தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜாக்சன் துரை படத்தை தொடர்ந்து, கட்டப்பாவை காணோம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.
இதனையடுத்து, தனது அடுத்த படத்தையும் உடனே முடிவு செய்துவிட்டார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் வளர்ந்துள்ள, சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறாராம்.
இந்த இயக்குனரை விஜய் ஆண்டனிதான் சிபாரிசு செய்தாராம்.
த்ரில்லர் கதையான இப்படத்தை சிபிராஜ், அவர்களின் குடும்ப பேனரான நாதம்பாள் பிலிம் பேக்டரி சார்பாக தயாரிக்கிறார்.
இதர கலைஞர்கள் முடிவானவுடன் நவம்பர் முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என சிபிராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.