சொந்த படம்.. வெப் சீரீஸ்.. ஆந்தாலஜி.. பாலிவுட்..; அதிரடி காட்டும் அமலாபால்

சொந்த படம்.. வெப் சீரீஸ்.. ஆந்தாலஜி.. பாலிவுட்..; அதிரடி காட்டும் அமலாபால்

amala paulதுணிச்சலான வேடங்களை தேர்ந்தெடுத்து அதில் நடிப்பவர் அமலாபால்.

‘சிந்து சமவெளி’ படம் தொடங்கி ‘ஆடை’ வரை அவரது பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.

தற்போது கன்னடத்தில் “யூ டர்ன்” ( U Turn) படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், புதிய வெப் சீரிஸான குடி யெடமைதே ( Kudi yedamaithe ) வெப் சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த 8 பகுதிகள் கொண்ட ஆஹா (aha) ஒரிஜினல் தொடர், தெலுங்கு ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேண்டஸி திரில்லராக உருவாகிறது. இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார்.

இது மற்ற திரைப்படங்கள், தொடர்கள் போல வழக்கமான ஹீரோ ஹீரோயின் கதாப்பாத்திரங்கள் அல்ல.

இக்கதையின் மையம் ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாக கொண்டது.

இது தவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் Netflix ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் “கடாவர்” (cadaver) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

இந்த படங்கள், தொடர்கள் தவிர அமலாபால் Jio Studios & Vishesh Films நிறுவன தயாரிப்பில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.

Actress Amala Paul is back to work mode

உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ‘கூழாங்கல்’..; நயன்தாரா & விக்னேஷ் சிவன் அறிவிப்பு

உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ‘கூழாங்கல்’..; நயன்தாரா & விக்னேஷ் சிவன் அறிவிப்பு

நயன்தாரா & அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து திரைப்பட தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவர்களின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தை ‘அவள்’ பட இயக்குநர் மிலந்த் ராவ் இயக்கியுள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தையும் தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தை விக்னேஷ் சிவனே இயக்குகிறார்.

இதனையடுத்து ‘தரமணி’ வசந்த் ரவி – பாரதிராஜா நடித்துள்ள ‘ராக்கி’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை தற்போது ரவுடி பிக்சர்ஸ் பெற்றுள்ளது.

இது விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ‘கூழாங்கல்’ என்ற படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்று அந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு எடுத்து செல்ல முன் வந்துள்ளனர் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.

‘கூழாங்கல்’ படத்தை வினோத் ராஜ் என்பவர் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Actress Nayanthara and director VigneshShivan turn producers for a Yuvan musical

Koozhangal

IMG-20201222-WA0046

ரஜினி அங்கிள் நீங்க சொன்னா அரசாங்கம் கேட்கும்..; மருத்துவ கனவை தொலைத்து நிற்கும் நீட் மாணவி ஆர்த்தி கோரிக்கை (வீடியோ)

ரஜினி அங்கிள் நீங்க சொன்னா அரசாங்கம் கேட்கும்..; மருத்துவ கனவை தொலைத்து நிற்கும் நீட் மாணவி ஆர்த்தி கோரிக்கை (வீடியோ)

rajinikanthநீட் என அழைக்கப்படும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வுகள் செப்டம்பரில் நடைபெற்று அதன் முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகின.

இதில் தேர்வுக்கு விண்ணப்பித்த 15,97,435 பேரில் 13,66,945 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். (கொரோனா ஊரடங்கால் பலர் தேர்வு எழுத வரவில்லை.)

அதில் 7,71,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இந்த 56.55 சதவீதமாகும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

இதில் ஒடிஷாவை சேர்ந்த சோயிப் அஃப்தாப் என்ற மாணவர் 720 மதிப்பெண்கள் பெற்று இந்தியளவில் முதலிடத்தை பிடித்தார்.

அவருக்கு அடுத்து டெல்லி, தெலங்கானா ஆகிய மாநில மாணவர்கள் இடம் பெற்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த ஆர். ஸ்ரீஜன் 8ஆவது இடம் பிடித்தார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 710.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகனபிரபா ரவிச்சந்திரன் 14ஆவது இடத்தைப் பிடித்தார். அவரின் மதிப்பெண் 705.

ஜி. ஸ்வேதா என்ற தமிழக மாணவி 701 மதிப்பெண்ணுடன் 18ஆவது இடத்தைப் பிடித்தார்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழ்நாடு, 48.57% பெற்றிருந்தது. இந்த ஆண்டு 57.44%.

புதுச்சேரி கடந்தாண்டு 48.70%. இந்த ஆண்டு 52.79%.

இந்த நிலையில் இந்தாண்டு 2020 நீட் தேர்வில் 553 மதிப்பெண்கள் பெற்றும் அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்காத ஆர்த்தி என்ற செங்கல்பட்டு மாணவி நடிகர் ரஜினிகாந்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த வீடியோ இதோ…

Medical Student Aarthi requests Super Star Rajinikanth

சோனு சூட் தான் எங்கள் கடவுள்..; நடிகருக்கு கோயில் கட்டி வழிபடும் மக்கள். (வீடியோ)

சோனு சூட் தான் எங்கள் கடவுள்..; நடிகருக்கு கோயில் கட்டி வழிபடும் மக்கள். (வீடியோ)

sonu soodதமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, கோவில்பட்டி வீரலட்சுமி என பல படங்களில் நடித்தவர் ஹிந்தி் நடிகர் சோனு சூட்.

இவர் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தவர் இவர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர் செய்த உதவிகள் ஏராளம்.

குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் அவதிபட்டபோது பேருந்து விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

உதவி செய்வதற்காகவே தன் சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.

மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.

மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் வைத்தும் கொடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கும் பெரும் உதவி செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் இவரது சேவையைப் பாராட்டி ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் சித்தி பேட் மாவட்டத்தில் உள்ள துப்ப தண்டா என்ற கிராமத்தில் சோனு சூட் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர்

சிலையை வடிவமைத்த சிற்பியை கொண்டே உள்ளூர் மக்கள் இந்த கோயிலை திறந்துள்ளனர்.

கோயில் சிலைக்கு பிரதிஷ்டை செய்து
ஆரத்தி எடுத்து வழிபட்டு வருகின்றனர்.

உதவி தேவைப்படுபவோர்க்கு வாரிக் கொடுத்த கர்ணன்.. இவர்தான் எங்கள் கடவுள்.

சினிமாவில் வில்லனாக நடித்தாலும் ஏழைகளுக்கு உதவும் இவரே நிஜ ஹீரோ என்று அந்த கிராமவாசிகள் தெரிவித்தனர்.

கூடுதல் தகவல்…

மக்கள் ஆதரவு இவருக்கு பெருகி வருவதால் சினிமாவில் ஹீரோ கேரக்டர்கள் இவரை தேடி வருகிறதாம்.

தற்போது வரை 5 படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

Dubba Tanda village People in Andhra Pradesh build a temple dedicated to Actor Sonu Sood

கட்சியே தொடங்காத ரஜினியை பார்த்து நாங்க ஏன் பயப்படனும்.?.. – உதயநிதி

கட்சியே தொடங்காத ரஜினியை பார்த்து நாங்க ஏன் பயப்படனும்.?.. – உதயநிதி

udhayanidhi stalin Rajinikanthகடலூர் அருகேயுள்ள சில்வர் பீச்சில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு இடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் உதயநிதி.

அவர் பேசியதாவது…

* தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ 5 ஆயிரம் கொடுக்க திமுக வலியுறுத்தியது. ஆனால் ரூ.2,500 தான் தற்போது தமிழக அரசு கொடுக்கிறது.

கடந்த முறை பிரச்சாரம் செய்ய சென்ற போது என்னை தீவிரவாதி போல் போலீசார் அழைத்து சென்றார்கள்.

ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை.. கட்சியே தொடங்காத ரஜினியை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.?”

என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து கொண்டார்.

Udhayanidhi Stalin talks about Rajinikanth’s political entry

வயிற்றுப்பிழைப்பிற்காக புரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள்..; கிழிக்க வரும் ‘ஓங்காரம்’

வயிற்றுப்பிழைப்பிற்காக புரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள்..; கிழிக்க வரும் ‘ஓங்காரம்’

ongaramநாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் சில போலியான போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அப்படிப்பட்ட போலியான போராட்டங்களை நடத்தும் போலிப் போராளிகளின் முகத்திரையை கிழிக்க வருகிறது ‘ஓங்காரம்’ திரைப்படம்.

‘அய்யன்’, ‘சேதுபூமி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கி நடிக்கும் இப்படம், வயிற்றுப்பிழைப்பிற்காக
புரட்சியாளராக வேசம் போடும் போலிப் போராளிகள் பற்றியும், அவர்கள் நடத்தும் போலியான போராட்டங்களினால் மக்களுக்கு ஏற்படும்
பாதிப்புகள் பற்றியும் அழுத்தமாக பதிவு செய்கிறது.

மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக ஏ.ஆர்.கேந்திரன்
முனியசாமி நடிக்க, இளம் நாயகனாக யுகேஷ் அறிமுகமாகிறார்.

கதையின் நாயகியாக வர்ஷா விஸ்வநாத் அறிமுகமாகிறார்.

போராளிகளுக்கு உதவி செய்ய போய் சிக்கலில் மாட்டிய விஜய்சேதுபதி

இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

சாம் ரொனால்டு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், செல்லம் ஜெயசீலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

மோனீஷ் பாரதி இசையமைக்கிறார். சண்டைப்பயிற்சியை பயர் கார்த்திக் கவனிக்க, மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

கெளசல்யா ஏழுமலை தயாரிக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் பணியை ரேகா முருகன் கவனிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டு
வருகிறது. தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Ongaram talks about fake social activists

More Articles
Follows