மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றங்கள் நிகழும்.; நம்பிக்கையில் தங்கர்பச்சான்

மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றங்கள் நிகழும்.; நம்பிக்கையில் தங்கர்பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை பார்க்க நினைத்தாலும் குடும்பத்தினருடன் பார்ப்பதற்கு வசதி இல்லாத படி காலை காட்சியும் இரவு காட்சிகளுமே முக்கால்வாசி திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டு இருந்தன.

படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவிப்பதாலும் இரண்டாவது தடவை பார்க்க தொடங்கி விட்டதாலும் ஒவ்வொரு நாளும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றன.

இதனால் நேற்று பல திரையரங்கங்கள் நிரம்பி இருக்கின்றன.

இன்றிலிருந்து கூடுதலான காட்சிகளை ஒதுக்கியதுடன் அதிகப்படியான காட்சிகளை குடும்பத்தினருடன் காண்பதற்கு வசதியாக 2.30, 6.30 காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை திரையிடாத பல ஊர்களிலும் நேற்றிலிருந்து புதிய அரங்கங்களில் படத்தை திரையிடத் தொடங்கி விட்டனர்.

எத்தகைய மாற்றங்களும் மக்கள் நினைத்தால் மட்டுமே நிகழும். ‘கருமேகங்கள் கலைகின்றன’ இப்பொழுது படம் பார்ப்பவர்களின் கைக்கு சென்றுவிட்டது.

யாருக்காக இப்படைப்பு உருவாக்கப்பட்டதோ அவர்கள் இனி இதைக் கொண்டு சென்று அனைவருக்கும் சேர்த்து விடுவார்கள் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது.

– தங்கர் பச்சான்

தங்கர்பச்சான்

Change happens only when people think says thankarbachan

இதற்கு ஏன் இவ்வளவு பில்டப்.? சிவகார்த்திகேயனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

இதற்கு ஏன் இவ்வளவு பில்டப்.? சிவகார்த்திகேயனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபகாலமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட ‘மாவீரன்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தலையில் தலைப்பாகை அணிந்திருந்தார்.

அப்போதே அவர் இது ‘எஸ் கே 21’ படத்திற்கான கெட்டப் என்று கூறி வந்தார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக தான் இந்த புதிய கெட்டப் என்று கூறி வந்தார். இதன் ஷூட்டிங் கடந்த சில தினங்களாகவே காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீர் சூட்டிங் முடிவடைந்தது என தெரிவித்திருந்தது படக்குழு.

அப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். அப்போது சிவகார்த்திகேயன் தலைப்பாகை அணியவில்லை. மிலிட்டரி மேனாக சிவகார்த்திகேயன் நடிப்பதால் அதற்காக தலைமுடியை ஒட்ட வெட்டி உள்ளார்.

இதற்காகத்தான் இத்தனை நாள் இவ்வளவு பில்டப் கொடுத்தாரா சிவகார்த்திகேயன்? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Why so buildup for Sivakarthikeyan 21 movie getup

இசையமைப்பாளர் வீ. தஷி விபத்தில் மரணம்.; நடந்தது என்ன.? வாழ்க்கை குறிப்பு

இசையமைப்பாளர் வீ. தஷி விபத்தில் மரணம்.; நடந்தது என்ன.? வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘சேஸிங்’, ஒத்த வீடு, ஆடவர், சாதனை பயணம் என நூற்றுக்கும் மேலான படங்களுக்கு இசையமைத்துள்ளார். நிறைய கவிஞர்கள், நிறைய பாடகர்களை உருவாக்கியவர்.

கேரளாவில் இருந்து காரில் சென்னைக்கு வரும் போது, கோயமுத்தூர் அருகே கார் டயர் வெடித்து, ஏற்பட்ட விபத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி மதியம் சம்பவ இடத்திலேயே காலமானார்.

வாழ்க்கை குறிப்பு…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாக்குடியில் வீரப்பன் என்கிற பாரதி மோகன் – ரத்தினம்மாள் தம்பதியின் மகனாக 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிறந்தார் சிவக்குமார்.

ஆரம்பப்பள்ளிக் கல்வியை வாட்டாக்குடியில் முடித்தவர், மேல்நிலைக் கல்வியை சென்னை ஆவிச்சி பள்ளியில் தொடர்ந்தார்.

அப்பா பாரதி மோகன் ‘யார் குற்றவாளி’, ‘அத்தான்’ ஆகிய படங்களைத் தயாரித்து, பாடல்கள் எழுதியவர். அவருடைய அறைத் தோழர்களாக இசையமைப்பாளர் ரவீந்திரன், பாடகர் ஜெயச்சந்திரன் மற்றும் நடன இயக்குநர் சலீம் ஆகியோர் இருந்தனர்.

ஸ்டுடியோக்களுக்கு அப்பா போகும்போது உடன் செல்லும் வழக்கத்தை வைத்திருந்தார் சிவக்குமார்.

அப்பாவின் பரிந்துரையில் ரவீந்திரனிடம் மார்க்கிங் உதவியாளராகச் சேர்ந்தார். ஒரு படத்துக்கு பின்னணி இசை சேர்ப்பதற்கு, காட்சிகளை ஓடவிட்டு, எந்த இடத்திலிருந்து எதுவரை இசை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பு எழுதுவதுதான் மார்க்கரின் வேலை. அதில் முழு ஈடுபாட்டோடு பணியாற்றினார் சிவக்குமார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் குருநாதர் நித்யானந்தம் இவருக்கு கீபோர்டு வாசிக்க கற்றுக்கொடுத்தார். இளையராஜாவிடமிருந்த சக்திவேலிடம் ஆர்மோனியம் கற்றுக்கொண்டார்.

சலீல் சவுத்ரி, லக்ஷ்மிகாந்த்- பியாரிலால், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் ‘மியூசிக் மார்க்கர்’ பணியை 2000 படங்களுக்கு மேல் செய்திருக்கிறார் சிவக்குமார்.

ரவீந்திரன் மற்றும் ஸ்யாம் ஆகியோரின் மலையாளப் படங்களில் பணியாற்றியபோது குட்டி கிருஷ்ணன் என்கிற தயாரிப்பு நிர்வாகி அறிமுகமாகியிருக்கிறார். அவரது பரிந்துரையில் சிவக்குமாருக்கு கிடைத்த படம் ‘தந்த்ரா’.

அரவிந்த் ஆகாஷ்- ஸ்வேதா மேனன் நடித்த அந்தப்படத்தை கே.ஜே.போஸ் இயக்கியிருந்தார். அந்தப் படத்துக்கான பின்னணி இசைச்சேர்ப்பை ஒரு ரீல் மட்டும் பார்த்த இயக்குநர், ‘நான் அடுத்த வேலைகளைப் பார்க்கிறேன். உங்கள் விருப்பப்படி இசைப்பணியைச் செய்யுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

அந்தப்படத்துக்கு டி.டி.எஸ் எஞ்சினியராக பணியாற்றிய அஜீத், ‘உங்களுக்கு விருது கிடைக்கும்’ என்று வாழ்த்தியிருக்கிறார். அவரது வாக்கு பலித்தது.

இசையமைத்த முதல் படத்துக்கே கேரள அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது சிவக்குமாருக்குக் கிடைத்தது. சினிமாவுக்காக வீ.தஷி என்று பெயர் மாற்றிக்கொண்டார்.

மலையாள முரளி நடித்த ‘அச்சன்டே பொன்னுமக்கள்’, மோகன்லால் நடித்த ‘பகவான்’, ‘கோபாலபுரம்’, ‘வெள்ளியங்காடி’, ‘குண்டாஸ்’, ‘டர்னிங் பாய்ண்ட்’ என 60க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தஷி.

இவரது ‘தந்த்ரா’ படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் சந்திரன், ‘மாணவன் நினைத்தால்’ தமிழ்ப்படத்துக்கு இசையமைக்க இவரை நியமித்தார். அந்தப்படத்தில் மாணிக்க விநாயகம் பாடி, மணிவண்னன் நடித்த ‘காதல் கொள்ளாதே பூமணமே…’, சொர்ணலதா- சுபீஷ் பாடிய ‘பேரழகா உன் பேரழகா…’ பாடல்கள் பெயரை வாங்கிக் கொடுத்தன.

கோமளாவை மனைவியாக கைபிடித்த பிறகே தனது இசை வாழ்க்கையில் ஒளி தெரிந்ததாகக் குறிப்பிடுகிறார் தஷி. இரண்டு மகன்களில் ரங்கராஜ் பியானோவில் ஆறு டிகிரி முடித்துள்ளார். இன்னொரு மகன் கிரண், டிரம்ஸ் வாசித்து, பள்ளிக்கூடத்தில் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறார்.

இதுவரை 2400 தெய்வீக ஆல்பங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தஷி. 90 பாடகர்களையும், 80 பாடலாசிரியர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. லைவ் ஆர்க்கெஸ்ட்ராதான் இசைக்கு உயிர் தரும் என்பது இவரது கருத்து.

தனது படங்களில் தில்ரூபா, சிதார், வீணை, தபேலா, டோலக், வயலின், எடக்கை, உடுக்கை ஆகிய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி வருகிறார்.

சலீல் சவுத்ரியின் படத்துக்கு பணியாற்றியபோது, உணவு இடைவேளையில் அவரது ஆர்மோனியத்தை எடுத்து வாசித்திருக்கிறார் தஷி. அதைப் பார்த்துவிட்ட சலீல் சவுத்ரி, மறுநாள் அழைத்திருக்கிறார்.

பயந்துகொண்டே போனவரிடம், புதிய ஆர்மோனியப் பெட்டியைக் கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார் சலீல். இன்றுவரை அந்த ஆர்மோனியத்தில்தான் இசைப்பணிகளைச் செய்கிறார் தஷி.

ஆர்.சி.சக்தி இயக்கிய ‘தாலிதானம்’ படத்துக்கு மார்க்கிங் பணி செய்தபோது, ‘படவா நீ நல்லா வருவே’ என்று பாராட்டியிருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

கார்த்திக் கார்டனில் நடந்த ஒலிப்பதிவுக்கு, சைக்கிள் மிதித்து வந்த களைப்போடும், வியர்வை முகத்தோடும் வந்துசேர்ந்த தஷியை ஒருமாதிரி பார்த்த லக்ஷ்மிகாந்த் – பியாரிலால், ஒரு ரீலுக்கு இவர் குறிப்பெடுத்த மார்க்கிங்கைப் பார்த்து, தோள்தட்டி பாராட்டியிருக்கிறார்கள்.

புகழேந்தியின் மேற்பார்வையில் இசைச்சேர்ப்பு நடத்தும் கே.வி.மகாதேவனுக்கு தபேலா மைக்கேல் மூலம் ஒரு படத்துக்குப் பணியாற்றி பாராட்டுகளை அள்ளியிருக்கிறார் இவர்.

இசையமைப்பாளர் சங்கத்திலிருந்து ‘கோல்டன் ஜூபிளி’ விருது வாங்கியிருக்கும் இவருக்கு, உலக பெண்கள் அமைப்பு ‘இசை அரசர்’ பட்டத்தை வழங்கியிருக்கிறது.

‘கருவறை’, ‘தீ விலங்கு’, ‘பயணங்கள் தொடரும்’, ‘காதல் தோழி’, ‘சங்கர் ஊர் ராஜபாளையம்’, ‘சக்ரவர்த்தி திருமகன்’. ‘ஒத்த வீடு’, ‘என் பெயர் குமாரசாமி’, ‘ஒளடதம்’, ‘அலையாத்தி காடு’, ‘அஸ்திரம்’, ‘பாதசாரிகள்’, ‘கல் பாலம்’, ‘நுகம்’, ‘பயம்’, ‘நீதான் ராஜா’, ‘‘படை சூழ வா’, ‘‘நானாக நானில்லை’, ‘அபூர்வ மகான்’ என வீ.தஷி பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

===================

கார் விபத்தில் காலமான தஷி அவர்களின் பேட்டி சுருக்கம்

வாட்டாகுடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான் தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம், மட்டுமல்லாது பிற நாட்டு மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளேன். நான் இசை அமைத்து 100 படங்களுக்கு மேல் வெளிவந்து விட்டன.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஒரியா, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் அடங்கும். ஒரு மொழியில் இசை அமைத்திருந்தால் புகழும் பணமும் கிடைத்திருக்கும். நான் பல மொழிகளிலும் கால் பதித்ததனால் பணமும் புகழும் ஒரு சேர எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் நான் வருத்தப்படவில்லை.

இன்று வரை பக்தி மனம் கமழும் பாடல்கள் கொண்ட 2000 இசைத்தட்டுக்கள் (2000 ஆல்பம்) வெளியாகி உள்ளன. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், என்னுடைய பின்னணி இசை சேர்ப்பு தான். நான் மார்கிங்கில் மன்னன் என்று பெயர் பெற்றுள்ளேன்.

நான் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் ஷியாம்,ரவீந்திரன் மாஸ்டரில் இருந்து தொடங்கி, சலீல் சவுத்ரி, பரத்வாஜ் வரை எல்லாருமே இதை ஒப்புக் கொள்வார்கள். சுமார் 90 புது பாடகர்கள் (ஆண்,பெண் ) மற்றும் 160 கவிஞர்களை இந்த இசை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளேன்.

Music composer V. thashi died in car accident

OFFICIAL ஹரிஷ் கல்யாண் – இந்துஜா இணைந்த ‘பார்க்கிங்’ பட ரிலீஸ் தேதி

OFFICIAL ஹரிஷ் கல்யாண் – இந்துஜா இணைந்த ‘பார்க்கிங்’ பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஹரிஷ் கல்யாண் வர்த்தக வட்டாரத்தில் ஃபாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக மாறியுள்ளார்.

அவருடைய ‘பார்க்கிங்’ படம் குறித்தான அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்து இருக்கிறார்கள்.

படத்தின் ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

பார்க்கிங்

சரியான திட்டமிடல் மற்றும் சரியான செயலாக்கம் என குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.

‘பார்க்கிங்’ படத்தில் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்‌ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலி கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்புகள்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பார்க்கிங்

Harish Kalyan, Indhuja pair up ‘Parking’ gets a release date

அஞ்சாமல் முடிவெடுக்க சுவாச பயிற்சி அவசியம்..; ‘அஞ்சான்’ இயக்குநர் அட்வைஸ்

அஞ்சாமல் முடிவெடுக்க சுவாச பயிற்சி அவசியம்..; ‘அஞ்சான்’ இயக்குநர் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஹார்ட்ஃபுல்னெஸ்’ இயக்கம் சார்பில் கிராமப்புற பொது நலவாழ்வு நலத்திட்டங்களுக்காக “ஒன்றிணைவோம்வா” மூலம் டைரக்டர், சுவாச பயிற்சியாளர் என்.லிங்குசாமி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், “இளம் குழந்தைகளின் சுவாசப் பயிற்சிகளை மற்றும் மனநிறைவு தியானம் அவசியம்.
உங்கள் பிஸியான தினசரி அட்டவணையில் சில நிமிடங்கள் உண்மையை மனதளவில் உணர்ந்து, தெளிவு பெறவும், நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்கவும் இது பெரும் உதவியாக இருக்கும், இதற்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை, எங்கும் செல்ல வேண்டியதில்லை..”
என திரைப்பட இயக்குநரும், விழாவின் தலைமை விருந்தினருமான திரு.என்.லிங்குசாமி குறிப்பிட்டார்.

நம் வீடுகளில், இதை அனுபவிக்க முடியும். நீங்கள் அனுபவித்தவுடன், உங்களுக்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினருக்கும் என்றென்றும் உதவும் என்றும் கூறினார்.

‘ஒன்றிணைவோம்வா’ பற்றிய குறிப்பு👇🏽

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள், 27 இலட்சம் மக்கள்தொகை கொண்ட விவசாயிகள் பெல்ட்டை உள்ளடக்கிய சிறப்பு 45 நாட்கள் சிறப்புத் திட்டம் செப்டம்பர் 6 முதல் 2023 அக்டோபர் 20 வரை நடைபெறுகிறது.

இன்றைய உலகில், பரபரப்பான வாழ்க்கை முறை, போட்டி நிறைந்த வணிக உலகம், அதிக எதிர்பார்ப்புகள் போன்றவற்றால் சமூகம், தயவு, ஒற்றுமை, தனிநபர் நலன் மீறிய கூட்டு மனித நலன் மற்றும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை குறைந்து வருகிறது. தூக்கமின்மை, மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை பல குடும்பங்களில் அழிவை உருவாக்குகிறது.

கேட்ஜெட்டை மையமாகக் கொண்ட இளைஞர்களின் உடல் மனநலம் சார்ந்த வாழ்க்கை முறை அவர்களின் எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும். எனவே மக்களைப் பாதுகாப்பதற்கான இந்த முயற்சியானது நமது சொந்த மக்களுக்குச் செயல்படுவதற்கும் சேவை செய்வதற்கும் / பாதுகாப்பதற்கும் காலத்தின் தேவையாகும்.

மனநலம், குணநலம், உணர்வுசார்ந்த முழுமையான ஆரோக்கியத் திட்டத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள், உழைக்கும் மக்கள் ஆகியோரை உள்ளடக்கிய,
[ஹார்ட்ஃபுல்னெஸ் என்ற
75 வருடமாக இலாப நோக்கற்ற மக்கள் நல அமைப்பு] சேவை செய்ய
செங்கல்பட்டு மாவட்டத்தை
தேர்ந்தெடுத்துள்ளது.

அறிவியல் பூர்வமாக நேர சோதனை செய்யப்பட்ட நிரூபிக்கப்பட்ட நடைமுறைகள் மூலம் உடல்நலம் மற்றும் மன நலத் திட்டங்கள்
அரசு பள்ளி குழந்தைகள், தனியார் நிறுவனங்கள், சுயஉதவிக்குழு, களத்தில் உள்ள விவசாயிகள், 100 நாள் பணியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், இளைஞர்கள், கடை உரிமையாளர்கள், வியாபாரிகள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், தொகுதி வளர்ச்சி அலுவலகம், கிராம பங்குதாரர்கள் ஆகியோரை சென்றடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

சமுதாயத்தின் அனைத்து தரபட்ட மக்களை, ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் இல்லம் தேடி சென்று சேவை செய்ய இருக்கிறோம்.

தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1000 தன்னார்வத் தொண்டர்கள் தங்களுடைய நேரத்தையும், முயற்சியையும் அர்ப்பணித்து, இந்த கிராமங்களுக்குச் சென்று அவர்களுடன் தங்கி, இந்த நுட்பங்கள் மூலம் அவர்களுக்கு அனுபவத்தை அளித்து, அவர்களின் தனிப்பட்ட நலனுக்கான வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்துடன் மனதளவில் இணைய ஒரு சிறு முயற்சியாகும்.

குடும்பங்கள், சமூகம் மற்றும் வாழ்க்கையைச் சுற்றிலும் கட்டமைக்க சுற்றுச்சூழல் நல்வாழ்வு அமைய ஹார்ட்ஃபுல்னெஸ் இயக்கத்தின் இந்த தன்னலமற்ற நடைமுறையானது 160 நாடுகளில் உள்ள பல கோடி கணக்கான உயிர்களைத் தொட்டு, தூய அன்பு மற்றும் கருணை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவற்றின் ஆழமான உணர்வுடன் அவர்களை அரவணைத்து வருகிறது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர், மகளிர் அதிகாரமளித்தல் துறை – சுயஉதவி குழு அனைத்து கிராமங்களிலும் உள்ள இதயம் நிறைந்த தன்னார்வலர்களுக்கு ஒப்புதல் அளித்து கடிதம் வழங்கியுள்ளது, மேலும் இது *”சமூகம் மற்றும் மனிதநேயம் முதன்மை”* என்ற ஒரே நோக்கத்துடன் ZERO செலவில் / இலவச அடிப்படையில் வழங்கப்படுகிறது.

எனவே, உடல், மனம், இதயத்தை வாழ்க்கையின் மையமாக வைத்து இந்த நிகழ்ச்சிக்கு “ஒன்றினைவோம்வா” என்று பெயரிடப்பட்டது.

சமுன்னதி அக்ரி ஃபண்டிங் அமைப்பின் எம்.டி மற்றும் சி.இ.ஓ மற்றும் விவசாய நிதி இடைநிலை மற்றும் வேளாண் ஆலோசனை அமைப்பின் முன்னோடி, டிரெண்ட்செட்டரனா திரு.அனில் குமார் கூறுகையில், இந்தியா முழுவதும் உள்ள எஃப்.பி.ஓ.க்கள்(FPOs) மற்றும் பல விவசாய பங்குதாரர்களுக்கு இந்த ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சி எவ்வாறு உதவுகிறது என்று மேலும் கூறினார். தன் நம்பிக்கை, சிறந்த வாழ்க்கைக்கான இலட்சியம் போன்றவை மனம் அமைதியாக இருந்தால் மட்டுமே சாத்தியபடும், வேலை பயனுள்ளதாக அமைய, உறவுகள் சீராக இருக்க, இந்த பயிற்சி மிக மிக அவசியமான ஒன்றாகும். அது விவசாயிகள், மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் முழுமையான நலனுக்கு உதவுகிறது. அது தனக்கும் நாட்டில் விவசாய சூழல் அமைப்புக்கும் எப்படி உதவியது என தனது அனுபவத்தை விவரித்தார்.

இந்த நிகழ்ச்சி் அறிமுக தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினரகளோடு, அரசாங்க அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொது மக்கள், மாணவர்கள் என பெரும் திறளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர்கள் மற்றும் அழைப்பாளர்களுடன் ஒரு தனித்துவமான அனுபவத்துடன் வெளியீட்டு நிகழ்வு இனிதே நடைபெற்றது,

செங்கல்பட்டு மாவட்டத்தில், இந்த நடைமுறையை பொதுமக்கள் அனுபவிக்க இது ஒரு வாய்ப்பாகும், மேலும் அவர்கள் அனைவருக்கும் அனுபவத்தை வழங்குவதற்காக கிராம அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் மூலம் தன்னார்வலர்களை இல்லம் தேடி செல்லவுள்ளனர்.

ஹார்ட்புல்னெஸ் பயிற்சியை பொதுமக்கள் அனுபவிக்க இது ஒரு பெரும் வாய்ப்பாகும், மேலும் அவர்கள் அனைவருக்கும் அனுபவத்தை வழங்குவதற்காக கிராம அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் மூலம் தன்னார்வலர்களை சந்திக்கலாம்.

உதவிக்கு, தொடர்பு கொள்ளவும்

:+916366527001|[email protected]

Director Lingusamy advice to all

மக்களுடன் பவன் கல்யாண்.; ‘உஸ்தாத் பகத்சிங்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீசானது

மக்களுடன் பவன் கல்யாண்.; ‘உஸ்தாத் பகத்சிங்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீசானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் – ஹரிஷ் சங்கர் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் புதிய போஸ்டரை பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.‌

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘உஸ்தாத் பகத்சிங்: படத்தின் பிரத்யேக போஸ்டரை அப்படத்தின் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் பவன் கல்யாண் காக்கி வண்ண சட்டையும், கல்லா லுங்கியும் அணிந்து, மாஸான தோற்றத்தில் தோன்றுவது ..ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

வெகுஜன மக்களின் ரசனையை அறிந்த இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் இதுவரை ஏற்றிராத மாஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக போஸ்டரில் பவன் கல்யாண் ரத்தம் தோய்ந்த வாளைப் பிடித்துக் கொண்டிருப்பதும்… அவருக்கு பின்னால் தொகுதி மக்கள் நிற்பதும்.. ரசிகர்களுக்கு பவன் கல்யாண் பிறந்த நாளில் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது.

‘உஸ்தாத் பகத்சிங்’ திரைப்படத்தை மைதிலி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.

ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் படக்குழுவினர் தொடங்குகிறார்கள்.

இப்படத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், ஸ்ரீ லீலா, அஸ்தோஷ் ராணா, நவாப் ஷா, ‘கே ஜி எஃப்’ புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ், டெம்பர் வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே. பிரசாத் கவனிக்க, சண்டை பயிற்சிகளை ராம் -லக்ஷ்மன் அமைக்கிறார்கள்.

பவன் கல்யாண்

Pawan Kalyans Ustaad Bhagat Singh Special Poster

More Articles
Follows