தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படுபிரபலமான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா முதன்முறையாக இணைந்துள்ள படம் பியார் பிரேமா காதல்.
அறிமுக இயக்குனர் இளன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைத்து தயாரித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஆனால் ஒரு சில பிரபலமான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இளையராஜா, சீனுராமசாமி, நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஜய்சேதுபதி, ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சிம்புவிடம் உங்கள் முதல் காதல் பற்றி சொல்லுங்கள் என தொகுப்பாளர்கள் கேட்டனர்.
அதற்கு சிம்பு பதிலளிக்கும்போது.. “என் முதல் காதல் என் ரசிகன்தான்” என்றார்.
மேலும் மேடையில் லூசுப்பெண்ணே பாடலை யுவன் இசையில் சிம்பு பாடினார்.
Simbu aka STR talks about his first love at Pyaar Prema Kaadhal