BREAKING சிம்புவின் மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

BREAKING சிம்புவின் மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus Maanadu cast and crew news updatesசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவுள்ள மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தில் இருந்து கால்ஷீட் சொதப்பல் காரணமாக சிம்புவை நீக்குவதாக அறிவித்திருந்தார் சுரேஷ் காமாட்சி.

ஆன்மிகத்தை அடுத்து பாக்ஸிங்கில் இறங்கிய STR

ஆனால் சில கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மீண்டும் சிம்பு இந்த படத்தில் இணைந்துள்ளார் என அறிவித்தனர்.

இந்த நிலையில் சிம்பு உடன் இணைந்துள்ள நடிகர்கள் பற்றிய விவரங்களை தற்போது அறிவித்து வருகின்றனர்.
அதன்படி யுவன் சங்கர் ராஜா இசையைமக்கிறார்.

இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்ஏ. சந்திரசேகர் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

Simbus Maanadu cast and crew news updates

சினிமாவுக்கு ஆப்பு.; தயாரிப்பாளர்கள் & தியேட்டர்கள் உரிமையாளர்கள் மோதல்

சினிமாவுக்கு ஆப்பு.; தயாரிப்பாளர்கள் & தியேட்டர்கள் உரிமையாளர்கள் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cinema Producers and Theater owners clash in V4 Awards event‘வி4 எம்.ஜி.ஆர்., – சிவாஜி 2019’ சினிமா விருது வழங்கும் விழா, சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது.

இதில் திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வழங்கிய கலைஞர்களுக்கும், படங்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மற்றும்
மக்கள் தொடர்பாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன் அவர்கள் பேசியதாவது…

”ஒரு படம் ரிலீசாகி குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு பிறகே இணையத்தளங்களில் தயாரிப்பாளர்கள் வெளியிட வேண்டும்.

ஆனால் 1 மாதத்தில் இணையதள, ‘ஆப்’களில், தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.

இதனால், அதில் பார்த்துக் கொள்ள மக்கள் தீர்மானித்து தியேட்டருக்கு வர மக்கள் விரும்புவதில்லை. தயாரிப்பாளர்கள் இந்த முடிவை
மாற்றிக் கொள்ள வேண்டும்,” என்றார்.

இவருக்கு அடுத்து பேசிய பிரபல தயாரிப்பாளர் தாணு… ”திரையரங்க வசூலில், தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கை வழங்கினால், நாங்கள் ஏன், ‘ஆப்’களுக்கு படத்தை விற்கப் போகிறோம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த கருத்து மோதல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முன்பே 30 நாட்களுக்குள், ‘ஆப்’களில் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்களின் அடுத்தடுத்த படங்களுக்கு, தடை விதிப்போம்’ என, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Cinema Producers and Theater owners clash in V4 Awards event

ரஜினி நடிக்க வேண்டிய ‘ஞானச் செருக்கு’ படம்… – தரணி ராசேந்திரன்

ரஜினி நடிக்க வேண்டிய ‘ஞானச் செருக்கு’ படம்… – தரணி ராசேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gnanserukku director Tharani rajendran talks about Rajinikanthஇயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச்செருக்கு’.

ஓவியர் வீரசந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

தரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் என்றாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர்.. பொறியியல் படிப்பை படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது.

இதோ அவரே இயக்குநரான அனுபவங்களையும், ஞானச்செருக்கு உருவான விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்..

“பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது.. அதன்பிறகு ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்..

சினிமாவில் உதவி இயக்குநராக சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்..

ஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீரசந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்..

இந்தக்கதையை படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்று கூட பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்து பார்ப்போம் என்று நினைத்தேன்.. அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்த கதையை கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று கூறினார்.

எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்த படத்தை தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.. அந்த படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்த சமயத்தில் விலகிவிட்டனர்.

அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் போட்டு இந்த படத்தை எடுத்து முடித்தோம். இன்னும் சரியாக சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் முறையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்கு தெரியாது ஆனால் படப்பிடிப்பு நடத்த தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்து திட்டினார்.

பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம் எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாக படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்..

ஓவியர் வீரசந்தானம் கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்த படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று சொல்லி விட்டார்..

இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்த படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட்..

இந்த படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது.

அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்த படத்தின் வேலைகளை முடித்தேன்.. இந்த படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தின் மதிப்பு பற்றி வெளியே தெரிய வேண்டும், அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்..

நான் எடுத்துள்ளன கமர்சியல் படம்தான்.. ஆனாலும் இந்த படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன்.. கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் சிறந்த படமாக இதை அங்கீகரித்துள்ளன.. இந்த படத்திற்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன..

இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த படத்தை பார்த்துவிட்டு என்னை கட்டிப்பிடித்து கைகொடுத்து பாராட்டினார். பாரதிராஜாவைப் பொருத்தவரை இதுவரை பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜாவிடம் மட்டுமே கை கொடுத்து வாழ்த்தியுள்ளாராம்.

அதன் பிறகு என்னிடம் கைகொடுத்து வாழ்த்தியுள்ளதாக மற்றவர்கள் சொன்னபோது எனக்கு இதுவே மிகப்பெரிய விருது பெற்றது போல இருந்தது. எந்தஅளவிற்கு இந்த படம் அவர் மனதை பாதித்திருந்தால் எனக்கு இப்படிப்பட்ட ஒரு கவுரவத்தை அளித்திருப்பார்.

அவர் மட்டுமல்ல, எழுத்தாளர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த படத்தைப் பார்த்து பாராட்டி உள்ளார்கள்.

இது வெகுஜன படம்தான்.. இந்த படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன.. 80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்த படம்..

இந்த சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படி பார்க்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப்பொருத்தமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு முழுக்க முழுக்க கமர்சியல் படம்தான் இது.

குடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்காது.. காரணம் நான் குப்பை படத்தை எடுக்கவில்லை.. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்..

நல்ல படத்தை திரையிடக்கூடாது என்று எந்த தியேட்டர்காரர்களும் நினைப்பதில்லை… நல்ல படம் என்பதை அவர்களிடம் நாம் தான் சரியாக கொண்டு செல்லவேண்டும்.. அவர்களுக்கும் வியாபாரம், குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா..? அதனால் அவர்களை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை..

இதற்கடுத்த எனது படங்கள் கமர்ஷியலாகவும், அதேசமயம் எனக்கான அடையாளமாகவும் இருக்கும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.. விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று கூறினார் தரணி ராசேந்திரன்.

ஃஃபார்ட்சூன் ஃப்ரேம்ஸ் சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.

Gnanserukku director Tharani rajendran talks about Rajinikanth

சிவசாமியாக என்னை தேர்வு செய்த வெற்றிமாறனுக்கு நன்றி.. – தனுஷ்

சிவசாமியாக என்னை தேர்வு செய்த வெற்றிமாறனுக்கு நன்றி.. – தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush talks about his character in Asuran 100 days success meetதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம், அம்மு அபிராமி, கென் கருணாஸ், ஜிவி.பிரகாஷ், ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தனுஷ் பேசியதாவது,

“இது மறக்க முடியாத நிகழ்ச்சி. இது நன்றி சொல்கின்ற மேடை. தாணு சாருக்கு என் நன்றி. வெற்றிமாறனுக்கும் எனக்கும் அவர் கொடுத்த சுதந்திரம் தான் அசுரன் உருவெடுத்ததிற்கு காரணம்.

ஜிவிக்கு என்னுடைய நன்றி. இந்தபடத்தின் பின்னணி இசையில் தான் படத்தின் 25% சதவிகிதம் இருக்கிறது.வேல்ராஜ் அவர்களின் உழைப்பு மிகவும் பெரிது. என் உடன் சேர்ந்த நடித்த எல்லா நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. அது ஒரு கனாக்காலம் சூட்டிங்ல ஒரு காட்சி நடிக்கணும்.

வெற்றிமாறனை பண்ணச் சொல்லுங்க. அதைப்பார்த்து நடிக்கிறேன் என்று சொன்னேன். உடனே வெற்றி கையில் இருந்த பேடைப் போட்டு பிரமாதமாக நடித்துக் காட்டினார். நான் அதன்பிறகு நடித்தேன். அன்றில் இருந்து இன்றுவரை நானும் வெற்றியும் சகோதரராக இருந்து வருகிறோம்.

சிவசாமி கதாபாத்திரத்தை என்னை வைத்து இயக்க முடியும் என்று முடிவு செய்த வெற்றிமாறனுக்கு நன்றி. இந்தப்படம் ரிலீஸாகும் போது நான் ஊரில் இல்லை.

எனக்கு ரிசல்ட் என்னனு தெரியல. கஷ்டமா இருந்தது. அப்ப தான் எனது அம்மா தொலைபேசியில் தொடர்புகொண்டு பெரிய வெற்றி அடையும் என சொல்கிறார்கள் என சொன்னார். .ஆனால் நீ தூரமா இருக்கியேப்பா அப்படினு சொன்னாங்க. அப்ப தான் நான் சொன்னேன். வெற்றி என் பக்கத்திலேயேதான் தான் இருக்கும்மான்னு “நான் வெற்றிமாறனைச் சொன்னேன். இது எல்லோருக்குமான வெற்றி. வெற்றிமாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும். நமக்கு எல்லாம் நல்லாகவே முடியும்.” என்றார்.

வெற்றிமாறன் பேசியதாவது,

“படம் தயாராகி வெளி வருவதற்குக் நிறைய மிஸ் அண்டெர்ஸாட்டிங் இருக்கும். அதையெல்லாம் தாண்டி இந்தப்படம் 100 நாள் ஓடி இருக்கிறது. ஒரு படம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். அதற்கான ஸ்பேஸை மட்டும் நாம் கொடுத்தால் போதும். ஒரு படத்தின் கமர்சியல் சக்ஸஸ் என்பது விபத்து தான். நாம் அதற்காக உழைத்தால் மட்டும் போதும். நிறைய பேர் எனக்கு பிரஷர் தரப்பட்டராகச் சொன்னார்கள். ஆனால் அப்படி அல்ல. இந்தப்படத்தின் கமர்சியல் சக்ஸஸுக்கு பத்திரிகையாளர்கள் பெரும் காரணம்.

எனக்கு ரொம்ப கோபம் வரும். அதையெல்லாம் உதவி இயக்குநர்கள் மேல் காட்டுவேன். அவங்களுக்கு நன்றி. என்னோட இயலாமையை தான் உங்களிடம் கோபமாகக் காட்டுவேன் என்று உதவி இயக்குநர்களிடம் சொல்லிக் கொள்கிறேன். தனுஷ் எல்லாப்படத்தில் இருந்தும் இந்தப்படத்தில் ஒருபடி மேல் தான். இந்தப்படத்திற்கு அவர் கொடுத்த கமிட்மெண்ட் ரொம்ப அதிகம்.

எமோஷ்னலா ஒரு விசயத்தை கேரி பண்றதுலாம் ரொம்ப பெருசு. இந்த கதாபாத்திரத்தை அவர் பண்ணியதால் தான் இவ்வளவு சிறப்பா வந்திருக்கிறது. தாணு சார் ஆரம்பத்தில் இருந்தே நல்ல கூலாக மெயிண்டெண்ட் செய்தார். பிரகாஷ்ராஜ் சார் சொன்ன நேரத்தில் சரியாக வருவார். கேமராமேன் வேல்ராஜ் நான் என்ன நினைக்கிறேனோ அதை எடுத்துக் கொடுப்பார். ஜிவி கொடுத்த எனர்ஜி கமர்சியல் சக்ஸஸுக்கு முக்கியக் காரணம்” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது,

“மேடையில் வீற்றிருக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் எம் வணக்கம். தம்பி தனுஷ் வேலையில்லா பட்டதாரி படம் சமயத்தில் வெற்றிமாறம் அவர்களோடு படம் பண்ணலாம் என்று சொன்னார். அந்தக் காலத்தில் இருந்தே நாங்கள் நல்ல பழக்கம். எஸ்.பி முத்துராமனுக்கு பிறகு என் மனதை கொள்ளை கொண்டவர் வெற்றிமாறன்.

தன் படத்தில் வெற்றிமாறன் உழைத்த ஒவ்வொரு நாளும் என்னை வியக்க வைத்தது. சில காட்சிகளை வெற்றிமாறன் போட்டுக்காட்டும் போதெல்லாம் இது பெரிய வெற்றி அடையும் என்று நம்பினேன். ரிலீஸ் தேதி அறிவித்ததும் வெற்றிமாறன் பதட்டம் ஆனார். என் கண்கள் பனிக்கும் நன்றியை வெற்றிமாறனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் தனுஷுக்குமான தொடர்பை வலுப்படுத்தியது தம்பி அன்புச்செழியன். சிவாஜி சாருக்குப் பிறகு தனுஷின் நடிப்பு பிரம்பிக்க வைக்கிறது.

கேரளாவில் படம் பார்த்த அத்தனை பெரிய நடிகர்களும் ஒரே வார்த்தையில்” தனுஷை தவிர யாராலும் இப்படத்தில் நடிக்க முடியாது” என்றார்கள். நடிகர் திலகத்திற்குப் பிறகு தனுஷ் தான். ரஜினியிடம் நான் இந்தப்புள்ள நமக்கு கிடைத்த பொக்கிசம் என்றேன். அவரும் தனுஷ் கால்களில் விழும் சீனில் நானே நடிக்கலாமா என்று நினைத்தேன்” என்றார். இவ்வாறு தாணு பேசினார்.

அன்புச்செழியன் பேசியதாவது,

“அசுரன் படம் தொடங்கிய காலத்தில் இருந்தே படத்தைத் தெரியும். தாணு அண்ணன் பிரம்மாண்டமான படங்களை எடுத்தவர். நான்கு தலைமுறையாக அவர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இந்த வெற்றி. அவரின் நாணயம் மிகவும் பெரிது. சினிமாவில் வஞ்சகம் துரோகம் உண்டு.

அப்படி இருந்த போதும் அண்ணன் நிலைத்து நிற்கிறார். இந்தப்படம் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்று வெற்றிமாறனுக்கு பிரஷர் கொடுத்தார் அண்ணன். வெற்றிமாறன் இந்தப்படத்தை இசையோடு கொண்டு வந்து காட்டினார். ஜிவியின் இசை வெற்றியின் உழைப்பு எல்லாம் தான் இப்படி ஒரு வெற்றி. தனுஷ் பிறவி நடிகர்.

இந்தப்படம் அவரின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டு. படத்தை ரிலிஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன். வெற்றி அடையும் என்று நினைத்தேன். ஆனால் இப்படியொரு வெற்றி அடையும் என்று நினைக்கவில்லை. தனுஷ் நம் நாட்டின் அடையாளம்” என்றார்.

அபிராமி ராமநாதன் பேசியதாவது,

“1985-ல யார்னு ஒரு படம் எடுத்தார் தாணு. படம் ஓடும்போது தியேட்டர்க்குள் வந்தார். அந்தப்படத்தில் ஒருத்தருக்கு சாமி வருவதற்கு தாணுவே ஏற்பாடு செய்திருந்தார். அதுவே தாணுவின் விளம்பரத்திற்கு எடுத்துக்காட்டு. தனுஷ் தவிர வேறு எந்த நடிகராலும் இந்தப்படத்தில் நடிக்க முடியாது.

வெற்றிமாறன் தனுஷ் ஆகியோரிடம் இருக்கும் பணிவு அவர்களை உயர்த்திக் கொண்டே தான் இருக்கும். இந்தப்படத்தில் வெற்றிமாறன், தனுஷ், ஜிவி ஆகியோருக்கு தேசிய விருது கிடைக்கும். அதற்கான முயற்சிகளை தாணு எடுக்க வேண்டும்” என்றார்.

கென் கருணாஸ் பேசியதாவது,

“முதல் நன்றி வெற்றி சாருக்கு. அவரால் தான் நான் இங்கே இருக்கேன். தாணு சார் என்னை மிகவும் உற்சாகப் படுத்துவார். தனுஷ் சார் கூட அதிக சீன் இருப்பதால் பயமா இருந்தது. அவர் தான் எனக்கு ப்ரீ டைம் கொடுத்து என்கிரேஜ் பண்ணார். என்னை ப்ரண்ட்லியாக பார்த்துக் கொண்டார்கள். அனைவருக்கும் பெரிய நன்றி” என்றார்.
பாலாஜி சக்திவேல் பேசியதாவது,

“இந்த நூறாவது நாள் விழா சும்மா பேசுவதில்லை. தியேட்டர் அதிபர்கள் உள்பட அனைவரின் முன்னிலையில் நடத்துவது தான் சிறப்பு. அதற்கு களம் அமைத்துத் தந்த கலைப்புலி எஸ்.தாணு அவர்களுக்கு நன்றி. இந்த அசுரன் படம் மிக முக்கியமான படம். தமிழ்சினிமாவின் போக்கில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அதற்கான உழைப்பு என்பது வெற்றிமாறன் தனுஷிடம் ஜெனியூனாக இருந்தது. ரைட் சென்ஸில் இயக்குநர் இப்படத்தை இயக்கி இருந்தார்.

சில படம் விமர்சனம் ரீதியாக நல்ல பெயர் எடுக்கும். வசூல் இருக்காது. சில படம் வசூல் குவிக்கும் ஆனால் நல்ல விமர்சனம் இருக்காது. ஆனால் அசுரனில் இரண்டுமே நடந்தது. என்னை நடிக்க வைத்தது வெற்றிமாறன் தான். எனக்கு நடிப்பே வராது என்றிருந்தேன். வெற்றிமாறனுக்குப் பெரிய நன்றி. இந்த வெற்றியில் பங்கு கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது,

“தாணு சாருக்கு வாழ்த்துகள். அவரின் கரியரில் இது மிகப்பெரிய வெற்றிப்படம். எந்தப்படம் வணிக ரீதிதாகவும், விமர்சன ரிதீயாகவும் வெற்றிப்பெறுகிறதோ அது காலத்தால் மறக்க முடியாததாக இருக்கும்.

அசுரன் அப்படியான படம். சென்ற வருடத்தின் ஆகச்சிறந்த நடிகர் தனுஷ் தான். அதில் சந்தேகமே இல்லை. வெற்றிமாறன் தான் சென்ற ஆண்டின் சிறந்த இயக்குநர். இப்படி மிகச்சிறந்த விசயங்களை கொண்டுள்ள படம் அசுரன். இந்தப்படத்தின் வெற்றி படத்தின் டீசரில் உள்ள வசனத்தைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது.

இந்தப்படத்தோடு வேறு சில படங்களும் வெளியானது. ஆனாலும் அசுரன் படத்திற்கு பெரிய வெற்றி கிடைத்தது. ஒரு தயாரிப்பாளர் வெற்றி அடையணும் என்று வெற்றிமாறன் அதிகம் மெனக்கெடுவார். இந்தப்படத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர்.” என்றார்.

இயக்குநர் வெங்கடேஷ் பேசியதாவது,

“அசுரன் படத்தில் நடிக்க வெற்றிமாறன் அழைத்ததும் பயத்தோடு தான் சென்றேன். தனுஷுடன் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் நடிப்புக்கு எப்ப ரெடியாவார் என்றே தெரியாது. வெற்றிமாறனின் வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு அவ்வளவு தெரியும். இந்த வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பது எனக்கு ஸ்பாட்லே தெரியும். இந்த வெற்றியில் என்னையும் ஒரு பங்காகச் சேர்த்துக்கொண்ட தயாரிப்பாளர் தாணு சார், வெற்றிமாறன் தனுஷ் ஆகியோருக்கு நன்றி” என்றார்.

விழாவில் பேசிய, ரோஹினி பன்னீர் செல்வம் பேசியதாவது,

“இந்த விழாவில் பேசுவது இன்பம்.இப்படியான சிறந்த படங்களைக் கொடுப்பதில் கலைப்புலி எஸ் தாணு தான். உண்மையாக 100 நாட்கள் ஓடி நல்ல வெற்றியைக் கொடுத்த படம் அசுரன் மட்டும் தான். தம்பி தனுஷ் மீது உள்ள மரியாதை மிகவும் கூடிவிட்டது. இந்த படத்தை தமிழ்நாட்டில் யாருமே பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். எங்கள் தியேட்டரில் மிகவும் சந்தோஷமாக நாங்கள் ஓட்டிய படம் இது” என்றார்.

விழாவின் இறுதியில் படக்குழுவினர் அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது.

BREAKING முரசொலி வச்சிருந்தா திமுக; துக்ளக் வச்சிருந்தா அறிவாளி.. – ரஜினி

BREAKING முரசொலி வச்சிருந்தா திமுக; துக்ளக் வச்சிருந்தா அறிவாளி.. – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth slams DMK Murasoli at tughlaq 50th year eventதுக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சற்றுமுன் நடைபெற்றது.

இதில், துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…

“முரசொலி பத்திரிகை வைத்திருந்தால் திமுகக்காரர் என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்.

சோ சார் அவர்கள் ஒரு ஜீனியஸ். அவர்கள் அனுபவத்தாலும் படிப்பாலும் ஜீனியஸ் வருவதில்லை. அவர்கள் பிறக்கும்போதே

ஜீனியஸ்காத்தான் பிறப்பார்கள். அவர்கள் தங்கள் அடையாளத்தை இந்த சமுதாயத்தில் காட்ட சில காலம் ஆகும்.

அவர் ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கவில்லை. துக்ளக் என்ற இனத்தை உருவாக்கினார்.

சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர் இருந்தனர்.

அதில் ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் பக்தவச்சலம் அவர்கள்.

இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தபோது அதை எதிர்த்து துக்ளக் பத்திரிகையில் கருப்பு அட்டை படம் போட்டவர் சோ.

அதன் மூலம் அவர் இந்தியளவிலும் பிரபலம் ஆனார்.

சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி” என்றார்.

Rajinikanth slams DMK Murasoli at tughlaq 50th year event

BREAKING பால் கதை சொல்லி மீடியாக்களுக்கு ரஜினி அட்வைஸ்

BREAKING பால் கதை சொல்லி மீடியாக்களுக்கு ரஜினி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini advice to media to give real news to publicதுக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சற்றுமுன் நடைபெற்றது.

இதில், துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது…

இன்றைய சமுதாயம் ரொம்ப கெட்டுப்போடியிருக்கு,

தற்போதைய சூழலில் சோ போன்ற சிறந்த பத்திரிகையாளர் அவசியம் தேவை.

வாழ்க்கையில் கவலைகள் அன்றாடம் வரும். அதை நிரந்தரமாக்கி கொண்டால் அவன் நோயாகி. கவலைகளை தற்காலிகமாக்கி கொண்டால் அவன் அறிவாளி.

உண்மையான ஊடகங்களுக்கு சமுதாய பொறுப்பு வேண்டும். நிஜத்தை அப்படியே மக்களிடம் கொடுக்க வேண்டும்.

பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும்.

பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது என மீடியாக்களுக்கு ரஜினிகாந்த் அட்வைஸ் செய்தார்.

Rajini advice to media to give real news to public

More Articles
Follows