தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.
இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவன் மேனன், யோகி பாபு, மஹானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வைரமுத்து பாடல்களை எழுத ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழா மேடையில் இறுதியாக தங்கர்பச்சான் பேசினார். அவர் பேசும்போது தன் படத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது குறித்தும் தன் படைப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காததும் குறித்து ஆதங்கத்துடன் பேசினார்.
அவர் பேச்சில்.. “அழகி படத்தை வியாபார நோக்கத்திற்காக திரையிட்டு காட்டினேன். கிட்டத்தட்ட 100 காட்சிகள் திரையிட்டு இருப்பேன். ஆனால் ஒருவரும் வாங்க வரவில்லை. ஆனால் அதன் பிறகு மக்கள் அந்த படத்தை கொண்டாடினார்கள்.
மக்களை நம்பி தான் என் படைப்புகளை நான் கொடுக்கிறேன்.. நிறைய படங்களை பிளாக் டிக்கெட் வாங்கி பார்க்கிறார்கள்.
விமர்சனங்களில் நல்லா இல்லை என்று சொன்னாலும் அப்படி என்ன இருக்கு என்று படத்தை சென்று பார்க்கிறார்கள். ஆனால் என்னுடைய கருமேகங்கள் கலைகின்ற படம் உங்கள் அனைவரையும் அழ வைக்கும்.
இந்த படத்தை பார்த்தபின் ஒவ்வொருத்தரும் தங்கள் அப்பாவை தேடி ஓடுவார்கள். இந்த படத்திற்காக நான் அனைவரையும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன்.
யோகி பாபு என்னை எத்தனை முறை திட்டினார் என்று தெரியாது. அவரால் பத்து நிமிடம் கூட நிற்க முடியாது. அத்தனை படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் எனக்காக நடித்துக் கொடுத்தால் அவருக்காக மூன்று மாதங்கள் டப்பிங் செய்ய காத்திருந்தேன். பாரதிராஜாவும் என்னை இப்போது கூட திட்டிக் கொண்டிருப்பார்.. அவர் இங்கு வரவில்லை அவர் வந்திருந்தால்.. அவர் காலில் விழுந்து இருப்பேன்.. அதுபோல அதிதி பாலன் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஒரு காட்சி ஆறு நிமிடங்கள் ஏழு நிமிடங்கள் இருக்கும் அப்படி அசத்தியிருக்கிறார் இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்” என்றார்.
Thankar Bachan speech at Karumegangal Kalaigindrana