துக் கொண்டே போனது.

அதற்குள் கே.வி. ஆனந்த் படத்தில் நடித்துவிட்டு வந்துள்ளார் சூர்யா.

தற்போது மீண்டும் என்ஜிகே சூட்டிங்கில் கலந்துக் கொண்டு நடித்து வருகிறார் சூர்யா.

சில தினங்களுக்கு முன் கேரளாவில் நடைபெற்ற இதன் சூட்டிங் தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யாவுடன் ரகுல் பரீத் சிங், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

தென்னிந்திய நடிகர்களில் தனுஷ் முதலிடம்.; புதிய சாதனை

தென்னிந்திய நடிகர்களில் தனுஷ் முதலிடம்.; புதிய சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush reached 8 million followers in Twitter and He became first in Sound Indian actorsகோலிவுட்டில் நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் தனுஷ்.

இளம் வயதிலேயே தேசிய விருது பெற்றதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இதனையடுத்து பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அமிதாப் பச்சன் உடன் இணைந்து ஷமிதாப் படத்திலும் நடித்தார்.

இதனையடுத்து ஹாலிவுட் படத்திலும் நடித்தார். இதனால் நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் தன் படங்களின் தகவல்கள் ட்விட்டரில் பதிவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவரை ட்விட்டரில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது 8 மில்லியனை கடந்துள்ளது.

அதாவது 80 லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டரில் பின்பற்றுகின்றனர்.

இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் பாலோயர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீசாக உள்ளது.

Dhanush reached 8 million followers in Twitter and He became first in Sound Indian actors

More Articles
Follows