வருணுக்கு வாத்தியராக மாறிய ஜெயம் ரவி-அர்விந்த் சாமி

bogan team‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி இணைந்துள்ள ‘போகன்’ வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகிறது.

நாயகியாக ஹன்சிகா நடிக்க, ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கியிருக்கிறார்.

இவர்களுடன் வருண் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறாராம்.

இது குறித்து நடிகர் வருண் கூறியதாவது…

வளர்ந்து வரும் நடிகருக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? ஆரம்பத்தில் ஜெயம் ரவி சார் மற்றும் அரவிந்த் சுவாமி சார் ஆகியோரோடு இணைந்து நடிப்பது சற்று பதட்டமாக தான் இருந்தது.

ஆனால் நாளடைவில் அவர்கள் எனக்கு அளித்த சுதந்திரமும், உற்சாகமும் என்னை பதட்ட நிலையில் இருந்து வெளி கொண்டு வந்துவிட்டது.

நான் நடித்த காட்சிகள் சிறப்பாக அமைய, அவர்கள் இருவரும் என்னோடு உடன் இருந்து வழி நடத்தியது மட்டுமில்லாமல் எனக்கு சிறந்ததொரு ஆசானாகவும் இருந்து என்னை ஊக்குவித்தனர்

இயக்குநர் லக்ஷ்மன் சார் என்னுடைய கதாபாத்திரத்திற்காக, ஒரு தனித்துவமான நடை பழக்கத்தை எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார்.

அதற்கான காரணத்தை ‘போகன்’ திரைப்படத்தை பார்த்த பின்பு ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். தொடர்ந்து ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் படங்களில் பணியாற்றி வருவதை நான் பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

Jayam Ravi Arvind Swamy helped me to improvise my acting skills says BOGAN actor Varun

 

Overall Rating : Not available

Related News

தனி ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவி…
...Read More
‘தனி ­ஒ­ருவன்’ மற்றும் ‘போகன்’ படங்­களில்…
...Read More
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அர்விந்த்…
...Read More

Latest Post