சண்டக்கோழி2 சூட்டிங் மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்

சண்டக்கோழி2 சூட்டிங் மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal varalakshmi keerthy sureshலிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படம் மாபெரும் வெற்றியடைந்ததை முன்னிட்டு அதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதில் விஷால் நாயகனாக நடிக்க, நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி இருவரும் நடிக்கின்றனர்.

சண்டக்கோழி2 படத்தின் சூட்டிங்கை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கவுள்ளாராம் லிங்குசாமி.

இதற்காக சென்னையில் செட் போடப்பட்டுள்ளதாகவும் அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

2018ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை குறிவைத்து இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Sandakozhi2 plans to release on Pongal 2018

 

sandakozhi 2

விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் ஆடியோவுடன் சர்ப்ரைஸ் ட்ரீட்

விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் ஆடியோவுடன் சர்ப்ரைஸ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன் பாடல்களை வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இத்துடன் மெர்சல் படத்தின் டீசரையும் அன்றைய தினத்தில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Sources says that along with Songs Mersal teaser may release

அஜித்தால் குழம்பி நிற்கும் தனுஷ்-உதயநிதி படங்கள்

அஜித்தால் குழம்பி நிற்கும் தனுஷ்-உதயநிதி படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pemtசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்து விடும் என்ற நிலையில் இதன் ரிலீஸ் ஆகஸ்ட் 10ஆம் தேதி இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதனால் தனுஷ் நடித்து ரிலீசுக்கு தயாராகவுள்ள விஐபி2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காத்திருக்கின்றனர்.

ஒருவேளை அஜித்தின் விவேகம் தள்ளிப்போனால், ஆகஸ்ட் 4 அல்லது 11ஆம் தேதி விஐபி2 ரிலீஸ் ஆகும் எனவும், விவேகம் ரிலீஸ் 10ஆம் தேதி உறுதியென்றால் ஆகஸ்ட் 24ஆம் தேதி விஐபி2 ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கலாம்.

இதுபோல் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள பொதுவாக எம்மனசு தங்கம் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்காமல் விரைவில் என விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Dhanush and Udhayanithi movies waiting for Vivegam release date

dhanush with vip2 team

எந்த வேடத்திலும் நடிப்பேன்…. ‘மீசைய முறுக்கு’ம் ஆனந்த்ராம்

எந்த வேடத்திலும் நடிப்பேன்…. ‘மீசைய முறுக்கு’ம் ஆனந்த்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I can do any kind of roles says Meesaya Murukku fame AnandRam‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராம்.

படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இவர் பேசுகையில்,‘ நடிகனாகவேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைப்பட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி, லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிப் பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நல்லதொரு வாய்ப்பிற்கான தேடலில் இருந்தேன்.

பிறகு நண்பர்களின் உதவியுடன் ‘மீசைய முறுக்கு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ஆதியின் தம்பியாக நடித்தேன். படபிடிப்பு முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் ஜாலியாக இருந்தது.

சீனியரான விவேக் அவர்கள் பல இடங்களில் எங்களுக்கு பேருதவி செய்திருக்கிறார். இயக்குநர் சொன்னதற்காக பாக்ஸிங் கூட கற்றுக்கொண்டேன்.

இந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்தேன். ஒரு அறிமுக நடிகர் என்றில்லாமல் ரசிகர்கள் நான் வரும் காட்சிகளில் கைத்தட்டி விசில் அடித்த அனுபவம் எனக்குள் சிலிர்ப்பை தந்தது.

அந்த தருணத்தில் ஆனந்தக் கண்ணீருடன் ஆதியைப் பார்த்து நன்றி சொன்னேன். அவரோ இது தொடக்கம் தான்.

உன்னுடைய வளர்ச்சியை காண ஆசைப்படுகிறேன் என்றபோது, அவரின் கைப்பிடித்து நிச்சயமாக உங்களைப் போன்ற நல்லவர்களின் ஆதரவுடன் முன்னேறுவேன் என்றேன்.

‘மீசைய முறுக்கு ’படத்தின் மூலம் ஒரு நல்ல நட்பு வட்டாரம் கிடைத்திருக்கிறது.

இதனை தக்கவைத்துக் கொண்டே தொடர்ந்து திரையுலகில் நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும், ஹீரோவாகவும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணமுமிருக்கிறது.

எல்லா வகையான சவாலான கேரக்டர்களிலும் நடிக்கும் சிறந்த நடிகராகவே இருக்க விரும்புகிறேன்.‘ என்றார் ஆனந்த்ராம்.

I can do any kind of roles says Meesaya Murukku fame AnandRam

meesaya murukku team

கமல் மகளுக்கு ஆக்டிங் அட்வைஸ் கொடுத்த அஜித்

கமல் மகளுக்கு ஆக்டிங் அட்வைஸ் கொடுத்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith aksharahassan vivegamசிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன்.

இப்படத்தின் சூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சி தற்போது வெளிவந்துள்ளது.

அஜித் தனக்கான காட்சியை முடித்துவிட்டு அமர்ந்திருந்தாராம்.

அப்போது அக்ஷராஹாசனின் காட்சியை படமாக்கி கொண்டிருந்தாராம் டைரக்டர் சிவா.

அந்த காட்சியில் நடிக்க கிட்டதட்ட 15 டேக் வரை எடுத்தாராம் அக்‌ஷரா.

இதனை பார்த்த, நீங்க டென்ஷன் ஆகாதீங்க. 50 டேக் போனா கூட பரவாயில்லை. தைரியமா நடிங்க. உங்களால் முடியும்” என்றாராம்.

Ajiths acting advice Kamal daughter Aksharahassan at Vivegam spot

ஆகஸ்ட்டில் தெரிய வரும் சிம்புவின் புதிய அவதாரம்

ஆகஸ்ட்டில் தெரிய வரும் சிம்புவின் புதிய அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuநடிகர், இயக்குநர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்டர் சிம்பு.

இவர் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள படம் சக்க போடு போடு ராஜா.

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வைபவி, விவேக், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

விடிவி கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தை சேதுராமன் என்பவர் இயக்கி வருகிறார்.

சிம்பு இசையில் உருவாகியுள்ள பாடல்களை சிம்பு பெற்றோர், யுவன் சங்கர் ராஜா, லியோன் ஜேம்ஸ் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில் இதன் சிங்கிளை (ஒரு பாடலை மட்டும்) ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிட இருக்கிறார்களாம்.

முதன்முறையாக சிம்பு இசையமைத்துள்ள பாடல் என்பதால் ரசிகர்களின் சிம்புவின் புதிய அவதாரத்தை காண ஆவலாக உள்ளனர்.

Simbu debut as music director in Sakka Podu Podu Raja single release on August

vivek santhanam

More Articles
Follows