தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் RJ பாலாஜி.
பின்னர் LKG படம் மூலம் கதையின் நாயகனாகவும் நடித்தார்.
இதனையடுத்து நயன்தாராவுடன் இணைந்தார் RJ பாலாஜி.
‘மூக்குத்தி அம்மன்’ என்ற இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றிகளை தொடர்ந்து RJ பாலாஜியின் அடுத்த படைப்பாக தயாராகியுள்ளது ‘வீட்ல விசேஷங்க’..
இந்த நிலையில் இன்று மார்ச் 4ல் ‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள ‘வீட்ல விசேஷங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 18-ம் தேதியில் வெளியாகும் என அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு காலையில் வெளியானதை தொடர்ந்து RJ பாலாஜி அடுத்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது.
இதில் RJ பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படமான இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
யுவா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மதன் கணேஷ் படத்தொகுப்பு செய்யவுள்ளார்.
இன்று (மார்ச் 4 ஆம் தேதி) திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
RJ Balaji and Aishwarya Rajesh joins for a new film