‘மூக்குத்தி அம்மன்’ பார்ட் 2… ஆர்ஜே பாலாஜி அடுத்த அதிரடி

‘மூக்குத்தி அம்மன்’ பார்ட் 2… ஆர்ஜே பாலாஜி அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rj balaji nayantharaவேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்’.

இதில் அம்மனாக நடித்து நல்ல நடிப்பை கொடுத்திருந்தார் நயன்தாரா.

தீபாவளி திருநாளில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இதனையடுத்து ஆர்.ஜே.பாலாஜி சமூகவலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது…

இந்த படத்தில் ஒரு சில ரகசியங்கள் இருக்கிறது. ஒருவேளை மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தை உருவாக்கும் போது அதை வெளிப்படுத்துவோம்.

இன்றைய காலத்தில், ஓடாத படத்தின் இரண்டாம் பாகத்தை கூட எடுக்கிறார்கள்.

ஆனால் ‘மூக்குத்தி அம்மன்’ அதிர்ஷ்டவசமாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எனவே நிச்சயமாக மூக்குத்தி அம்மனின் 2 ஆம் பாகம் உருவாகும்.”

என தெரிவித்துள்ளார் RJ பாலாஜி.

Director RJ Balaji confirms that Mookuthi Amman 2 is on cards

‘ஈஸ்வரன்’ படத்தலைப்பிலே வரன் இருக்கு.. எனவே 2021ல் சிம்புக்கு வரன் கிடைச்சிடும்..; இப்படி யார் சொல்லிருப்பா..?

‘ஈஸ்வரன்’ படத்தலைப்பிலே வரன் இருக்கு.. எனவே 2021ல் சிம்புக்கு வரன் கிடைச்சிடும்..; இப்படி யார் சொல்லிருப்பா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

eeswaran simbuநாளை மறுநாள் நவம்பர் 22ஆம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் ஒரு அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் டி ராஜேந்தர்.

இது தொடர்பான சந்திப்பில் அவர் பேசும்போது… தன் வழக்கமான எதுகை மோனையிலும் பன்ச் டயலாக்குகளையும் பேசினார்.

அப்போது சிம்பு திருமணம் பற்றிய கேள்விக்கு…

“நானும் பல வரன்களை பார்க்கிறேன்.. ஆனால் இதுவரை என் மகனுக்கு இறைவன் வரன் கொடுக்கவில்லை.

இந்த ஆண்டு ஈஸ்வரன் படத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார்.

அடுத்தாண்டு படம் ரிலீசாகிறது.

படத்தின் தலைப்பிலேயே வரன் இருக்கு.

அதன்படி 2021-ஆம் ஆண்டு ஒரு கலைமகள் எங்கள் வீட்டிற்கு வரனாக வருவாள்” என டி. ராஜேந்தர் பேசினார்.

TR talks about his son simbu marriage

சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் ‘எஸ்பிபி ஸ்டூடியோ’

சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் & டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் ‘எஸ்பிபி ஸ்டூடியோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று சௌத் இண்டியன் சினி டிவி ஆர்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனில் , டப்பிங் யூனியனின் உறுப்பினராக இருந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் .எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நினைவாக “எஸ்பிபி ஸ்டூடியோ” என்று பெயரில் ஒரு டப்பிங் ஸ்டூடியோவினை, டப்பிங் யூனியன் தலைவர் டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் டப்பிங் ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தியபோது , அவரது நினைவாக டப்பிங் ஸ்டூடியோ நிறுவப்படும் என்று டப்பிங் யூனியன் தலைவர் டத்தோ ராதாரவி தெரிவித்தார்

அதன்படி இன்று அந்த SPB ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய மற்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஸ்டூடியோவினை தலைவர் திறந்து வைத்திருப்பது தங்களுக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக தெரிவித்தனர்.

Here comes a dubbing studio dedicated to late singer SPB

dubbing studio spb

அரண்மனை 3 படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி

அரண்மனை 3 படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aranmanai 3சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மனை’ சீரீஸ் படங்கள், முதல் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றன.அதன் தொடர்ச்சியாக இப்போது ‘அரண்மனை3’ உருவாகி வருகிறது.

இப்படத்திற்காக சென்னை EVP
ஃபிலிம் சிட்டியில் 2 கோடி செலவில்
கலை இயக்குநர் குருராஜ்-ன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு அதில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது.

முதன்முதலில் சுந்தர்C யுடன் ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ள இப்படத்தின் உச்சக்கட்ட சண்டைக் காட்சி பிரமாண்டமாக பதினொரு நாட்கள் படமாக்கப்பட்டது.

இதுவரை சுந்தர்சியின் படங்களில் “ஆக்ஷன்” action படத்தில் அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதன் பிறகு இந்தப் படத்தில் தான் மிக பிரமாண்டமாக ஸ்டண்ட் அமைத்துள்ளார்கள். இந்த பேய்ப்படத்துக்கு 2 கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை செட் அமைக்கப்பட்டு அதில் 11 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுப் படமாகியுள்ளது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இக்காட்சியில், ஆர்யா, ராக்ஷி கன்னா, சுந்தர்C, சம்பத், மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்தனர் . தொடர்ந்து படபிடிப்பு நடைபெற்று வருகிறது.
குஜராத் ராஜ்கோட், சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற இடங்களில் படபிடிப்பு நடை பெற்று வருகிறது. 2021ல் சம்மர் ஸ்பெஷலாக இந்தப் படம் வெளியாக உள்ளது.

ஆர்யா
ராஷிகன்னா
சுந்தர்C
ஆண்டிரியா
விவேக்
யோகி பாபு
சாக்‌ஷி அகர்வால்
சம்பத்
மனோபாலா
வின்சன்ட் ஆசோகன்
மதுசூதன் ராவ்
வேல ராமமூர்த்தி
நளினி
விச்சு விஸ்வநாத்
கோலபள்ளி லீலா
மற்றும் பலர்..

Chief Technicians:
டைரக்டர்: சுந்தர்C
DOP: UK செந்தில்குமார்
Music: C.சத்யா
Editor: S.Fenny Oliver S.ஃபென்னி ஆலிவர்
Art Director: பொன்ராஜ்
Fight : பீட்டர் ஹெயின்
PRO: ஜான்சன்
தயாரிப்பு மேற்பார்வை: B.பாலகோபி
Production: அவ்னி சினிமாஸ்

The climax fight scene in the movie ‘Aranmanai 3’ which took place in a huge set at a cost of 2 crores

சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது..

சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yen Peyar Anandhanகனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தை இயக்கியவர். இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அடுத்த சாட்டை, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் கதை ஆரம்பத்தில் த்ரில்லராக பயணித்தாலும், போகப்போக உணர்வுப்பூர்வமான பயணத்துக்குள் ரசிகர்களை அழைத்து சென்றுவிடும். காரணம் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொணடு இந்தப்படம் உருவாகியுள்ளது… குறிப்பாக இதுவரை யாருமே பேசியிராத ஒரு சமூக பிரச்சனையை கையிலெடுத்து துணிச்சலாக இந்தப்படம் பேசியுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம், இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கிறார்களா, இவர்களுக்கு இப்படியெல்லாம் கூட பிரச்சனைகள் இருக்கிறதா என இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். .

செம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு மூன்றுமுறை சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தப்படம் பெற்றுள்ளது. மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது.

“திரைப்பட விழாக்களில் இந்தப்படத்தை பார்த்த பலரும் இதுவரை பார்த்திராத, ஒரு வித்தியாசமான அதேசமயம் ஜனரஞ்சகமாக ரசிக்க கூடிய விஷயங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்கள். குறிப்பாக படத்தின் டேக்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இது தனித்துவமான தமிழ்ப்படமாகவே உருவாகி இருக்கிறது என பாராட்டினார்கள்” என்கிறார் ஸ்ரீதர் வெங்கடேசன்.

மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்ஸுக்கு சற்று முன்பாக 11 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது. இது வழக்கமான ஒரு பாடலாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான பாடலாக இருக்கும்.

“இந்தப்படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப்பின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் மறக்க முடியாது ஒன்று.. ஒரு நாற்காலியிலேயே அமர்ந்தபடி, தனது நடிப்பை முகத்தின் உணர்ச்சிகளிலேயே விதம் விதமாக பிரதிபலித்து நடித்துள்ளார். நிச்சயம் இந்தப்படம் தமிழ்சினிமாவில் அவருக்கு அடுத்த படியாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.

தற்போது திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்தப்படம் வரும் நவ-27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.. ஓடிடி தளங்கள் இந்தப்படத்தை வெளியிட தங்களை அணுகியபோதும் மறுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.

“இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே நாங்கள் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தோம்.. முதலில் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு, அதன்பிறகே திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது, இரண்டாவதாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்த பின்னரே, ஒடிடிக்கு படத்தை தருவது என நாங்கள் முடிவு செய்தபடியே இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறோம்..” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விபரம்

நடிகர்கள்: சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி, தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் மற்றும் பலர் .

பாடல்கள்: புருஷோத்தமன், வீரையன்

படத்தொகுப்பு: விஜய் ஆண்ட்ரூஸ்

ஒளிப்பதிவு : மனோ ராஜா

இசை : ஜோஸ் பிராங்க்ளின்

டைரக்சன் : ஸ்ரீதர் வெங்கடேசன்

தயாரிப்பு : கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசன் மற்றும் கோபி கிருஷ்ணப்பா

———————-

Yen Peyar Anandhan – Official Trailer

Award winning film Yen Peyar Anandhan to release on nov 27

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’..; கை கொடுத்த கேடி குஞ்சுமோன் & விஜய்சேதுபதி

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’..; கை கொடுத்த கேடி குஞ்சுமோன் & விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathiகொரொனா வைரஸ் பரவல் தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில் திரையரங்குளில் ரிலீஸாக தயாராகிவிட்டது ” இது என் காதல் புத்தகம் ”

முன்னதாக இந்த படத்தின் இசையை நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

அதை தொடர்ந்து படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகிற்கு பிரமாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் வெளியிட்டார்.

இப்படி பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள ” இது என் காதல் புத்தகம் ” படத்தை மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மது ஜி கமலம் இயக்கியுள்ளார்.

பிஜு தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜினு பரமேஷ்வர், ஜோமி ஜேக்கப் ஆகிய நால்வரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகியாக அஞ்சிதா ஸ்ரீ நடித்துள்ளார.

இவர்களுடன் குள்ளப்புள்ளி லீலா, ராஜேஷ் ராஜ், சூரஜ் சன்னி, ஜெய் ஜேக்கப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ரோஸ்லேண்ட் சினிமாஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

எம்.எஸ்.ஸ்ரீ மாதவ் இசையில் வைக்கம் விஜயலட்சுமியோடு, பிரவீன் கிருஷ்ணா இணைந்து பாடிய ” என்னாத்தா ” என்ற பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி கலக்கிக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற சில உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.

பெண் கல்வியின் அவசியத்தையும், வாலிபப் பருவங்களில் ஏற்படும் மனக்குழப்பத்தை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை நகைச்சுவை கலந்து உருவாகியுள்ளது.

இந்த படத்தை தமிழகத்திலும், கேரளத்திலும் இயற்கை எழில் தளும்புகின்ற லொகேஷன்களில் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணா, சஜித் கட்சிதமாக காட்சிகளை எடிட் செய்துள்ளார்.

கொரொனா விட்டுச் சென்ற ரணங்களை ஆற்ற வருகிற நவம்பர் 27 ஆம் தேதி தமிழகமெங்கு வெளியாகிறது ” இது என் காதல் புத்தகம் ”

Makkal Selvan Vijay Sethupathi released Idhu En Kaathal Puthagam songs

More Articles
Follows