ஆன்மிகத்தை அடுத்து பாக்ஸிங்கில் இறங்கிய STR

STR aka Simbu practice Boxing for Maanadu movieசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருந்தார் சிம்பு.

அவர் வழக்கம்போல செய்த கால்ஷீட் பிரச்சினைகளால் படத்தில் அவரை நீக்கினார் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இதன் பின்னர் மகா மாநாடு என படத்தை அறிவித்தார் சிம்பு. ஆனால் படம் அறிவிப்போடு நின்றது.

அதன்பின்னர் பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

படம் நல்லபடியாக முடிய வேண்டும் என விரதம் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டார் சிம்பு.

தற்போது ஐயப்பன் தரிசனம் முடித்துவிட்டு மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

அவர் பாக்ஸிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றை படத்தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

STR aka Simbu practice Boxing for Maanadu movie

Overall Rating : Not available

Latest Post