முதல் படத்திற்கே சிறந்த நடிகர் விருது பெறும் சிவகார்த்திகேயன்

முதல் படத்திற்கே சிறந்த நடிகர் விருது பெறும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikean won TamilNadu State Best actor special award for 2011சின்னத்திரையில் கலக்கிய சிவகார்த்திகேயன் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.

அட இதையே எத்தன வருசத்துக்குத்தான் சொல்லுவிங்க பாஸ்.? என்கிறீர்களா? (வெயிட் விஷயத்துக்கு வர்றோம்.)

சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமான முதல் படம் மெரினா.

இவர் அறிமுகமான முதல் படமே தற்போது இவருக்கு விருதை பெற்றுத் தந்துள்ளது.

நேற்று இரவு 2009 முதல் 2014 வரை ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

அதில் சிறந்த நடிகர் சிறப்பு விருதை மெரினா படத்திற்காக பெற்றுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் அதே ஆண்டிற்கான சிறப்பு திரைப்பட விருதையும் இப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் 2012ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. ஆனால் இது சென்சார் செய்யப்பட்ட ஆண்டை கணக்கிட்டு விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Sivakarthikean won TamilNadu State Best actor special award for 2011

8 வருடங்களுக்கு பிறகு தமிழக அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு

8 வருடங்களுக்கு பிறகு தமிழக அரசின் சினிமா விருதுகள் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TamilNadu State award announcement for Film Industryகடந்த 8 வருடங்களாக தமிழ் சினிமாவிற்கு விருதுகள் அறிவிக்கப்படவில்லை.

எனவே தற்போது 2009 முதல் 2014ம் ஆண்டு (6 ஆண்டுகளுக்கான விருதுகள்) வரையிலான தமிழ் திரைப்பட விருதுகளை அறிவித்ததுள்ளது தமிழக அரசு.

சிறந்த படம்

  • 2009 – பசங்க
  • 2010 – மைனா
  • 2011 – வாகை சூடவா
  • 2012 –  வழக்கு 18/9
  • 2013 – ராமானுஜன்
  • 2014 – குற்றம் கடிதல்

சிறந்த நடிகர்–

  • கரண் (2009)
  • விக்ரம் (2010),
  • விமல் (2011),
  • ஜீவா (2012),
  • ஆர்யா (2013)
  • சித்தார்த் (2014)

சிறந்த நடிகை

  • 2009 – பத்ம பிரியா
  • 2010- அமலா பால்
  • 2011- இனியா
  • 2012 –  லட்சுமி மேனன்
  • 2013 – நயன்தாரா
  • 2014 – ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறந்த இயக்குநர்

  • சிறந்த இயக்குநர் வசந்தபாலன் (2009),
  • பிரபுசாலமன் (2010),
  • ஏ.எல்.விஜய் (2011)
  • பாலாஜிசக்திவேல் (2012),
  • ராம் (2013)
  • ராகவன் (2014)

சிறந்த பாடலாசிரியர்

  • யுகபாரதி (2009),
  • பிறைசூடன் (2010),
  • முத்துலிங்கம் (2011)
  • நா.முத்துக்குமார் (2012),
  • நா.முத்துக்குமார் (2013)
  • நா.முத்துக்குமார் (2014)

சிறந்த இசையமைப்பாளர்

  • சுந்தர்சிபாபு (2009),
  • யுவன்சங்கர்ராஜா (2010),
  • ஹாரிஸ் ஜெயராஜ் (2011)
  • இமான் (2012),
  • ரமேஷ் விநாயகம் (2013)
  • ஏ.ஆர்.ரஹ்மான் (2014)

சிறந்த குழந்தை நட்சத்திரம்

  • கிஷோர், ஸ்ரீராம் (2009),
  • அஸ்வத்ராம் (2010),
  • சாரா (2011)
  • சாதனா (2013)
  • விக்னேஷ், ரமேஷ் (2014)

சிறந்த நகைச்சுவை நடிகர்

  • கஞ்சா கருப்பு (2009),
  • தம்பி ராமையா (2010),
  • மனோ பாலாவுக்கு (2011)
  • சூரி (2012) சத்யன் (2013)
  • சிங்கமுத்து (2014)

சிறந்த நடன இயக்குநர்

  • தினேஷ் (2009),
  • ராஜு சுந்தரம் (2010),
  • லாரன்ஸ் (2011)
  • பிரிஜூ மகராஜ் (2012)
  • ஷோபி (2013)
  • காயத்ரி ரகுராம் (2014)

TamilNadu State award announcement for Film Industry

 

 

ஒரே ரூட்டை குறி வைக்கும் மெர்சல்-கருப்பன்..?

ஒரே ரூட்டை குறி வைக்கும் மெர்சல்-கருப்பன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vijay sethupathiஅட்லி இயக்கி வரும் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

அதில் ஜல்லிக்கட்டு காளையுடன் விஜய் நிற்பது போன்ற படம் இடம் பெற்றிருந்தது.

இதில் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய்சேதுபதி நடித்துவரும் கருப்பன் படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியானது.

இதிலும் ஜல்லிக்கட்டு காளையுடன் விஜய்சேதுபதி போஸ் கொடுத்துள்ளார்.

எனவே மெர்சல் மற்றும் கருப்பன் படங்கள் ஒரே ரூட்டில் பயணிக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கருப்பன் படத்தை ஆர். பன்னீர் செல்வம் இயக்க, டி. இமான் இசையமைத்து வருகிறார்.

The Connection between Mersal and Karuppan

ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்; தெறிக்க விடுவாரா அர்ஜெய்.?

ஒரே நாளில் 2 படங்கள் ரிலீஸ்; தெறிக்க விடுவாரா அர்ஜெய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjaiபழனி மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகர் அர்ஜெய்.

இவர் வில்லனாக நடித்துள்ள பண்டிகை ‘ மற்றும் ‘திரி’ ஆகிய இரண்டு படங்களும் நாளை ரிலீஸ் ஆகிறது.

ஆக்ஷன் த்ரில்லரான பண்டிகையில் கிருஷ்ணா மற்றும் ஆனந்தியும், அரசியல்-குடும்ப படமான திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியும் நடித்துள்ளனர்.

இது குறித்து அர்ஜெய் பேசுகையில்…

”நடிப்பதிற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு 2009 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தேன்.

எனது பெயர் ‘அர்ஜெய்’ என்பதற்கு குறிக்கோள், சமாதானம் என்று பொருள். எனது பெயரின் அர்த்தங்களே எனக்கு முன்னேற்றத்தியும் பொறுமையும் தருவதாக நம்புகிறேன்.

‘நான் சிகப்பு மனிதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ போன்ற படங்களில் சின்ன சின்ன வில்லன் வேடங்கள் செய்தேன். பிறகு ‘எமன்’ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்தேன்.

அதன் பிறகு ‘தெறி’ படத்தில் ஒரு சிறு வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது.

திரியில் அமைச்சரின் மகனாகவும், பண்டிகை ஒரு சட்டவிரோத நிலத்தடி சண்டைகள் பற்றிய படம் என்பதால், ஹீரோ கிருஷ்ணாவுடன் மோதும் பிரதான பைட்டராக நடித்துள்ளேன்.

பண்டிகையின் இயக்குனர் பெரோஸ் அவர்களின் தேவைக்கேற்ப இணங்க ‘ Mixed Martial Arts’ பயின்றேன்.இப்படத்திற்காக அன்பு மற்றும் அறிவு மாஸ்டரின் சண்டை காட்சியமைப்பு அற்புதமாக வந்துள்ளது.

ஹீரோ கிருஷ்ணா அவர்கள் எனக்கு கொடுத்த ஊக்கமும் ஒத்துழைப்பும் மிக பெரியது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பண்டிகை மற்றும் திரி எனது நடிப்பு வாழ்க்கையை அடுத்த லெவெலுக்கு கொண்டு போகும் என நம்புகிறேன்.

இவ்விரண்டு படங்களில் எனது உழைப்புக்கும் நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . நல்ல கதாபாத்திரங்கள் செய்து குணச்சித்திர நடிகராக சாதிக்கவும் ஆசை படுகிறேன்.

எல்லா வகையான சவாலான மற்றும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். நான் கெட்டவனாக நடித்திருந்தாலும், எனது வாழ்வில் ஊக்கத்திற்கு ‘திரி’யும் , கொண்டாடுவதற்கு ‘பண்டிகை’யும் மிக அவசியம்.

இவ்விரண்டு படங்களிலும் கிருஷ்ணா மற்றும் அஸ்வினுக்கு வில்லனாக நடித்திருந்தாலும் , நிஜ வாழ்வில் அவர்கள் இருவரும் தான் என்னை கிண்டல் செய்து விளையாடுவார்கள்.

இருவரும் எனக்கு அவ்வுளவு நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர். என்றார் அர்ஜெய்.

அர்ஜெயின் இரண்டு படங்களும் வெற்றிப் பெற வாழ்த்துவோம்.

Arjai starring Pandigai and Thiri releasing on 14th July 2017

arjai with krishna ashwin

பாவனா கடத்தலில் கைதான திலீபுக்கு கலாபவன் மணி மரணத்திலும் தொடர்பு

பாவனா கடத்தலில் கைதான திலீபுக்கு கலாபவன் மணி மரணத்திலும் தொடர்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bhavana Kidnap case arrested Dileep in connection with Kalabhavan Manis deathநடிகை பாவனாவின் கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் சில தினங்களுக்கு முன் கைதானார் நடிகர் திலீப்.

அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் இவர் மீது புதிய குற்றச்சாட்டாக கலாபவன் மணி மரணத்திலும் தொடர்பிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் இயக்குனர் பைஜூ கொட்டாரக்கரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கலாபவன்மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிருஷ்ணன் பேசியதாவது…

தனது சகோதரர் மரணம் தொடர்பான விசாரணை சரியான திசையில் செல்லவில்லை என்றும், நடிகர் திலீபுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கலாபவன்மணி மரணத்தில் திலீபுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஒரு பெண் தொலைபேசியில் தெரிவித்ததாக இயக்குனர் பைஜூ கொட்டாரக்கரா தெரிவித்துள்ளார்.

எனவே, கலாபவன் மணியின் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

Bhavana Kidnap case arrested Dileep in connection with Kalabhavan Manis death

விவேகம் படத்தின் 3வது பாடல் சீக்ரெட்டை அவிழ்த்த அனிருத்

விவேகம் படத்தின் 3வது பாடல் சீக்ரெட்டை அவிழ்த்த அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith anirudhசிவா இயக்கி, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விவேகம்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்வைவா மற்றும் தல விடுதலை ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகிவிட்டன.

இவை இரண்டும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதால், 3வது பாடல் எப்படியிருக்கும் என ரசிகர்கள் காத்து கிடந்தனர்.

இந்நிலையில் 3வது பாடலானது கர்நாடிக் மியூசிக் போல நல்ல இதமான ராகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

இதை அனிருத்தே தெரிவித்து இருக்கிறார்.

மேலும், விவேகம் படத்தில் அஜித் கலக்கி இருக்கிறார்.

படத்தை பார்க்கும் ரசிகர்கள் வித்தியாசமாக உணர்வார்கள்.

இயக்குனர் முழு சுதந்திரம் கொடுத்துவிட்டதால்,  தல விடுதலை மாதிரியான பாடல்களை என்னால் உருவாக்க முடிகிறது’ என்றும் தெரிவித்துள்ளார்.

Anirudh revealed the secrets of Vivegam 3rd Song

More Articles
Follows