தங்கர் பச்சான் ஒரு ‘செல்லுலாய்டு சிற்பி’.. வேணுமின்னா தமிழ்ல வச்சிக்குங்க.. – ஆர்வி. உதயகுமார்

தங்கர் பச்சான் ஒரு ‘செல்லுலாய்டு சிற்பி’.. வேணுமின்னா தமிழ்ல வச்சிக்குங்க.. – ஆர்வி. உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒளிப்பதிவாளர் நடிகர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்..

ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின் படத்தொகுப்பு, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். செப்டம்பர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.வி உதயகுமார், பிரமிட் நடராஜன், அதிதி பாலன், மஹானா சஞ்சீவ், விபின்லால், நிஜந்தன், பேபி சாரல், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், படத்தொகுப்பாளர் லெனின், கலை இயக்குனர் மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது…

“கிழக்கே போகும் ரயில் படத்தின் படப்பிடிப்பில் சிறுவனாக இருந்தபோது நான் கேட்ட பாரதிராஜாவின் அதே குரல் இன்றும் மாறவில்லை.

இப்போதும் மிகச்சிறந்த படத்தை என்னால் கொடுக்க முடியும் என்கிற துணிச்சல் அவருக்கு மட்டுமே உண்டு. அவரது படைப்புகள் இப்படித்தான் என யூகிக்க முடியாதபடி இருக்கும். கோவணம் கட்டிய கமலுக்கு கோட் சூட் போட்டு படம் எடுத்தார். இப்போது திடீர் திடீரென மருத்துவமனைக்கு சென்று விடுவார்..

நாங்கள் எல்லாம் கவலையுடன் அவரை போய் பார்க்கும் போது அடுத்த படத்திற்காக கதையை தயார் செய்து கொண்டு இருப்பேன் என்று கூறி ஆச்சரியப்படுத்துவார். இயக்குநர் தங்கர்பச்சான் என்னுடைய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்துள்ளார்.

அப்போதே என்ன படம் எடுக்கிறார் என்று என்னை திட்டுவார். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.. எப்போதும் தனது குணாதிசயத்தை சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பவர்..

பாரதிராஜாவை வைத்து படம் எடுக்க போகிறேன் என்று சொன்னபோது அவர் உடல்நிலை சரிப்பட்டு வருமா என்று விசாரித்துக் கொள்ளுங்கள் என கூறினேன். ஆனால் படம் பார்த்த பிறகு தான் இந்த கதையில் அவரைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்கிற எண்ணம் தோன்றியது.

அதிதி பாலனின் நடிப்பை பார்த்த போது படம் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என்கிற உணர்வு ஏற்பட்டது. தங்கர் பச்சானுக்கு ‘செல்லுலாய்டு சிற்பி’ என்கிற பட்டத்தை சூட்டுகிறேன்.

தங்கருக்கு ஆங்கிலம் பிடிக்கவில்லை என்றால் அதை தமிழில் மாற்றி வைத்துக் கொள்ளட்டும்.. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சாரல் பிறவி நடிகை என்று சொல்லும் விதமாக அற்புதமாக நடித்துள்ளார்” என்றார்.

நடிகை மஹானா சஞ்சீவ் பேசும்போது…

“இந்த படத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே இயக்குநர்களாகவே இருக்கின்றனர். இத்தனை பேருடன் இணைந்து நடித்தது பெருமையாக இருக்கிறது.

நிறைய படங்கள் பண்ண வேண்டும். கருமேகங்கள் கலைகின்றன படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும்” என்றார்.

தொலைக்காட்சி செய்தியாளரும் நடிகருமான நிஜந்தன் பேசும்போது…

“16 வயதினிலே படத்திற்குப் பிறகு சினிமா வேறு மாதிரியான உருவம் எடுத்தது. அதன்பிறகு பல வருடங்கள் கழித்து ‘அழகி’ படத்துக்கு பிறகு சினிமாவின் மொழியே மாறியது.

இப்படத்தில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு அதன் தாக்கம் பல வருடங்கள் இருக்கும்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசும்போது…

“திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது தங்கர் பச்சான் எனது சீனியர்.. இந்த படத்தில் என்னை பணியாற்ற அவர் அழைத்தபோது அவரும் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் என்னுடைய பணியில் எந்த தலையீடும் இருக்குமோ என்று நினைத்து அதை அவரிடமும் கூறினேன்.

ஆனால் அவர், தான் டைரக்ஷனை மட்டும் பார்த்துக் கொள்வதாகவும் என்னுடைய பணியில் குறுக்கிட மாட்டேன் என்றும் கூறி முழு பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்து விட்டார்.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் தான் பணியாற்றிய சமயத்தில் தனக்கு ஒளிப்பதிவில் அளித்த சுதந்திரம் பற்றி கூறும்போது அதற்கு மேல் பேச முடியாமல் கண்கலங்கினார்.

நம்மை உற்சாகப்படுத்தியே கூடுதலாக வேலை வாங்கி விடுவார். இந்த கதைக்கு முதலில் தருமபுரி தான் லொகேஷன் என முடிவு செய்திருந்தாலும் கதையின் சூழலுக்கு கும்பகோணம் தான் சரியாக வரும் என மாற்றி படப்பிடிப்பை நடத்தினோம்.

மேலும் ராமேஸ்வரம் கதைக்களம் என்பதால் அந்த சமயத்தில் பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அவர் நலம் பெற்று வந்தவுடன் கிட்டத்தட்ட 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம்” என்று கூறினார்.

எடிட்டர் லெனின் பேசும்போது…

“இந்த படத்தில் எல்லோருமே கிழவர்களாக இருக்கிறார்கள்.. என்னுடைய படத்தொகுப்பை அப்போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது என்னை தேடி வருகிறார்கள். இந்த படத்தின் படத்தொகுப்பை முடித்து டப்பிங்கிற்கு அனுப்பும்போது கிட்டத்தட்ட ஐந்தே கால் மணி நேரம் படம் இருந்தது. பேசாமல் இரண்டு பாகங்களாக வெளியிடலாம் அல்லது இரண்டு இடைவேளைகள் விட்டு படத்தை வெளியிடலாம் என்று கூட கூறினேன்.

அடுத்ததாக பாரதிராஜா இயக்கவுள்ள படத்திற்கு நான் தான் படத்தொகுப்பு செய்வேன். இன்றைய இளைஞர்கள் இப்படி படம் எடுக்கிறார்களே, நாம் இதைவிட அதிகமாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்கிற ஆத்திரம் பாரதிராஜாவுக்கு இன்னும் இருக்கிறது.

இந்த படத்தில் நடித்த பாரதிராஜாவுக்கு விருது கிடைக்கிறதோ இல்லையோ குழந்தை நட்சத்திரம் சாரலுக்கு பேசியவர்கள் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்.

அருவி படத்திற்கு எடிட்டிங்கில் நான் தான் உதவி செய்தேன். அதில் பார்த்ததற்கும் இந்த படத்தில் பார்ப்பதற்கும் அதிதி பாலன் வித்தியாசமாக தெரிகிறார். பாரதிராஜா உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கூட வெகு சிரத்தை எடுத்து டப்பிங் பேசியுள்ளார்” என்று கூறினார்.

கலை இயக்குநர் மைக்கேல் பேசும்போது…

“வெட்டு, குத்து, துப்பாக்கி என்கிற கலாச்சாரம் சார்ந்து இன்று படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது” என்று கூறினார்.

தயாரிப்பாளரும் நடிகருமான பிரமிட் நடராஜன் பேசும்போது…

“இது மாதிரி படங்கள் அமைவது அபூர்வம். இப்படம் பார்த்தபோது இடைவேளையின்போது ஏற்பட்ட தாக்கம் இப்போது வரை நீங்கவில்லை. பெரிய இயக்குநர், ஹீரோவின் படங்களுக்கு கமர்சியல் வெற்றி கிடைக்கிறது. ஆனால் இந்த சமூகத்திற்கு என்ன விஷயத்தை சொல்லப் போகிறார்கள் ?.

பாசத்தை மட்டுமே மூலதனமாக வைத்து இந்த படத்தை கொடுத்துள்ளார் தங்கர் பச்சான். இந்தப்படத்திற்காக பாரதிராஜாவுக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என்றால் தேசிய விருது கொடுப்பதையே நிறுத்தி விடலாம்.

என்னுடைய இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்தவர் தங்கர் பச்சான்.

பாலச்சந்தர் இருந்திருந்தால் இப்போது தங்கர் பச்சானை கட்டிப்பிடித்து பாராட்டி இருப்பார். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசும்போது இயக்குநர் ஜனநாதன் பற்றி பேச முடியாமல் கண் கலங்கினாரே, இந்த சினிமா உலகம் மட்டும்தான் நன்றி உணர்வு அதிகமாக உள்ள துறை” என்று கூறினார்.

RV Udhayakumar praises Thangar Bachan

50 வயதில் குழந்தை பிறந்தால்.? என் வாழ்வில் என்ன நடக்குமோ.? மறுமணம் குறித்து சுகன்யா

50 வயதில் குழந்தை பிறந்தால்.? என் வாழ்வில் என்ன நடக்குமோ.? மறுமணம் குறித்து சுகன்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1991-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுகன்யா.

நடிகை சுகன்யா இதைத்தொடர்ந்து ‘சின்ன கவுண்டர்’, ‘இந்தியன்’, ‘வால்டர் வெற்றிவேல்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த 2002-ல் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் சுகன்யா மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவியது.

இதுகுறித்து சுகன்யா கூறும்போது, ”கணவருடனான திருமண பந்தம் சரியாக பொருந்தவில்லை எனில் பெண்கள் அதில் இருந்து விலகிவிடுவது நல்லது. இந்த சமூகத்துக்கு கட்டுப்பட்டு எல்லாவற்றையும் சகித்து போவதால் பல தற்கொலைகள் அரங்கேறி இருக்கின்றன.

சமூகத்தை எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரலாம். என் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. நான் விண்ணப்பித்து பல ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது சமீபத்தில் தான் எனக்கு விவாகரத்து கிடைத்தது.

மறுமணம் என்ற எண்ணம் இதுவரைக்கும் எனக்கு வந்தது இல்லை. அதற்காக மறுமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் சொல்லவில்லை.

இன்னும் 2 மாதங்களில் 50 வயதை எட்டிவிடுவேன். இதற்கு பிறகு திருமணம் செய்து, குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுமா? அல்லது பாட்டி என்று கூப்பிடுமா? என்று குழப்பமாக இருக்கிறது. இது சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயம் என்றாலும், நடைமுறையில் சில விஷயங்களை எண்ணி பார்க்கத்தான் வேண்டியதுள்ளது.

வாழ்வில் நமக்கு அனைத்து நிலைகளிலும் ஒரு துணை வேண்டும். எனவே மறுமணம் செய்வேனா? இல்லையா? என்பதை என்னால் சொல்லமுடியாது.

என் வாழ்வில் என்ன நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ, அது நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அவ்வளவுதான்”என்றார்.

50 at actress sukanya opens up about second marriage

ARE YOU READY ? சென்னையில் உலக திரைப்பட விழா : திரைப்பட பயிற்சி.. பராசக்தி முதல் இராவண கோட்டம் வரை.!

ARE YOU READY ? சென்னையில் உலக திரைப்பட விழா : திரைப்பட பயிற்சி.. பராசக்தி முதல் இராவண கோட்டம் வரை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக சினிமா விழா சென்னையில் வருகிற செப்டம்பர் 1, 2 & 3ம் தேதி வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள் சென்னையில் உள்ள தேவி கருமாரி திரையரங்கில் நடைபெற உள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள சிகரம் அரங்கில் நடைபெற்றது.

இதில் விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலக சினிமா விழா பற்றி பாஸ்கரன் பேசும் போது…

15 படங்கள் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவை போற்றும் வகையில் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய ‘அடவி’ என்ற மௌன திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படுகிறது.

மேலும் பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள் திரையிடப்படுகிறது. தமிழ் விண்டேஜ் உலக சினிமா, தமிழ் பெஸ்டிவல் வெர்ஷன் திரைப்படங்கள், தமிழ் சிறுவர் சினிமாக்கள் என பல பிரிவுகளில் படங்கள் திரையிடப்படுகிறது.

அதுமட்டுமின்றி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவோடு இணைந்து சென்னை உலக சினிமா விழாவில் அவரது திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கு நுழைவு கட்டணம் இல்லை. திரைப்பட விழாவில் படங்களை காண வரும் பார்வையாளர்களுக்கும் கட்டணம் கிடையாது.

இந்த விழாவிற்கான அனைத்து செலவுகளும் நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் வெள்ளிமலை, இராவண கோட்டம் போன்ற படங்களும் ஃபெஸ்டிவல் வெர்ஷன் என்ற பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டு திரையிட தயாராக இருக்கிறது.

இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்கள் போட்டிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து 15 படங்களை தேர்வு செய்து திரையிடுகிறோம்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதி நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படம் பிரதானமாக திரையிடப்பட உள்ளது. இந்த விழாவில் குறைந்த செலவில் உலக சினிமாவை உருவாக்குவது எப்படி என்ற பயிற்சி பட்டறையை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருமான விக்னேஷ் குமுளை, நேரடி ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத் ஆகிய இருவரும் இணைந்து நடத்த இருக்கிறார்கள்.

இருவரும் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளை பெற்று வரும் கூழாங்கல் மற்றும் கற்பரா திரைப்படத்தை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட ரசனை குறித்த பயிற்சி பட்டறையை பல திரைப்பட இயக்குநர்கள் இணைந்து நடத்த இருக்கிறார்கள்.

சிறுவர்களுக்கான சினிமா திரையிடும்போது மட்டும் சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மற்ற திரைப்படங்களை காண சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சிறுவர் திரைப்படங்களை காண வரும் சிறுவர்களுக்கும் அவர்களுடன் துணையாக வரும் பெற்றோர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அரங்கில் அனுமதிக்கப்படுவார்கள்.

பார்வையாளர்களுக்கான அனுமதி சீட்டினை பெற கூகுள் ஃபார்ம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ” என விழா ஒருங்கிணைப்பாளர் உலக சினிமா பாஸ்கரன் தெரிவித்தார்.

செந்தில் குமரன் சண்முகம் பேசும்போது…

“படம் இயக்க வரும் இளம் இயக்குநர்கள் தங்களது படங்களை திரையரங்குகளில் வெளியிட ஒரு வடிவத்திலும், திரைப்பட விழாக்களில் வெளியிட ஒரு வடிவத்திலும் எடுக்க இது போன்ற திரைப்பட விழாக்கள் துணையாக இருக்கும்” என்றார்.

இயக்குனர் ராசி அழகப்பன் பேசும் போது,

வெளிநாடுகளில் சினிமாவுக்கு மிகப் பெரிய வர்த்தகம் உள்ளது. படைப்பாளிகளையும் எழுத்தாளர்களையும் திரைப்பட விழாக்கள் தான் கொண்டாடுகின்றன. இந்த 15 படங்களும் தகுதி உள்ள படங்கள். இந்த விழாவிற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.

World film festival at Chennai complete updates

நடிகர் துரை சுதாகர் மகள் நிலா பிறந்தநாள் விழாவில் பிரபலங்கள் பங்கேற்பு

நடிகர் துரை சுதாகர் மகள் நிலா பிறந்தநாள் விழாவில் பிரபலங்கள் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘களவாணி 2’ படம் மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காட்டி பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடம் என்றாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பயணித்து வரும் துரை சுதாகரின் விருந்தோம்பல் பற்றி கோலிவுட்டே வியந்து பேசி வருகிறது.

துரை சுதாகர்

சினிமா மீது உள்ள ஆர்வத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்தாலும், தன்னுடைய தஞ்சை மக்கள் மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் துரை சுதாகரின் வீட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால் ஒட்டு மொத்த பிரபலங்களும் அங்கு குவிந்துவிடுவது வழக்கம்.

அந்த வகையில், துரை சுதாகர் அவர்களின் இளையமகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்றது.

இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார், மேயர் சண்.ராமநாதன் மற்றும் நடிகர்கள் விமல், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, இயக்குநர்கள் சற்குணம், கெவின் ஜோசப், அடைக்கலமாதா கல்லூரி நிறுவனர் டாக்டர். அருணாச்சலம் உள்ளிட்ட பிரபல திரைப்பட கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு குழந்தை நிலாவை வாழ்த்தினார்கள்.

துரை சுதாகர்

Actor Durai Sudhakar daughter Nila birthday party

விஜய்யின் கேரியரில் ‘லியோ’ முக்கியமான ஒன்று.; ஹாட் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

விஜய்யின் கேரியரில் ‘லியோ’ முக்கியமான ஒன்று.; ஹாட் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திரமான ஹரோல்ட்தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.அந்த வீடியோ ஒரே நாளில் 15.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதது.

இந்த நிலையில், ‘லியோ’ படம் குறித்து தகவல் ஒன்றை கூறியுள்ளார் தயாரிப்பாளர் லலித்குமார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “விஜய்யின் கேரியரில் ‘லியோ’ முக்கியமான படமாக இருக்கும். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் இன்டர்வல் ப்ளாக் பார்க்கும்போது எங்களுக்கே கூஸ்பம்பாக இருந்தது. இடைவேளைக் காட்சியை பொறுத்தவரை 8 நிமிடம் வரும். நிச்சயம் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பரிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

vijay’s leo interval block would be massive says lalith producer

ரஜினியுடன் நடிக்க மறுத்த நானி.; ஓகே சொன்ன பிரபல நடிகர்

ரஜினியுடன் நடிக்க மறுத்த நானி.; ஓகே சொன்ன பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நடிகர் அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர் நானி, பகத் பாசில், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் நானி இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிக்க இருக்கிறார்கள்.

மேலும், நடிகர் சர்வானந்த் ஏற்கனவே தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’, ‘கணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வானந்த்

actor sharwanand repleace nani in rajini’s thalaivar 170 movie

More Articles
Follows