‘ஐ எம் சோ ப்ராப்ளம்…’ சந்தானம் படத்தின் சாங் ரிலீஸ் அப்டேட்

‘ஐ எம் சோ ப்ராப்ளம்…’ சந்தானம் படத்தின் சாங் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் தற்போது இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடிக்க, ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய வேடத்தில் காமெடி நடிகர் கூல் சுரேஷ் இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்துள்ளார்.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார்.

இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஐ அம் சோ பிராப்ளம்’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

the team of dd returns announced the second song today release

வாடி போஜனுடன் யோகிபாபு இணைந்து வைக்கும் ‘சட்னி சாம்பார்’

வாடி போஜனுடன் யோகிபாபு இணைந்து வைக்கும் ‘சட்னி சாம்பார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொம்மை’ திரைப்படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியவர்.

இவர் தற்போது “சட்னி சாம்பார்” என்ற வெப் தொடரை இயக்குகிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப்தொடரில் யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் வாணிபோஜன், ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும், பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர்.சுந்தர்ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“சட்னி சாம்பார்” வெப்தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இதையடுத்து இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சில் நடிகர் யோகிபாபு பேசியதாவது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக “சட்னி சாம்பார்” இருக்கும் என்றார்.

Yogi Babu & Vani Bhojan come together for Radha Mohan’s ‘Chutney Sambar’

ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஒன்றை விஜய்ஆண்டனி செஞ்சிட்டே இருப்பார்.; ஆச்சர்யத்தில் ஆர்யா

ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஒன்றை விஜய்ஆண்டனி செஞ்சிட்டே இருப்பார்.; ஆச்சர்யத்தில் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’.

ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது…

“இந்த நிகழ்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் விஜய் ஆண்டனியும் எங்களது ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் வளர்வதற்கு மாற்றி மாற்றி உதவிக் கொண்டோம்.

நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி தனது ஒவ்வொரு படத்திலும் எதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பார்.

அந்த வகையில், இந்தப் படமும் நிச்சயமும் வித்தியாசமாக தான் இருக்கும். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என அனைவரும் சிறந்த பணியைக் கொடுக்கக் கூடியவர்கள். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்.

In every movie Vijay Antony tries new ideas says Arya

ஹீரோயின்ஸ் கூட ரொமான்ஸ் செய்ய விடாமல் சதி பண்றாங்க… – விஜய் ஆண்டனி

ஹீரோயின்ஸ் கூட ரொமான்ஸ் செய்ய விடாமல் சதி பண்றாங்க… – விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’.

ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…

“பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். படம் நன்றாகவே வந்திருக்கிறது.

கதை சொல்லும்போது முதலில் மூன்று கதாநாயகிகள் என சொன்னார்கள். பிறகு இரண்டானது. அதிலும் மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா எனக்கு தங்கச்சி போல.

எனக்கு ஒரே ஒரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கதாபாத்திரமும் நம்மிடம் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். எனக்கு பத்திரிகையாளர்கள் நீதி கிடைக்க செய்ய வேண்டும்.

ஆனால், படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் பாலாஜி, எலோன் மஸ்க் தங்கச்சியின் நண்பர் என்பதால் சீக்கிரம் (உலகில் மிகப்பெரிய பணக்காரர்) எலான் மஸ்க் நம் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது.

இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு என அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது. மீனாட்சி அடிப்படையில் மருத்துவர், இப்போது ஐஏஎஸ் படித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஆர்யாவுக்கு நன்றி”.

Vijay Antony emotional complaint about his romantic scenes

விஜய் ஆண்டனி குறும்பை மீறீ சீரியஸ் ரோல் பண்ணிருக்கார் – பாலாஜி குமார்

விஜய் ஆண்டனி குறும்பை மீறீ சீரியஸ் ரோல் பண்ணிருக்கார் – பாலாஜி குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பாலாஜி குமார் பேசியதாவது…

“விஜய் ஆண்டனி இல்லாமல் இந்தப் படம் கிடையாது. அவர்தான் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்களை கன்வின்ஸ் செய்தார். படத்தில் ப்ளாஷ்பேக் அதற்குள் ப்ளாஷ்பேக் என பார்வையாளர்களின் கவனத்தைக் கோரும் படம் இது.

நம் ஊரின் வளம் அனைவருக்கும் தெரியும்படி இதில் கொண்டு வந்திருக்கிறேன். ஒளிப்பதிவு, இசை என அனைத்து தொழில்நுட்ப விஷயங்களையும் படத்திற்காக அற்புதமாக செய்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியிடம் இயல்பாகவே ஒரு குறும்பு உள்ளது. அதையும் கொண்டு வர வேண்டும், அதே சமயத்தில் அவர் கொஞ்சம் சீரியஸாகவும், வயதான தோற்றத்திலும் இருக்க வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார்.

நடிகை மீனாட்சியும் சிறப்பாக நடித்துள்ளார். ரித்திகா, அர்ஜூன் சிதம்பரம் என மற்ற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்”.

எடிட்டர் ஆர்.கே. செல்வா பேசியதாவது…

“ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதையில் நம்மால் பலவற்றை கணிக்க இயலும். ஆனால், அதை எல்லாம் தாண்டி படம் சிறப்பாக இருக்கும். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஆர்யா சாருக்கு நன்றி”

இசையமைப்பாளர் கிரீஷ் கோபால கிருஷ்ணன் பேசியதாவது…

“சமீப காலத்தில், எதுவும் கெஸ் பண்ண முடியாத தமிழ் படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ‘கொலை’ படமும் வெற்றி பெறும்.

ஒளிப்பதிவு, இசை என தனித்தனியாக பிரித்து பார்க்காமல் எப்பொழுது படமாக நன்றாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் சொல்கிறார்களோ அப்போதே அது சிறந்த படமாக இருக்கும். ‘கொலை’யும் அதில் ஒன்று”.

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசியதாவது…

“’கொலை’ படத்தை முதல் முறை பார்க்கும் போதும், அடுத்தடுத்த முறை பார்க்கும்போதும் புதிய விஷயங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்குத் தெரிய வரும். அதனால், குறைந்தது இரண்டு முறை பாருங்கள். வருகை தந்திருக்கும் நடிகர் ஆர்யாவுக்கு நன்றி!”

நடிகை மீனாட்சி பேசியதாவது…

“தமிழில் இது என் அறிமுக படம் என்பதால் ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு. என் கதாபாத்திர பெயர் லைலா. சிறப்பான தயாரிப்பாளர், இயக்குநர் என படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி!”.

Vijay Antony done old getup with serious character says Balaji Kumar

ரஜினி – மோகன்லால் – சிவராஜ்குமார் இணையும் ‘ஜெயிலர்’ பட கதை இதுதானா.?

ரஜினி – மோகன்லால் – சிவராஜ்குமார் இணையும் ‘ஜெயிலர்’ பட கதை இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்.

இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருந்தார் நெல்சன்.

‘டாக்டர்’ படத்தில் குழந்தை கடத்தலை மையப்படுத்தி இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தில் ஒரு ஷாப்பிங் மாலை தீவிரவாதிகள் ஹைஜெக் செய்து அங்குள்ளவர்களை பிணைய கைதிகளாக வைப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ‘ஜெயிலர்’ பட கதை இதுதான் என தகவல்கள் வந்துள்ளன.

அந்த கதைப்படி… “ஒரு சிறை கும்பல் கைதிகளுக்கும் ஒரு ஜெயிலருக்கும் நடக்கும் மோதல் தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது.

ஒரு சிலைக் கடத்தல் கும்பலின் தலைவன் கைது செய்யப்படுகிறார். அவர் ரஜினி ஜெயிலராக இருக்கும் சிறையில் அடைக்கப்படுகிறார்.

எனவே ஒரு கும்பல் தங்கள் தலைவனை வெளியே எடுக்க சதி திட்டம் போடுகின்றனர். அதனை எப்படி ‘ஜெயிலர்’ முறியடித்தார் என்பதுதான் படத்தின் கதை என தகவல்கள் வந்துள்ளன.

இதுபோல பல கதைகள் கசிந்துக் கொண்டிருந்தாலும் அடுத்த மாதம் ஆகஸ்டு 10 வரை காத்திருந்து ஜெயிலரை திரையில் ரசிப்போம்..

Rajini Mohanlals Jailer story line leaked

More Articles
Follows