நடிகர் மகத்-பிராச்சி மிஸ்ரா திருமணம்; சிம்பு நேரில் வாழ்த்து

நடிகர் மகத்-பிராச்சி மிஸ்ரா திருமணம்; சிம்பு நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu attends Mahat and Prachis weddingஅஜித்தின் மங்காத்தா, விஜய்யின ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத்.

இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

அதன்பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.

இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

சிம்புவின் மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

இதன் பின்னர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் சென்னையருகே உள்ள மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

நடிகர் சிம்பு திருமணத்திற்கு நேரில் சென்று மகத் மற்றும் பிராச்சி மிஸ்ராவை வாழ்த்தினார்.

Simbu attends Mahat and Prachis wedding

மிஷ்கின் கிட்ட லாஜிக் தேடாதீங்க; அவரது உலகம் வேற… – பாவா செல்லத்துரை

மிஷ்கின் கிட்ட லாஜிக் தேடாதீங்க; அவரது உலகம் வேற… – பாவா செல்லத்துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dont expect Logic in Mysskin movies says Pava ChellathuraiDouble Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன்
இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிதிருந்தனர்.

கடந்த வாரம் வெளியான இப்படம் விமர்சகர்களிடம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி, ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றியடைந்துள்ளது.

படம் முழுதும் குவிந்திருக்கும் குறியீடுகள் கொண்ட ஆழ்ந்த திரைக்கதை, உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனனின் வித்தியாச நடிப்பு என “சைக்கோ” படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதனையடுத்து “சைக்கோ” படக்குழு வெற்றியின் நிமித்தம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் பேசியது…

பத்திரிக்கை நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவே இந்த நிகழ்வு. இந்த படத்தை உதயநிதி நினைத்திருந்தால் அவரே தயாரித்திருக்கலாம் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

இப்படத்தை அழகாக வடிவமைத்து எடுத்ததற்கு மிஷ்கின் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றி.

நடிகர் பாவா செல்லத்துரை பேசியது…

எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் உயிருக்கு அதிகமான நேசிப்பையும், இந்தப்படம் நல்லா இல்லை என சரிபாதியாக எதிரெதிர் விமர்சனம் வந்தது இந்தப்படத்திற்குதான். மிஷ்கின் படங்களில் உலகம் வேறு. அவர் திரையில் வாழ்வை சீட்டுக்கட்டை போல் பிரித்து போடுகிறார். அதில் நீங்கள் லாஜிக் தேடக்கூடாது. இந்தப்படம் மிஷ்கின் படம். அவரது சாயல் தான் படம் முழுதும் இருக்கும். அவர் கதாப்பாத்திரங்களை வித்தியாசமாக அணுகுகிறார்.

பாண்டியராஜன், பாக்கியராஜ் என நமக்கு தெரிந்த நடிகர்களை நாம் அவர்களை பார்க்காத கோணத்தில் காட்டுகிறார். நேரடி வாசகர்களுக்கு இந்தப்படம் நிறைய தடுமாற்றங்கள் தரும். மிஷ்கின் இப்படத்திற்குள் பல நுட்பங்களை நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமா மறக்க முடியாத படம் தந்த என் நண்பன் மிஷ்கின் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

நடிகர் சிங்கம் புலி பேசியது….

எல்லா இயக்குநருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகருக்கும் இருக்கும். அந்த ஆசை இந்த ஆண்டு எனக்கு நிறைவேறியிருக்கிறது. மிஷ்கினை எப்படி அணுகுவது எனும் தயக்கம் இருந்தது.

ஆனால் வாய்ப்பு தேடி வந்தது. இப்போது அவரது படத்தில் நடித்தது பெருமை. என்னை எப்படி இப்படி மாற்றினார் எனத் தெரியவில்லை. அவர் சொன்னதை மட்டுமே செய்தேன். ஆனால் வித்தியாசமாக இருந்தது. இந்த ஆண்டில் எல்லோரும் ரசிக்கும் படத்தை தந்திருக்கிறார்.

சைக்கோவை வைத்து “கருப்பு கண்ணாடி” என படம் ஆரம்பிப்பதாக இன்று படித்தேன். இனி மிஷ்கின் பற்றி படங்கள் வரத்தான் செய்யும். அவர் வெற்றி பெற்றிருக்கிறார். நான் இந்தப்படத்தில் நடித்த அனைத்து காட்சிகளும் வந்திருந்தது. அவ்வளவு திட்டமிடலுடன் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் நடித்தது எனக்கு பெருமை. இப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஷாஜி பேசியது….

மிஷ்கினின் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில் நடிக்க கூப்பிட்டார். எனக்கு நடிக்க தெரியாது என்றேன். என் படத்தில் யாரும் நடிப்பதில்லை வாருங்கள் எனக் கூட்டிப்போனார். இந்தப்படம் லாஜிக் இல்லை என சொல்பவர்கள் மிஷ்கினுக்கு தெரியாமல் நடந்திருப்பாதாக நினைக்கிறார்கள் ஆனால் மிஷ்கின் படத்தில் மிஷ்கினுக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை.

இந்தப்படம் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. அதனால் தான் இத்தனை விமர்சனம் வருகிறது. இது ஒரு பரிட்சார்த்த முயற்சி. இப்படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி.

பாடலாசிரியர் கபிலன் பேசியது…

“உன்ன நினைச்சு, நீங்க முடியுமா” பாடல்கள் பற்றியே நிறைய பேச முடியும். மிஷ்கின் படங்கள் எல்லாவற்றிலும் நான் எழுதியிருக்கிறேன். அவர் ஒரு பன்முக கலைஞர். அவர் இலக்கியவாதியும் கூட, அவர் கூட பாடல் எழுதுவது எளிதாக இருக்கும்.

இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. உதயநிதிக்கு நேரடியாக முதல்முறை எழுதியுள்ளேன். படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி.

நடிகை ரேணுகா பேசியது…

இந்தப்படத்த பற்றி சொல்ல நிறைய இருக்கு. நாம நடிக்க ஆசைப்படுகிற இயக்குநர் பட்டியலில் மிஷ்கின் இருந்தார். ஆனா அவர் பேட்டிகள் பார்த்து அவர் மிக கண்டிப்பானவர் என நினைத்து பயந்திருந்தேன்.

ஆனால் சந்தித்ததும் நான் கண்டிப்பான ஆள் இல்லை என்றார். ஷீட்டிங்கில் குழந்தை மாதிரியே இருந்தார். நான் எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே நடிப்பேன் ஆனால் அதை கட்டுப்படுத்தி இயல்பாக நடித்தால் போதும் என்றார். இந்தப்படம் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் நன்றி.

வில்லன் நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி பேசியது….

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பது போல் எல்லாப்புகழுமே மிஷ்கினுக்கே. நான் ஒன்றுமே செய்யவில்லை மிஷ்கின் சார் சொன்னதை மட்டுமே செய்தேன். இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் வெற்றி பெற்றுள்ளது. ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உதய் அண்ணா மிகப்பெரிய மனது கொண்டவர் இப்படத்தில் எனக்கு மிகப்பெரிய இடம் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி.

நடிகை நித்யா மேனன் பேசியது.

இந்தப்படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தரமான சின்ன படங்கள் ஓடும்போதும், உண்மையான உழைப்பு ஜெயிக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மிஷ்கின் அவரது கதாப்பாத்திரங்களை மிக அழகாக வடிவமைக்கிறார். அவரை நம்பி ஒரு நடிகர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்தப் படத்தில் நிறைய கெட்ட வார்த்தை பேசும் கேரக்டர் ஆனால் நிஜத்தில் நான் கெட்ட வார்த்தை பேசியது கிடையாது. அவர் சொன்னதை அப்படியே செய்தேன். இந்தப்படம் நடித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உதயநிதி, மிஷ்கின் இருவரும் என்னை குழந்தை போல் பார்த்து கொண்டார்கள். இந்தப்படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியது…

வெற்றிப்படம் தந்து மூணு வருடம் ஆகிவிட்டது. இடையில் சில படங்கள் சரியாக போகவில்லை. அதெல்லாம் மோசமான படங்கள் இல்லை சுமாரான படங்கள் தான். இந்தப்படம் வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ராஜ்குமார் தான் ஹீரோ, நான் ஏதோ கொஞ்ச நேரம் வந்து போகிறேன் அவ்வளவுதான்.

இந்தபடத்தில் பங்கு கொண்ட இளையராஜா சார், பி சி ஶ்ரீராம் சார் இருவருக்கும் நன்றி. நானும் மிஷ்கின் சாரும் முன்னாடியே படம் செய்ய வேண்டியது. அதன் பின்னால் நிறைய கதைகள் இருக்கிறது. இந்தப்படத்தில் அது நடந்தது மகிழ்ச்சி.

இந்தப்படத்தில் அனைவருமே உதவியாளர்கள் போலவே வேலை செய்தார்கள். நடிகர் ராஜ்குமாரை முன்னால் இருந்தே தெரியும் என்னை விட இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்தது அவர்தான். அவருக்கு வாழ்த்துகள். நிறைய விமர்சனங்கள் வந்தது நல்லது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்தது சவாலாக இருந்தது. சைக்கோ 2 கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன் எல்லோருக்கும் நன்றி.

நடிகர் நரேன் பேசியது….

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. எல்லோரும் “இந்தப்படம் நல்லாருக்கு”, “பயங்கரமாக பயமுறுத்தியுள்ளார்” என்று சொன்னார்கள். அவர் படத்தில் நடிக்க போகும்போதே பயமாகத்தான் இருக்கும். இந்தபடம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் மிஷ்கின் பேசியது…

சித்திரம் பேசுதடி படம் முதல் இன்று வரை என்னை நல்லபடங்களில் ஆதரித்து மற்ற படங்களில் தலையில் குட்டி அரவணைக்கும் அனைவருக்கும் நன்றி. என் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் இளையராஜா சார் தான். என் எல்லா வெற்றிகளையும் அவருக்கு சமர்பிக்கிறேன். அவர் பாடல்கள் தான் சினிமாவுக்கு நான் வரக்காரணம்.

அவருக்கு என் நன்றி. என் தாய் வயிற்றில் பிறந்த தம்பியாக உதயை நினைக்கிறேன். என் சினிமா காதலை புரிந்து கொண்டு என்னை ஆதரித்து என்னுடன் பயணம் செய்துள்ளார். என் வாழ்வில் எப்போது கேட்டாலும் அவருக்கு படம் செய்வேன். என் தங்கையாக என்னை முழுமையாக புரிந்து கொண்ட நடிகை நித்யா மேனன் அவருக்கு இந்த வெற்றி காணிக்கை. என் எல்லா படங்களிலும் அவர் நடிக்க ஆசை.

ரேணுகா மேடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். ஆனால் அவர் ஒரு தேவதை.

சிங்கம் புலி மிகச்சிறந்த மனிதர். அவரின் அனுபவங்களில் பாதி கூட எனக்கு இல்லை. ஆனால் என்னை பொறுத்து கொண்டு நடித்ததற்கு நன்றி. நான் கேட்டததற்காக நடித்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எப்போது கூப்பிட்டாலும் வரும் நடிகர் நரேனுக்கு நன்றி. என் எல்லா படங்களிலும் பாடல் எழுதுபவர் கபிலன். தயாரிப்பாளர் என்னிடம் கதையே கேட்கவில்லை என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தார்.

இந்தப்படம் வெற்றியடைய முக்கிய காரணம் அவர். எடிட்டர் 24 மணி நேரமும் என்னுடனேயே இருந்தார். இந்தியாவின் மிகச்சிறந்த எடிட்டராக வருவார். ராஜ்குமார் என் குழந்தை, இந்த ஐந்து வருடமாக என்னுடனேயே இருந்தவன்.
கண்ணியமாக சினிமாவை நேசித்தால், ஒரு நல்ல நடிகராக வர நினைத்தால், வெற்றி பெறுவாய் என்று சொன்னேன். அதைக் கேட்டு ஐந்து வருடம் என்னுடனேயே இருந்தான். நான் நினைத்ததை உடனடியாக செய்வான்.

அவனுக்கு கைமாறு செய்யவே இந்தப்படத்தை அவனுக்காக எழுதினேன். அவனுக்காக எடுத்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டான்.

பி சி ஶ்ரீராம் 10 நாள் என்னுடன் வேலை பார்த்தார் என் வாழ்நாள் கனவு. அவரால் முழுதாக வேலை செய்ய முடியவில்லை. தன்வீர் ஒளிப்பதிவாளனாக வேலை செய்தான். அருமையாக வேலை செய்துள்ளான். அதிதி கூட எப்போதும் சண்டை தான். பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறேன்.

ஆனால் அவர் நடிப்பு பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் பிடிக்காதவர்களுக்கும் விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. படம் பார்த்திருக்கிறீர்கள் எல்லோரது அன்புக்கும் நன்றி.

Dont expect Logic in Mysskin movies says Pava Chellathurai
Dont expect Logic in Mysskin movies says Pava Chellathurai

என் படங்கள் 100 நாட்கள் ஓடுவது கூட சந்தோஷமில்லை.. – இமான்

என் படங்கள் 100 நாட்கள் ஓடுவது கூட சந்தோஷமில்லை.. – இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer Imman speech at Jeevas Seeru Press Meetதமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கருத்துக்கள் கொண்ட படங்களை, ரசிகர்களை கவரும் வகையில் வெற்றிப்படங்களாக தந்து வரும் Vels Films International சார்பில் Dr. ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “சீறு”. நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரத்ன சிவா எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிகை ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, வருண் மற்றும் காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் நிர்வாக தயாரிப்பாளர் அஷ்வின் பேசியது…

கடந்த வருடம் எங்கள் நிறுவனம் சார்பில் “எல்.கே.ஜி” படத்தை பிப்ரவரியில் தான் ரிலீஸ் செய்தோம். இந்த வருடம் “சீறு”படத்துடன் ஆரம்பித்துள்ளோம். தரமான ஆக்‌ஷன் கலந்த, கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். இந்தப்படத்தின் பெரும் பலம் ஜீவா தான் அருமையாக நடித்துள்ளார்.

இயக்குநர் கலக்கலான கமர்ஷியல் படமாக இயக்கியுள்ளார். இந்த வருடமும் தொடர்ந்து நல்ல படங்கள் தருவோம். இந்தப்படம் அனைவரையும் கவரும் நன்றி.

நடிகை சாந்தினி பேசியது…

நான் படம் நடிக்கும் ஐடியாவிலேயே இல்லை. இயக்குநர் ரத்னா சிவா தான் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். அவர் இந்தக் கேரக்டருக்காக நிறைய உழைத்திருந்தார். அதை நியாயம் செய்ய நினைத்தேன். அதற்கு படக்குழு மிகவும் உதவினார்கள். நடிகர் ஜீவாவை எனக்கு பிடிக்கும். இந்தப்படத்தில் எல்லோருடனும் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது. எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் வருண் பேசியது…

இந்தப்படத்தில் மல்லி எனும் கதாப்பாத்திரம் செய்துள்ளேன். இயக்குநர் சொன்ன மாதிரி வெயிட் போட்டு உடலை மாற்றி நடித்துள்ளேன். ஜீவாவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பார்த்தால் மல்லி பாத்திரம் கண்டிப்பாக உங்கள் மனதில் இடம் பிடிக்கும் பாத்திரமாக இருக்கும். படம் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி ரியா சுமன் பேசியது ….

முதன் முதலாக தமிழ் மக்களை சந்திப்பது மகிழ்ச்சி. எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. இயக்குநருக்கு நடிக்கும் திறமை இருக்கிறது. அவர் ஸ்பாட்டில் நடித்து காட்டி அவ்வளவு எளிதாக சொல்லித்தருவார். ஜீவா படப்பிடிப்பில் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். இந்தப்படத்தில் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. படம் பக்கா கமர்ஷியலாக வந்துள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் D. இமான் பேசியது….

வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் வேலை செய்வது என் வீட்டில் வேலை செய்வது போன்று இருக்கும். வருண் இந்தப்படத்தில் வேறு மாதிரி ஆளாக மாறியுள்ளார் அவருக்கு வாழ்த்துகள். ஜீவா கச்சிதமாக நடிப்பவர். மிகவும் துல்லியமாக தேவையானதை திரையில் நடிக்கக்கூடியவர் அவர்.

அவர் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சி. இயக்குநர் ரத்னா சிவாவுடன் முந்தைய படத்தில் வேலை செய்த பாடல்கள் இப்போதும் பலரது விருப்ப பாடல்களாக உள்ளது. நிறைய சுதந்திரம் தருபவர்.

திரைக்கதையில் பாடலுக்கான இடம் தருபவர். இந்தப்படத்தின் பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். மிக சுதந்திரமாக இந்தப்படத்தில் வேலை பார்த்தேன் அதற்காக அனைவருக்கும் நன்றி.

நொச்சிபட்டி திருமூர்த்தியை இந்தப்படத்தில் பாடவைத்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ராஜகணபதி என்பவர் அருமையாக பாடியுள்ளார்.

நான் இசையமைத்த படங்கள் 100 நாட்கள் ஓடுவதை விட இந்த மாதிரி பாடகர்களை அறிமுகப்படுத்துவது தான் மனதிற்கு மிக மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி.

இயக்குநர் ரத்ன சிவா பேசியது….

இது மூன்றாவது படம். முதலில் அஷ்வினுடன் கதை சொன்ன போது எந்த ஹீரோவை வைத்து செய்யலாம் என பேசினோம். ஒரு ஆக்‌ஷன் ஹீரோ வேண்டும் என்று ஜீவாவிடம் போனேன். கதை கேட்டவுடன் நாம் பண்ணலாம் என்று சொன்னார். ஐசரி கணேஷ் சாரிடம் கதை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் அவர் கதை கேட்டு இது ஹிட்டாகும் என்றார்.

எளிதில் எந்த ஒரு விசயத்தையும் தீர்மாணிப்பவராக அவர் இருக்கிறார். அஷ்வின் மொத்த படத்திற்கும் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். நான் ஜீவா சாரின் ரசிகன். 24 மணி நேரமும் சிரித்துகொண்டே, அருகில் இருக்கிறவர்களையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். சீரியஸ் காட்சி வந்துவிட்டால் அப்படியே மாறிவிடுவார்.

அவர் ஒரு அருமையான நடிகர். அவருக்கு நன்றி. வருண் ஜெயிக்க வேண்டும் என்பதற்கு வெறியாக உழைக்க தயாராக இருக்கும் ஆள். இந்த கேரக்டருக்கு நியாயம் செய்ய மொத்தமாக உடலை மாற்றி வந்தார். மிகப்பெரிய நடிகராக வருவார். சாந்தினி முதலில் நடிக்க மறுத்தார் ஆனால் கதை கேட்ட பிறகு நடிக்க ஒத்துக்கொண்டார்.

இந்தப்படத்தில் எல்லோர் மனதிலும் கண்டிப்பாக நிற்பார்.

இமான் சார் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலம். அவர் யாருடன் படம் செய்தாலும் கண்டிப்பாக வெற்றிப்பாடலாகத் தான் இருக்கும். என் தொழில்நுட்ப கலைஞர்கள் என் நண்பர்கள் போன்றவர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள்.

ஹீரோயினுக்கு தமிழ் தெரியாது. ஆனால் அருமையாக நடித்துள்ளார். வா வாசுகி பாடல் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும். இந்தப்படம் வரும் 7ந்தேதி வருகிறது. இந்தப்படம் நல்ல கருத்துள்ள படம். உங்கள் ஆதரவு தேவை நன்றி.

தயாரிப்பாளர் Dr. ஐசரி K கணேஷ் பேசியது….

“சீறு” எங்கள் நிறுவனத்தின் 4 வது படம். கடந்த வருடம் மூன்று படங்கள் ஹிட்டாக அமைந்தது. இந்தப்படமும் ஹிட்டாக அமையும். என் பள்ளியில் ஜீவாவின் மகன் படிக்கிறார். அவருடன் படம் செய்யலாம் என்று அங்கு சந்திக்கும்போது சொன்னேன்.

அவர் இயக்குநர் ரத்ன சிவாவை அனுப்பி வைத்தார். எங்கள் நிறுவனத்தில் கதை இலாக இருக்கிறது. அவர்கள் கதை கேட்டார்கள் அவர்கள் அனைவருக்கும் கதை பிடித்து இருந்தது. அவர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்து தந்துள்ளார்.

என் படமாகவே இருந்தாலும் நல்லா இல்லை என்றால் சொல்லிவிடுவேன். ஆனால் இந்தப்படம் என்னை பாதித்தது. அருமையாக எடுத்திருக்கிறார். ஜீவா கடுமையாக உழைத்து நடித்துள்ளார். வருண் இந்தப்படத்தில் தன்னை மாற்றி நடித்துள்ளார்.

அவருக்கு வாழ்த்துகள். நல்ல தரமான படங்களை தர வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். நாங்களே இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறோம். இந்தப்படம் கண்டிப்பாக தரமான படமாக இருக்கும். எல்லாம் கலந்த கமர்ஷியல் படமாக இந்தபடம் உள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஜீவா பேசியது ….

ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது இன்றைய காலகட்டத்தில் பெரிய வேலை. இங்கு நிறைய படத்திற்காக வந்துள்ளேன் படம் நல்லா இல்லை என்றால் தர்மசங்கடமாக இருக்கும். ஆனால் இன்று மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சுற்றி நிறைய நல்ல விசயங்கள் நடக்கிறது. இந்தப்படத்தில் கேபிள் டீவி ஆப்ரேட்டராக, துள்ளலான இளைஞனாக நடித்திருக்கிறேன். திரைக்கதை அட்டகாசமாக இருக்கிறது. இயக்குநருக்கு பயங்கரமாக கதை சொல்லும் திறமை இருக்கிறது. அவர் யாரிடம் வேண்டுமானாலும் கதை சொல்லி ஓகே வாங்கி விடுவார்.

அவ்வளவு திறமையானவர். இந்தப்படம் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எல்லாவிததத்திலும் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும். 83 பட புரமோஷனில் கச்சேரி, கச்சேரி பாடல் ரன்வீர் கேட்டு வாங்கி ஆடினார்.

இமான் சார் பாடல்கள் பற்றி அவர் பெருமையாக பேசினார். இந்தப்படத்தில் வா வாசுகி எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்படத்திற்கு இமான் பெரும் பலமாக இருக்கிறார். சாந்தினி காட்சிகள் அருமையாக இருந்தது. அவர் அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் நடித்தது எனக்கு சந்தோஷம். இன்னும் நிறைய படங்கள் உங்களுடன் செய்ய வேண்டும்.

வருண் நடித்த ரோலில் முதலில் நானே அவரை வேண்டாம் என்று சொன்னேன். கரடு முரடான கேரக்டர் ஆனால் கடுமையாக உழைத்து அசத்திவிட்டார். ரியா சுமன் ஜிப்ஸிக்கு ஆடிசன் செய்திருந்ததாக என்னிடம் சொன்னார்.

ஆனால் அந்தபடம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை இது தான் முதலில் ரிலீஸ் ஆகிறது. இந்தப்படத்தில் அனைத்து அம்சங்களும் கலந்து இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து இயக்கம் – ரத்ன சிவா

இசை – D.இமான்

ஒளிப்பதிவு – பிரசன்னா S குமார்

படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்

கலை இயக்கம் – சம்பத் திலக்

சண்டைப்பயிற்சி – கணேஷ் குமார்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, D One

தயாரிப்பு – Dr. ஐசரி K கணேஷ்.

தயாரிப்பு நிறுவனம் – Vels Films International

Music Composer Imman speech at Jeevas Seeru Press Meet

Music Composer Imman speech at Jeevas Seeru Press Meet

எக்ஸ் லவ்வருடன் உல்லாசம்; சனம் ஷெட்டியை கட்டிக்க முடியாது என தர்ஷன் ஓபன் டாக்

எக்ஸ் லவ்வருடன் உல்லாசம்; சனம் ஷெட்டியை கட்டிக்க முடியாது என தர்ஷன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tharshan confirmed that he wont marry Sanam Shettyபிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அதுகுறித்து விரிவான விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:

2016-ல் சென்னைக்கு வந்தேன். நான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, என்னுடைய இருசக்கர வாகனத்தை விற்று விட்டு தான் சென்னைக்கு வந்தேன். வந்ததும்

ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஆறு மாத காலம் உதவியாளராக பணிபுரிந்தேன். அங்கங்கே நடக்கும் ஆடிஷனில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு வில்லனாக ஒரு படத்தில் நடித்தேன்.

2017 தான் சனம் ஷெட்டியை சந்தித்தேன். அப்போது என்னை அவரது முகநூலில் சேர்த்தார். அதன் பிறகு என்னுடைய ஒவ்வொரு படத்தின் புகைப்படங்களை பார்த்து வாழ்த்து செய்தி அனுப்புவார்.

மீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா பட்டம் சனம் ஷெட்டிக்கு கைமாறியது

ஒருமுறை நான் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நாயகன் இன்னும் முடிவாகவில்லை.நீங்கள் நாயகனாக நடிக்க ஆடிஷன் வாருங்கள் என்று முகநூலில் செய்தி அனுப்பினார். நான் ஆடிஷனில் தீர்வான பிறகுதான் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் நான்தான் என்று கூறினார்.

35 நாள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அந்த சமயத்தில் அவருக்கு என்மீது ஒருமுக காதல் இருந்துள்ளது. 2018 முதல் நாங்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம். ஆனால் இருவரின் பணியில் இடையூறு வரும் என்பதால் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுத்தோம்.

இதற்கிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாங்கள் நடித்த படமும் பாதியில் நின்றுவிட்டது. எனக்கும் விசா முடிவடைந்ததால் ஸ்ரீலங்காவிற்கு திரும்பிவிட்டேன். சுமார் 8 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்காக இந்திய அழைத்தார்கள் வேலைவாய்ப்பு விசாவில் வந்தேன். இங்கு வந்த பிறகும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்கள் அதுவரை எனது செலவுக்கு எனது அண்ணன் தான் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.

அவ்வப்போது எனக்கு கிடைக்கும் விளம்பர வாய்ப்பை பயன்படுத்தி வருமானம் ஈட்டினேன். சனம் ஷெட்டி அவ்வப்போது எனது பெயரை முன்னெடுத்து எனக்கு வாய்ப்புகள் வாங்கி கொடுப்பார். அவர் மிகப்பெரிய உதவிகளை வழங்கி இருக்கிறார் என்ற உணர்வு எனக்கு எப்போதும் இருக்கும்.

அதன்பிறகு, இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க எங்களது சுய விவரங்களை கொடுத்து விண்ணப்பித்து இருந்தோம். என்னைவிட சனம் ஷெட்டிக்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் சந்தோசம் தான் என்று நானும் இருந்தேன். அந்த சமயத்தில் விஜய் டிவியில் போத்தீஸ் விளம்பரத்தில் நான் நடித்ததை பார்த்து என்னை தேடி கொண்டிருந்திருக்கிறார்கள்.

விஜய் டிவியின் வில்லா டூ வில்லேஜ் ரியாலிட்டி ஷோவில் சனம்ஷெட்டி

எனக்கு ரம்யாவும் சத்யாவும் நெருங்கிய நண்பர்கள். எங்களுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு ரம்யாவிடம் இந்த பையனை தான் தேடிக்கொண்டிருந்தோம் போன் நம்பரை கொடுங்கள் என்று விசாரித்திருக்கிறார்கள். அதற்கு நாங்கள் தர்ஷனின் நிச்சயதார்த்தத்திற்கு வந்திருக்கிறோம். முடிந்ததும் அனுப்புகிறோம் என்று ரம்யா கூறியிருக்கிறார்.

இந்த விவரங்களை நான் சனம் ஷெட்டியிடம் கூறியபோது, அவர் நமக்குள் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று பத்திரிக்கைகளுக்கு தகவல் அளித்து விடுங்கள். இல்லையென்றால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று என் மீது கோபப்பட்டார். அப்போது, சத்யாவும் ரம்யாவும் எங்களுடன் தான் இருந்தார்கள். அவர் கூறிய பிறகுதான் நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற வில்லை என்று நான் பேட்டி அளித்தேன்.

எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என் பெற்றோருக்குத் தெரியாது ஏனென்றால் எனக்கு ஒரு தங்கை இருப்பதால் அவர் திருமணம் முடியும் வரை எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது தெரியாமல் இருக்க வேண்டும். அதற்கு சம்மதித்தால் நான் செய்து கொள்கிறேன் என்று சனம் ஷெட்டியின் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் சம்மதித்த பின் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பிறகு, நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்போது சனம் ஷெட்டி, நீ யாரிடமும் இந்த விஷயத்தை கூற வேண்டாம். ஏனென்றால், வையில்ட் கார்ட் சுற்றில் நான் வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். அவருடைய மாமா அரசியலில் பெரும்புள்ளி.

அவரை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆகையால் தான் ஆரம்பத்தில் நான் எதுவும் கூறவில்லை மீரா பிரச்சனை ஆரம்பிக்கும் போதுதான் எங்கள் காதலை பற்றி கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கூறினேன்.

பிறகு, அவர் நீச்சல் உடையில் பேட்டி அளித்திருந்தார். அது எனக்கு பிடிக்காமல் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டேன். அதற்கு சனம் ஷெட்டி உன்னை ஊக்குவிக்க தான் என்று கூறினார். மேலும் உனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர் பெயரும் கடவுச் சொற்களையும் கேட்டிருந்தார்.

நான் எனது அண்ணனும் தங்கையும் பார்த்துக்கொள்வார்கள் மற்றும் விஜய் டிவியில் வரும் விளம்பரமே போதும் என்று கூறிவிட்டேன். அதை மீறி என் அண்ணனிடம் கேட்டு உள்ளார் அவர் மறுக்க என் தங்கையைக் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார். நம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு ஒரு மாதம் வரை என்னுடைய இன்ஸ்டாகிராம் முழுவதும் உபயோகப்படுத்தியது சனம் ஷெட்டி தான்.

Actress Sanam Shetty Photos

என்னிடமும் இனிமேல் பிக்பாஸில் கலந்துகொண்ட பெண்களிடம் நீ பேசுவது இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வது கூடாது மேலும் நீ எங்கு சென்றாலும் என்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்.

சமீபத்தில் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சிக்கு கூட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் நான் தர்ஷனின் காதலி என்னையும் அழைத்துச் செல்லுங்கள், ஹோட்டலில் எனக்கு அறை ஒதுக்குங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கான செய்தி ஆதாரம் என்னிடம் உள்ளது.

அதேபோல் நான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தன்னை கதாநாயகியாக போட வேண்டும் என்றும் கூறி வந்தார். அதற்கு நான் எனக்கு இந்த கதாநாயகிதான் வேண்டும் என்று கூறும் அளவுக்கு வளரவில்லை என்று கூறினேன். இது போல் அவ்வப்போது எங்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தது.

என்னிடம் கேட்டால் மட்டுமே நான் சனம் ஷெட்டியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறுவேன் என்றேன்.

அதன் பிறகு ஒரு நாள் அவர் என்னிடம் இப்போது உனக்கு புகழ் கூடிவிட்டது ஆகையால் இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று அறிவித்துவிட்டு என்று கூறினார். அதற்கு நாம் ஏற்கனவே சமரசமாக பேசி முடிவெடுத்து விட்டோம் இப்போது நான் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன்,

ஆகையால் இப்போது நான் கூற மாட்டேன் என்றேன். அதற்கு இன்னொரு தயாரிப்பாளர்களிடம் சென்று இவரை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அப்போதுதான் நான் இவரை விட்டு விலகுவது என்று முடிவெடுத்தேன். அதை அவரிடம் கூறியபோது நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். அந்த செய்தியின் ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.

அதோடு நில்லாமல் நான் உன் அம்மாவிடம் நம் காதலைப் பற்றிக் கூறப் போகிறேன் என்றார். என்னை சந்தித்து விட்டு தான் என் அம்மாவை சந்திக்க சென்றார். என்னம்மா நீங்கள் இருவரும் காதலிப்பதால் எங்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், தர்ஷனின் தங்கைக்கு திருமணம் செய்துவிட்டு உங்கள் திருமணத்தை நடத்துகிறோம் என்று கூறினார்.

அவர் விசா சம்பந்தமாக சுமார் ரூ.3 லட்சம் எனக்கு அளித்து இருந்தார். அதை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நிச்சயதார்த்த செலவு ரூ.2 1/2 லட்சம் தவிர வேறு எந்த பண உதவியும் அவரிடமிருந்து நான் பெறவில்லை.

Actress Sanam Shetty Biography

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது அவர்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னுடன் பழகிய சில பெண்களிடம் அவர் நேரடியாக சென்று மிரட்டி இருக்கிறார். அவர்களுக்கு பிரச்சினை வரும் என்ற காரணத்தால், அவர்கள் பெயரை வெளியே சொல்ல விரும்பவில்லை. அவர்களின் இன்ஸ்டாகிராம் அடையாளத்தை தடை செய்ததும் அவர்தான்.

மேலும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த சமயத்தில் ரம்யா சத்ய திருமணத்திற்கு அவருடைய முன்னாள் காதலனுடன் தனியறையில் இருந்திருக்கிறார். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு பல பெண்களிடம் தொடர்பு இருக்கிறது என்று சனம் கூறியுள்ளார் அதற்கான ஆதாரம் இருந்தால் அவரை கொடுக்க சொல்லுங்கள். சரி நிதம் நான் எங்கள் காதலை கூறிய பிறகு அவரும் அதை புரிந்து கொண்டு விலகி விட்டார்.

ஆனால் சனம் ஒரு நிகழ்ச்சியில் எங்களுக்கு இடையே ஷெரீன் தான் தடையாக இருக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். அது முற்றிலும் உண்மை அல்ல. நானும் ஷெரீனும் நல்ல நண்பர்கள் மட்டும் தான்.

மேலும், நான் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியிருக்கிறார். அதுவும் உண்மையல்ல. பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று தன்னை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அவர்கள் இது அவருடைய தனிப்பட்ட விஷயம். இதற்கும் அவர் நடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். இவ்வளவு நடந்த பிறகு அவரை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை.

எனக்கு அவர் நிறைய உதவிகள் செய்து இருப்பதால், அவர் மீது நான் எந்த வழக்கும் தொடர மாட்டேன். அவர் கொடுத்த வழக்கில் ஆணையர் கேட்பின் என்னிடம் உள்ள ஆதாரத்தை சமர்ப்பிப்பேன்.

இவ்வாறு தர்ஷன் தனக்கும் சனம் ஷெட்டிக்கும் இருந்த உறவைப் பற்றி தெளிவாக விளக்கம் அளித்தார்.

Tharshan confirmed that he wont marry Sanam Shetty

ரஜினி-குஷ்பூ-மீனா-கீர்த்தி கூட்டணியில் இணைந்தார் நயன்தாரா

ரஜினி-குஷ்பூ-மீனா-கீர்த்தி கூட்டணியில் இணைந்தார் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara on board in Rajinis Thalaivar 168 தர்பார் படத்தை தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

சிவா இயக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

எந்திரன், பேட்ட படங்களை அடுத்த ரஜினியின் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கதையின் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்னும் யாரெல்லாம் ரஜினியுடன் இணைய போகிறார்களோ..?

Nayanthara on board in Rajinis Thalaivar 168 team

ரஜினியின் ‘தர்பார்’ MASS? LOSS?; என்ன நடக்கிறது..? ஒரு பார்வை

ரஜினியின் ‘தர்பார்’ MASS? LOSS?; என்ன நடக்கிறது..? ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar rajiniரஜினி, லைகா, முருகதாஸ், அனிருத் என மாபெரும் கூட்டணியில் உருவான ‘தர்பார்’ படம் கடந்த 9ஆம் தேதி 3 மொழிகளில் உலகமெங்கும் ரிலீசானது.

இப்படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் படமும் நல்ல வசூல் வேட்டையை செய்து வருகிறது.

முதல் 4 நாட்களில் ரூ- 150 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்து இருந்த்து.

ரஜினி பேர சொல்ல ஏன் பயம்?; சாகுற காலத்துல நடிக்கிறார்.. மன்சூர் அலிகான்

தற்போது படம் ரிலீசாகி 25 நாட்களை நெருங்கும் நிலையில் தர்பார் படத்தால் நஷ்டம். ரஜினிகாந்த் பணத்தை திருப்பி தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.

இவர்களை ரஜினியை சந்திக்க சென்றதாகவும் அவர் பின்னர் சந்திப்போம் என்று கூறியதாகவும் தகவல்கள் பறந்தன.

இதனால் ரஜினி ரசிகர்களும் நடுநிலையான ரசிகர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

‘தர்பார்’ வசூலை தகர்க்க வாட்ஸ்அப்பில் ஆப்பு; போலீசில் லைகா புகார்

படம் நிஜமாகவே நஷ்டம் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வரவில்லை. ரஜினியோ அல்லது லைகா நிறுவனமோ இதுபற்றி வாய் திறந்தால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.

தர்பார் திடீரென நஷ்டம் என சிலர் கிளம்பி வருவதற்கு அரசியல் பின்னணி தான் காரணம்.

காலா படம் நஷ்டம் என்றனர். பின்னர் அப்பட தயாரிப்பாளர் தனுஷ் உண்மையை சொன்ன பிறகு அது அப்படியே கானல் நீரானது.

ரஜினி மீது என் கண்கள்; அவர்தான் இந்திய சூப்பர் ஸ்டார்.. – குஷ்பூ

அது போல லைகா தயாரித்த ‘2.0’ படம் நஷ்டம் என்றார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கு பெரும் லாபம் கிடைக்காவிட்டாலும் அசல் தொகை கிடைத்துவிட்டது. அதுபோல் படத்தை வெளியிட்டவர்களுக்கும் லாபம்தான் என்றனர்.

ரஜினி படத்திற்கு மட்டும் இதுபோல் பிரச்சினைகள் வருவது ஏன்? இதோ ஒரு சின்ன ப்ளாஷ்பேக்…

அண்ணாமலை படத்தின் போது (1992) அந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றிருந்தார் ரஜினி. அந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க, கே பாலசந்தர் தயாரித்திருந்தார்.

தமிழகத்தில் ஜெயல்லிதாவின் ஆட்சி நடைபெற்ற சமயம் அது.

ரஜினியின் முதல் டிவி நிகழ்ச்சி; உன்னத மனிதர் என Bear Grylls நெகிழ்ச்சி

அண்ணாமலை பட சந்திப்பின் போது ரஜினி பேசியதாவது… இந்த படம் நல்லா வந்திருக்கு. நிறைய விலை கொடுத்து வாங்கியுள்ளேன்.

நஷ்டம் அடைந்தால் திருப்பி தருகிறேன். லாபம் அடைந்தால் திருப்பி தர வேண்டாம். ஆனா எவ்வளவு லாபம் சொன்னா சந்தோஷம். நீங்க கரெக்ட்டா இருந்தா நானும் கரெக்டா இருப்பேன். ஆனா நீங்க வேற மாதிரி நடந்தா அப்போ நானும்தான்.. என்று கே.பி முன்னிலையிலேயே பேசியிருந்தார் ரஜினி. (இப்போதும் அந்த வீடியோ யுடிப்பில் உள்ளது),

தான் தயாரித்த பாபா படம் தோல்வி ஆனதால் அந்த பட நஷ்டத்தை திருப்பி கொடுத்தார் ரஜினிகாந்த். இதுவரை எந்த ஒரு தயாரிப்பாளரும் நடிகரும் அப்படி செய்ததில்லை.

என் படத்தை வாங்கியவர்கள் யாரும் நஷ்டம் அடைய கூடாது என ரஜினி அப்போதே சொல்லியிருந்தார்.

ஒரு முறை விஜயகாந்திடம் உங்கள் படம் நஷ்டம் அடைந்தால் இதுபோல் செய்வீர்களா? என்று கேட்டனர்.

அவருக்கு கிடைத்த லாபத்தில் தான் பணத்தை திருப்பி கொடுத்தார். என பதிலளித்தார் கேப்டன். ஆக பாபா படம் ரஜினிக்கு லாபத்தை கொடுத்திருந்தது.

ஆக ரஜினி ஒவ்வொரு முறையும் இதுபோல் பிரச்சினைகளை சந்திப்பது தெரிகிறது.

ரஜினிக்கு விதிக்கப்பட்ட ரூ. 66.22 லட்சம் அபராதம் ரத்து; கோர்ட் அதிரடி

இதனையடுத்து சில வருடங்களுக்கு பின்னர் வெளியான குசேலன், லிங்கா பட நஷ்டத்தின் போதும் ரஜினியை தொல்லை கொடுத்தனர்.

ஆனால் இந்த இரு படங்களையும் ரஜினி தயாரிக்காத போதும் பணத்தை திருப்பிக் கொடுத்தார் ரஜினி.

ரஜினி படத்தை அவரது பட தயாரிப்பாளர்கள் நிறைய விலைக்கு விற்றுவிடுவதும் இதில் ஒரு காரணமாக உள்ளது.

எனவே ரஜினி திருப்பி தருவார் என்ற நம்பிக்கையில் அவரையே டார்கெட் செய்வது சரியல்ல.

ஒரு வேளை படம் நிஜமாகவே நஷ்டம் என்றால் பட தயாரிப்பாளரிடம் தான் நஷ்டத்தை கேட்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் ரஜினியின் அரசியல் வருகையை அறிந்து சிலர் இதுபோல் செய்வதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

எம்ஜிஆர் போல பளபளப்பு இல்லாத ரஜினி எப்படி சாதித்தார்.?; திருமாவளவன் பேச்சு

அண்மைக்காலமாக ரஜினியின் சம்பளத்தை விஜய் முந்திவிட்டார் என்ற பொய்யான தகவல் வெளியானது.

அதுபோல் டிஸ்கவரி சேனல் சூட்டிங் சமயத்தில் ரஜினிக்கு விபத்து, சூட்டிங் கேன்சல் என்ற பொய்யான தகவலும் வெளியானது.

அதுபோல் வருமான வரி துறையை ரஜினி ஏமாற்றி விட்டதாக கோர்ட் அவருக்கு ரூ. 66.22 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக பொய் தகவலை முன்னணி செய்திதாள் வெளியிட்டது.

அதுபோல் தர்பார் இசை விழாவுக்கு வராத நயன்தாராவை அவர் வந்துள்ளதாகவும் ரஜினியின் பேச்சை கேட்டு வெட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதுபோல் பொய்யான தகவல்களை பரப்புவதையே தொழிலாக சிலர் செய்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தொடர்ந்து இதுபோல் ரஜினியை ஓரங்கட்ட பல அரசியல் வேலைகள் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது.

அரசியலின் மூலதனமே எதிர்ப்பு தானே… ஆகட்டும் ரஜினி அவர்களே…

More Articles
Follows