விநாயகர் சதுர்த்திக்கு சூர்யா – கார்த்தி தரும் ‘விருமன்’ விருந்து

விநாயகர் சதுர்த்திக்கு சூர்யா – கார்த்தி தரும் ‘விருமன்’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விருமன்’.

‘கொம்பன்’ பட வெற்றிக்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து ‘விருமன்’ படத்தில் முத்தையா – கார்த்தி இணைந்துள்ளனர்.

இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி & சாய்பல்லவி

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது ‘விருமன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி ‘விருமன்’ வெளியாகும் என அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா.

Suriya – Karthi’s treat to his fans

என்ன இதெல்லாம்.? சிந்திக்கவே முடியல..; ‘பீஸ்ட்’ க்ளைமாக்‌ஸ் காட்சி திடீர் ட்ரெண்ட்

என்ன இதெல்லாம்.? சிந்திக்கவே முடியல..; ‘பீஸ்ட்’ க்ளைமாக்‌ஸ் காட்சி திடீர் ட்ரெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் கடந்த ஏப்ரல் மாதம் 13ல் ரிலீசானது.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய விமானப்படை பைலட் சிவராமன் சஜன் என்பவர் பீஸ்ட் க்ளைமாக்ஸ் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

‘பீஸ்ட்’ வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன’ என பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள மற்றொரு ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி “என்ன இது? என் மூளை உணர்வு இழந்துவிட்டது. என்னால் சிந்திக்கவே முடியவில்லை. எல்லா லாஜிக்கும் முடிந்துவிட்டது” என பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து பலரும் பல கமெண்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

1,500 கிலோமீட்டர் வேகத்தில் ஜெட் விமானத்தில் பறக்கும் விஜய் எதிரே வரும் ஜெட் பெண் விமானிக்கு சல்யூட் அடிக்கிறார்.

மைக்ரோ செகண்ட்களில் கடந்துவிடும் வேகத்தில் எப்படி சல்யூட் அடிப்பார்?’

போர் விமானங்களை இயக்கும்போது பைலட்டுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் மாஸ்க், ஜெட்டின் ஒலியை எதிர்கொள்ள ஹெல்மேட் அணிவது கட்டாயம்.

ஆனால் விஜய்க்கு அதெல்லாம் தேவையில்லை போல என பலரும் ‘பீஸ்ட்’ க்ளைமாக்ஸ் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

What is all this.? can’t imagine; ‘Beast’ climax scene sudden trend

ரஜினி படத்தலைப்பில் புதிய படம்.; யூடியூப் சேனலால் விமலுக்கு வந்த வில்லங்கம்!

ரஜினி படத்தலைப்பில் புதிய படம்.; யூடியூப் சேனலால் விமலுக்கு வந்த வில்லங்கம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஓடியன் டாக்கீஸ்’ சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.( Thudikkum Karangal ).

1983ல் ஸ்ரீதர் இயக்கத்தில் இதே பெயரில் ஒரு படம் வெளியானது. ரஜினி ராதா நடித்த இப்படத்திற்கு எஸ்பி. பாலசுப்ரமணியம் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தை இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுளார்.. இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, ‘வெற்றிவேல்’ இயக்குனர் வசந்தமணி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர்.

கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றவர்.

இந்தப்படம் குறித்து இயக்குனர் வேலுதாஸ் கூறும்போது…

“இந்தப்படத்தில் யூடியூப் சேனல் நடத்தும் நிருபராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக சதீஷ் நடித்துள்ளார்..

ஒரு நிருபர் தன் வேலையை செய்கிறார். அதனால் அவருக்கு மிகப்பெரிய இடத்தில் இருந்து ஏற்படும் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

இதுவரை நகரத்து இளைஞனாக அதிகம் நடித்திராத ஒருவர் நடித்தால், அந்த கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், இந்த படத்திற்கு ஹீரோவாக விமலை தேர்வு செய்தோம்..

விமல் படப்பிடிப்பில் எங்களுக்கு அருமையாக ஒத்துழைப்பு தந்தார்.. நடிகர் சுரேஷ் மேனனும் ஒரு ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்பதால், எனக்கு இருக்கும் சுமையை புரிந்துகொண்டு, அதை எளிதாக்கும் விதமாக நடித்து கொடுத்தார்” என்கிறார்.

மும்பையை சேர்ந்த ‘இந்தியன் சகீரா’ என அழைக்கப்படும் சினேகா குப்தா இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

படத்தின் ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாக அந்தப்பாடல் இருக்கும்.

பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் நிழலாகவே, அவருடன் 23 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவரும், அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நகரத்து கதை என்பதால் சென்னையிலேயே 45 நாட்கள் மொத்த படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்மி ‘யாமிருக்க பயமே’ படத்தில் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல இந்தியில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் மூன்று படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்திற்கு பணியாற்றிய லாரன்ஸ் கிஷோர் இந்தப்படத்தின் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

‘சக்ரா ‘ படத்திற்கு பணியாற்றிய கண்ணன் இந்தப்படத்தின் கலை வடிவமைப்பை கையாண்டுள்ளார். படத்தில் இடம்பெறும் நான்கு சண்டை காட்சிகளையும் சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள்: விமல், மனிஷா, சுரேஷ் மேனன், சதீஷ் மற்றும் பலர்

தயாரிப்பு: ஓடியன் டாக்கீஸ் சார்பாக கே .அண்ணாத்துரை

இயக்கம்: வேலுதாஸ்

இசை: ராகவ் பிரசாத்

ஒளிப்பதிவு: ராம்மி

படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்

கலை: கண்ணன்

சண்டைப்பயிற்சி: சிறுத்தை கணேஷ்

மக்கள் தொடர்பு: KSK செல்வா

Actor Vimal gets Rajini film title ?

பாலியல் தொழிலாளியின் ஆட்டோகிராஃப்பை சொல்லும் 21 வயது இளம் இயக்குநர்

பாலியல் தொழிலாளியின் ஆட்டோகிராஃப்பை சொல்லும் 21 வயது இளம் இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ‘மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.

21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ’.

பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார்.

அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார்.

மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் சில குறிப்பிட்ட காலங்களை, ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் சஞ்சய், அத்தொழிலில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்த சூழலில், தனது இருட்டான பக்கங்களை மறைத்து, பத்து வயதே ஆன, ‘என் அப்பா யார் என்று சதா கேள்வி எழுப்பி வரும் மகனை வளர்த்தெடுக்க அவர் காட்டும் தாய்ப்பாசம் பார்ப்பவர்களை நிச்சயம் நெகிழவைக்கும்.

பிரத்யேகமாக ஓ.டி.டி. தளங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட இந்த ‘மாலைநேர மல்லிப்பூ’ மிக விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தயாரிப்பு நிறுவனம் ‘: an every frame matters production

தயாரிப்பு : விஜயலட்சுமி நாராயணன்

எழுத்து, இயக்கம்: சஞ்சய் நாராயண்

ஒளிப்பதிவு: நாய்துப் டோர்ஜி

இசை :ஹ்ரிதிக் சக்திவேல்

எடிட்டர் : சஞ்சய்

கலை இயக்குநர் : ஜெனித் பிரபாகர்

மக்கள் தொடர்பு : யுவராஜ் & முத்துராமலிங்கம்.

21-year-old young director making film of sex worker’s life

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித் இயக்கிய கேங்ஸ்டர் ஸ்டோரி ‘வேட்டுவம்’ லுக்

கேன்ஸ் பட விழாவில் ரஞ்சித் இயக்கிய கேங்ஸ்டர் ஸ்டோரி ‘வேட்டுவம்’ லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்”
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது.

இயக்குனர் பா. இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார்.

தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும்பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளிவந்தன.

இதனை தொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.

இந்த நிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார்.

இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ”வேட்டுவம்” எனும் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.

‘வேட்டுவம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித், தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கேங்ஸ்டர்கள் பற்றிய கதையாக உருவாகவிருக்கும் வேட்டுவம் படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

First Look poster of Pa Ranjith’s Vettuvam was released at Cannes film festival

நாலு வருஷமானாலும் நச்ன்னு டபுள் ரெக்கார்ட் செஞ்ச கமலஹாசன்

நாலு வருஷமானாலும் நச்ன்னு டபுள் ரெக்கார்ட் செஞ்ச கமலஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் பிரவேசம்.. கொரோனா ஊரடங்கு, ஆஸ்பத்திரியில் ஆப்ரேசன் என நான்கு வருடங்களாக கமல்ஹாசன் பிசியாக இருந்தார்.

எனவே அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது 4 வருடங்களுக்கு பிறகு மிகவும் எதிர்பார்ப்புக்குரிய விக்ரம் படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத்பாசில், காயத்ரி, ஸ்வஸ்திகா, காளிதாஸ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை வருகிற ஜீன் 3ஆம் தேதி வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது ரெட் ஜெயண்ட் நிறுவனம்.

‘விக்ரம்’ படத்தின் முதல் சிங்கிளான ‘பத்தல பத்தல’ பாடல் கடந்த வாரம் யு டியுப்பில் வெளியாகி தற்போது வரை 25 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

மேலும் கடந்த மே 15ஆம் தேதி இரவு 8 மணிக்கு ‘விக்ரம்’ பட டிரைலர் வெளியானது. அந்த டிரைலரும் தற்போது 25 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

ஒரே சமயத்தில் பத்தல பத்தல பாடலும் (27 மில்லியனை கடந்துள்ளது) ‘விக்ரம்’ பட டிரைலரும் 26 மில்லியன் பார்வைகைளைக் கடந்திருப்பது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

4 வருடமானாலும் நச்ன்னு டபுள் சாதனை செஞ்சிட்டாரு ஆண்டவரூ..

Kamal Haasan’s 2 new records for Vikram

More Articles
Follows