தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ‘மாநாடு’.
இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது.
இப்படத்தின் மாபெரும் வெற்றியால் தற்போது தெலுங்கு & ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.
இந்த நிலையில் நேற்றுடன் இந்த படம் நூறாவது நாள் என்ற சாதனையை எட்டியுள்ளது.
இந்த டிஜிட்டல் உலகில் வெற்றிகரமாக 2வது நாள்… வெற்றிகரமாக 3வது நாள்… என போஸ்டர்கள் – பேப்பர் விளம்பரங்கள் வருகின்றன.
அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கும் இந்த போஸ்டர்கள் டிசைன் சமீபத்தில் வந்தன.
எனவே 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தின் 100-வது நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்.
அப்போது அவர் ரசிகர்களுடன் செஃல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த வெற்றி சினிமாவிற்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. ரசிகர்கள் இல்லாமல் நானில்லை.
ரசிகர்களை சந்திப்பதாக இருந்த கூட்டம் தள்ளிப் போனது. எனவே தான் இப்போது ரசிகர்களை சந்திக்க வந்தேன்” என்றார் சிம்பு.
‘மாநாடு’ 100வது நாளையொட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விடுத்துள்ள அறிக்கையில்…:
“எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் துணிந்து இறங்கு எனத் தட்டிக் கொடுப்பவர்.
துணிந்து இறங்கி செய்த படம் மாநாடு. தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது.
அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரின் ஒத்துழைப்பால் மாநாடு நூறு நாட்களைத் தொட்டுள்ளது. இதயம் முழுக்க மகிழ்வுடன் இவ்வெற்றியை என் தாய் தந்தையருக்கு சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
STR celebrates 100 days of Maanaadu with his fans