நேற்று கமல்; இன்று மீண்டும் ரஜினி படத்தலைப்பில் சிபிராஜ்

Ranga movie imagesசிபிராஜ் தயாரித்து நடித்திருந்த படம் ‘சத்யா’ அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றது.

இதே படத்தலைப்பில் கமல் நடித்த படம் பல வருடங்களுக்கு முன் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த புதிய சத்யா படத்தில் சிபிராஜ் உடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்த்ராஜ், யோகி பாபு, சதீஷ், ரவி வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

‘சத்யா’ படத்தலைப்புக்கு பெருமை சேர்த்த சிபிராஜ், அடுத்ததாக ரஜினி படத்தலைப்பான ‘ரங்கா’ என்ற டைட்டிலை கைப்பற்றி உள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பே போக்கிரி ராஜா என்ற ரஜினி படத்தலைப்பில் ஜீவா, சிபிராஜ் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தல் சிபிராஜ், ரம்யா…
...Read More
சத்யராஜ் தயாரிப்பில் சிபிராஜ் நடித்துள்ள சத்யா…
...Read More

Latest Post