சந்தானம் – கூல் சுரேஷ் கூட்டணி.; இணையத்தை கலக்கும் ‘டிடி ரிட்டன்ஸ்’ டிரைலர்

சந்தானம் – கூல் சுரேஷ் கூட்டணி.; இணையத்தை கலக்கும் ‘டிடி ரிட்டன்ஸ்’ டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘டிடி ரிட்டன்ஸ்’.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடிக்க, ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய வேடத்தில் பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்துள்ளார்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார்.

கூல் சுரேஷ்

சமீபத்தில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

காமெடி திரில்லராக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

மேலும், ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

DD Returns – Official Trailer

Santhanam Cool Suresh alliance ‘dd returns’ movie trailer released

டைகர் கட்டளை.; ‘ஜெயிலர்’ 2வது சிங்கிள்.; காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்

டைகர் கட்டளை.; ‘ஜெயிலர்’ 2வது சிங்கிள்.; காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’.

இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மிர்னா மேனன், நாக பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ என்ற பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும், இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

ஜெயிலர்

rajini’s Jailer movie second single Hukum to be out on this date

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் பாடசாலை தொடங்கும் நடிகர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் பாடசாலை தொடங்கும் நடிகர் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் கொடிக்கட்டி நிற்பவர் நடிகர் விஜய்.

கடந்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி விஜய் கௌரவித்தார்.

அப்போது பேசும் போது காமராஜர், அம்பேத்கர், பெரியாரை படியுங்கள் என்று கூறினார்.

234 தொகுதிகளிலும் ‘இரவு நேர பாடசாலை’-யை  தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், காமராஜரை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘இரவு நேர பாடசாலை’ ஆரம்பிக்கப்பட உள்ளதாக  விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விஜய்யின் சொல்லுக்கிணங்க ஜூலை 15-ம் தேதி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

அந்நாளில் மாணவ, மாணவிகளுக்கு, நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளையும் தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

மேலும் காமராஜரை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’ ஆரம்பிக்கப்பட உள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்

Vijay starts to ‘iravu nera padasalai’ centres on Kamaraj’s birthday

அழகான நாட்டில் வன்முறையில் சிக்கிய ‘தி லெஜண்ட்’ பட பிரபலம்

அழகான நாட்டில் வன்முறையில் சிக்கிய ‘தி லெஜண்ட்’ பட பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான படம் ‘தி லெஜண்ட்’.

‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்தவர் நடிகை ஊர்வசி ரவுத்தலா.

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமுக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கு படமொன்றில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தலா பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாரிஸ் சென்றார்.

அங்கு சிறுவனை போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடந்து வரும் வன்முறை மற்றும் கலவரத்தில் சிக்கி உள்ளார்.

இதுகுறித்து ஊர்வசி ரவுத்தலா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரிசில் நடந்து வரும் கலவரமும், வன்முறை சம்பவங்களும் கவலை அளிக்கிறது. பயமாகவும் உள்ளது. என்னுடன் வந்த குழுவினரின் பாதுகாப்பு நிலையை நினைத்து வருந்துகிறேன். இந்தியாவில் இருக்கும் எங்கள் குடும்பத்தினரும் எங்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகின்றனர். “நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்கிறோம்’. பாரிஸ் அழகான நாடு. இங்கு இப்படி வன்முறை சம்பவங்கள் நடப்பது கவலை அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

‘The Legend’ actress caught up in violence in Paris

‘சிங்கப்பாதை’-யில் இணைந்த ஆர்.ஜே. பாலாஜி.; சிவகார்த்திகேயன் விலக என்ன காரணம்.?

‘சிங்கப்பாதை’-யில் இணைந்த ஆர்.ஜே. பாலாஜி.; சிவகார்த்திகேயன் விலக என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லி.

இவரின் உதவியாளர் அசோக் குமார் என்பவர் புதிய படத்தை இயக்க உள்ளார்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பார் எனவும் இந்த படத்திற்கு ‘சிங்கப் பாதை’ என பெயரிடப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வந்தன. இந்தப் படத்தை பிரபல கே ஜே ஆர் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் சிவகார்த்திகேயன் அந்த படத்தில் இருந்து விலகி விட தற்போது ‘சிங்கப் பாதை’-யில் இணைகிறார் ஆர் ஜே பாலாஜி.

எனவே விரைவில் இதுபற்றி அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

மேலும் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் ‘சிங்கப்பூர் சலூன்’ மற்றும் ‘சொர்க்கவாசல்’ ஆகிய படங்கள் ரிலீஸ்-க்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Singapathai updates Sivakarthikeyan quits RJ Balaji enters

க்ரைம் த்ரில்லர் கதைக்காக மீண்டும் கவின் இயக்கத்தில் முகேன்

க்ரைம் த்ரில்லர் கதைக்காக மீண்டும் கவின் இயக்கத்தில் முகேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

G. மணிக்கண்ணன் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவின் மீண்டும் நடிகர் முகேனுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில் துவங்கியது.

தயாரிப்பாளர் G. மணிக்கண்ணனின் 2வது தயாரிப்பான இதில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ‘கோல்டன் ரெட்ரீவர்’ வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகேன்

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது.

க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தை ‘பார்க்கிங்’ திரைப்பட கேமராமேன் ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார்.

‘டாடா’ புகழ் ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். அடுத்த வாரத்தில் தொடங்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்படிப்பை, ஒரே கட்டமாக தொடங்கி நிறைவு செய்ய திரைப்படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

முகேன்

Kavin and Mugen teams up again

More Articles
Follows