விஜய் யின் தெறி படம் மிகவும் பிடிக்கும் – சல்மான் கான்

விஜய் யின் தெறி படம் மிகவும் பிடிக்கும் – சல்மான் கான்

Vijay and salman khanபாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் தபாங் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான “தபாங் 3” பிரபுதேவா இயக்கத்தில் டிசம்பர் 20 வெளியாகிறது.

தபாங் படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, பிரகாஷ் ராஜ், அர்பாஸ்கான், மாஹி கில் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் புதியதொரு வேடத்தில் நான் ஈ புகழ் கிச்சா சுதீப் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் டிரெயலர் நேற்று புதுமையான முறையில் வெளியிடப்பட்டது.

தபாங் 3 படக்குழு வீடியோ கான்ஃபரஸிங் மூலம் மும்பையில் இருந்து சென்னை ,ஹைதராபாத், பெங்களூரு ரசிகர்களை சந்தித்தது. ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் உரையாடி படக்குழு டிரெய்லரை வெளியிட்டது. புதுமையான முறையில் அரங்கேறிய டிரெய்லர வெளியீடு பலரது கவனத்தையும் ஈர்த்தது. தபாங் 3 டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் பிரபுதேவா

இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். தபாங் வெற்றியை தொடர்ந்து தபாங் 3 எடுக்கிறோம் எனும்போதே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. மொத்தப் படக்குழுவும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தியா முழுதும் இப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்க்காக ரசிகர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் நேரடியாக சந்திக்க உள்ளோம். படத்தின் டிரெய்லர் உங்களை கவர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. படமும் உங்களை கவரும் என்றார்.

சல்மான் கான் பேசியதாவது…

தென்னிந்திய சினிமாக்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், விகரம் படங்களை விரும்பி பார்ப்பேன். இங்கே இப்போது ஹிந்தி சினிமாவை விடவும் பாகுபலி, கே ஜி எஃப் என தென்னிந்திய சினிமாக்கள் தான் வசூல் குவிக்கின்றன. தமிழில் குறிப்பாக விஜய்யின் போக்கிரி படத்தை நான் ரீமேக் செய்து நடித்தேன். அவரது தெறி, திருப்பாச்சி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தபாங் 3 படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இந்தப்படம் தெனிந்திய படம் போல் தான் இதில் அதிகமாக தென்னிந்திய கலைஞர்கள் தான் வேலை பார்த்துள்ளனர். பிரபுதேவா எங்களுடைய சொத்து அவர் இப்படத்தை இயக்கியிருப்பது வெற்றிக்கு உத்தரவாதமளிப்பபது போன்றது. எனது அடுத்த படத்தையும் அவர் தான் இயக்குகிறார். தமிழ் உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. விரைவில் தமிழ் ரசிகர்களை நான் நேரில் சந்திப்பேன். படத்தின் டிரெயலருக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றார்.

படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

கதை திரைக்கதை – திலீப் சுக்லா

இயக்கம் – பிரபு தேவா

தயாரிப்பு – சல்மான் கான், அர்பாஸ் கான், நிகில் திவேதி.

தயாரிப்பு நிறுவனம் – அர்பாஸ் கான் புரட்கஷன்ஸ், ஸஃபரூன் பிராட்காஸ்ட்.

Dabangg 3 Official Tamil Trailer Link : https://www.youtube.com/watch?v=WVLfRX0jlS4

ராயப்பன் வெறித்தனம்.. அட்லி அல்டிமேட்.. பிகில் விமர்சனம்

ராயப்பன் வெறித்தனம்.. அட்லி அல்டிமேட்.. பிகில் விமர்சனம்

Vijay Bigil Reviewபல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு பிகில் படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

காலை 4 மணிக்கு சில தியேட்டர்களில் காட்சிகள் என சொல்லப்பட்டாலும் 5 மணிக்கு மேல்தான் தமிழகத்தில் பிகில் திரையிடப்பட்டது.

தற்போது வரை முதல் பாதி பற்றிய விமர்சனங்கள் இதோ…

விஜய்யின் ராயப்பன் கேரக்டர் வெறித்தனம். வயதான கேரக்டரில் அசத்தல். அதிலும் ரயில்வே ஸ்டேசனில் நடைபெறும் இடைவேளை காட்சிகள் தாறுமாறு. ஆனால் ராயப்பன் கெட் அப் நாடக நடிகர் மேக் அப் போல் உள்ளது. இன்னும் நன்றாக மேக் அப் செய்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்.

மைக்கேல் காட்சிகள் ரசிகர்களுக்கு பக்கா விருந்து.

வழக்கம்போல் காதல், மாஸ், சென்டிமெண்ட், காமெடி என எதிலும் குறை வைக்காமல் கொடுத்துள்ளார் டைரக்டர் அட்லி. விஜய் நயன்தாரா காட்சிகள் ரொமான்டிக்.

இரண்டாம் பாதியில் பிகில் இன்ட்ரோ மற்றும் அதன் காட்சிகள் இருக்கும் எனத் தெரிகிறது-

இரண்டாம் பாதி ஓடிக்கொண்டிருக்கிறது. முழு விமர்சனம் விரைவில்…

Vijay Bigil Review

அஜித்-விக்ரம் நடித்த உல்லாசம் ரீமேக்? யங் ஹீரோஸ் யார் தெரியுமா..?

அஜித்-விக்ரம் நடித்த உல்லாசம் ரீமேக்? யங் ஹீரோஸ் யார் தெரியுமா..?

vikram prabu and dulquerநடிகர்கள் அஜித் மற்றும் விக்ரம் இணைந்து நடித்த படம் உல்லாசம். இந்த படத்தில் ஸ்ரீதேவி தங்கை மகேஸ்வரி நாயகியாக நடித்திருந்தார்.

1997 வெளியான இந்த படத்தை ஜேடி அண்ட் ஜெரி என்ற இரட்டையர் இயக்கியிருந்தனர். நடிகர் அமிதாப்பச்சன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு அதே இயக்குனர் இந்த படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.

இதில் அஜித் வேடத்தில் துல்கர் சல்மானும் விக்ரம் வேடத்தில் விக்ரம் பிரபுவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

உல்லாசம் படத்தை அப்படியே எடுப்பார்களா? அல்லது இந்த காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Ullasam remake with Vikram Prabu and Dulquer Salmaan

BREAKING பிகில் & கைதி படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

BREAKING பிகில் & கைதி படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி

TN Govt granted permission to screen Special show of Bigil and Kaithiஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி.

இந்த இரு படங்களும் தீபாவளியை முன்னிட்டு நாளை அக். 25ல் வெளியாகிறது.

இரண்டும் பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் அதிகாலை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. காலை காட்சிகள் 8 மணிக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. மீறி சிறப்புக் காட்சிகள் இருந்தால் அந்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

முன்பதிவு கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்து இருந்தார்.

இதனால் இரண்டு பட அதிபர்களும் தமிழக அரசிடம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் நாளை வெளியாகும் பிகில் & கைதி ஆகிய படங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சிறப்புக் காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக்காட்சிக்கு அனுமதி விடுமுறை தினங்களில் சிறப்புக் காட்சிக்கு ஏற்கனவே அனுமதி இருக்கிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த முதல்வர், தமிழக அரசுக்கு நன்றி என ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

TN Govt granted permission to screen Special show of Bigil and Kaithi

கமல் படத்திலிருந்து விலகி டைரக்டராகும் ஆர்.ஜே. பாலாஜி

கமல் படத்திலிருந்து விலகி டைரக்டராகும் ஆர்.ஜே. பாலாஜி

RJ Balaji will not be a part of Kamals Indian 2ரேடியோ ஸ்டேஷனில் ஜாக்கியாக தன் வாழ்க்கையை மீடியாவில் துவக்கியவர் ஆர்.ஜே.பாலாஜி.

அதன் பின்னர் பல படங்களில் காமெடியனாக நடித்தார். எல்.கே.ஜி பட மூலம் ஹீரோவும் ஆனார். ஐசரி கணேஷ் தயாரித்த அந்தப் படம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இந்தியன் 2ல் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது ஜசரி கணேஷ் தயாரிக்கவுள்ள ஒரு அரசியல் நையாண்டி படத்தை இயக்கவிருக்கிறாராம் ஆர்.ஜே. பாலாஜி.

புதிய படத்தை இயக்க வேண்டியிருப்பதால் கமல் படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

இந்த படத்தில் ஹீரோவாக சதீஷ் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

RJ Balaji will not be a part of Kamals Indian 2

நந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376

நந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய IPC 376

nandita in ipc 376பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி வெற்றிபெற்றும் வருகின்றன. இது தமிழ்சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா இதில் நாயகியாக நடித்து வருகிறார். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம்.

நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல். சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். நடிகை விஜயசாந்திக்குப் பிறகு சண்டைக்காட்சிகளில் அசாத்தியமாக நடித்திருக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா தான் என்ற பேச்சு இந்தப்படம் வந்தபின் இண்டஸ்ட்ரி எங்கும் கேட்கும் என்கிறார்கள். ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன்.

இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. இப்படி இப்படத்தின் தலைப்பிலே பெண்கள் மீதான அக்கறை தெரிகிறது. அதுவே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய k.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக S.பிரபாகர் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது

More Articles
Follows