நயன்தாரா துணையுடன் ஜோ பைடன் & கமலா ஹாரிஸ் வெற்றி..; அமெரிக்க அதிபருக்கு ஆர்ஜே. பாலாஜி வாழ்த்து

நயன்தாரா துணையுடன் ஜோ பைடன் & கமலா ஹாரிஸ் வெற்றி..; அமெரிக்க அதிபருக்கு ஆர்ஜே. பாலாஜி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mookuthi amman nayanthara imagesநவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகளில் முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது.

கடந்த 3 தினங்களாக தாமதமாகிக் கொண்டிருந்த மாகாணங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியானது.

இறுதியாக அதிபராக வென்றார் ஜோ பைடன். இவர் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய-தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் பட இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜியும் தன் பங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் வாழ்த்தில்… முமூக்குத்தி அம்மன் துணையும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.

Mookuthi Amman team celebrates the victory of Joe Biden and Kamala Harris via a special poster

SAC நடத்தும் குடும்ப அரசியல் நாடகம்..; கோழை விஜய்க்கு ஏன் அரசியல் ஆசை..? சீண்டும் மீரா

SAC நடத்தும் குடும்ப அரசியல் நாடகம்..; கோழை விஜய்க்கு ஏன் அரசியல் ஆசை..? சீண்டும் மீரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithun vijayநடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என அண்மைக்காலமாகவே பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார் அவரின் தந்தை எஸ்ஏசி.

கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் தொடா்பும் இல்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யின் அம்மா ஷோபாவும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது தொடர்பான அனைத்து செய்திகளையும் நம் தளத்தில் உடனுக்குடன் பார்த்தோம்.

இந்நிலையில் இவர்களின் அரசியல் கட்சியை குடும்ப நாடகம் என விமர்சித்துள்ளார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன்.

அவரின் இன்றைய ட்விட்டர் பதிவில்…

எஸ்ஏசி குடும்ப அரசியல் நாடகம் போடுகிறார். உங்களுக்கு தைரியம் இல்லை என்றால் ஏன் அரசியல் ஆசை? என சீண்டும் வகையில் கேட்டுள்ளார்.

Tats a very good nicely portrayed family political drama by director SAC, If you don’t have guts to even say you have started a party @actorvijay why arasiyal aasai ?! Politics is not for cowards
https://t.co/582Kss6nVd

Meera Mithun alleges against actor Vijay

திருமணமானவருடன் உறவு வைத்த நயன்தாரா அம்மனாக நடிக்கலாமா.? தமிழ் தலைவர்கள் வாய் திறப்பார்களா.? – மீரா மிதுன்

திருமணமானவருடன் உறவு வைத்த நயன்தாரா அம்மனாக நடிக்கலாமா.? தமிழ் தலைவர்கள் வாய் திறப்பார்களா.? – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meera mithun nayantharaஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தை ஏற்று நடித்துள்ளார்.

இந்நிலையில் அம்மன் என்றால் யார் என்று இவருக்குத் தெரியுமா? என்று நயன்தாராவை நடிகை மீரா மிதுன் விமர்சித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

திருமணமான ஆணுடன் உறவு வைத்திருந்தவர் எல்லாம் ஹிந்து கடவுளான அம்மன் வேடம் ஏற்று நடிக்கிறார். அம்மன் என்றால் யார் என்று இவருக்குத் தெரியுமா?

இந்த மாதிரி ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வகையிலான அசிங்கமான கதாபாத்திரத் தேர்வு எல்லாம் தமிழகத்தில் கோலிவுட் சினிமா ஆட்களால்தான் நடக்கும். இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் (தமிழ் தலைவர்கள்) வாய் திறக்க மாட்டார்களா?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

A woman in relationship with a married man is doing the role of our hindugod “Amman”,does she even know who “Amman” is ?!All this nonsense shameless casting insulting our hindu god happens only in tamilnadu by these worthless #kollywood people.Won’t tamil leaders open mouth now

Meera mithun slams Nayanthara for playing Mookuthi Amman

சிம்பு சூட்டிங்கில் பாம்பு துன்புறுத்தல்..? வனத்துறை விசாரணை.. சுசீந்திரன் விளக்கம்

சிம்பு சூட்டிங்கில் பாம்பு துன்புறுத்தல்..? வனத்துறை விசாரணை.. சுசீந்திரன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு & சுசீந்திரன் கூட்டணியில் விறுவிறுப்பாக தயாராகியுள்ள படம் ‘ஈஸ்வரன்’.

சூட்டிங் தொடங்கிய 40 நாட்களிலேயே ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர்.

இப்படத்தில் சிம்புவுடன் பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்பட படப்பிடிப்பு காட்சிகள் சமூகவலைதளங்களில் லீக்கானது.

அதில், உயிருடன் உள்ள பாம்பை மரத்தில் இருந்து பிடித்து சாக்குப்பையில் சிலம்பரசன் போடுவது போல காட்சி இருந்தது.

இவ்வாறாக வனவிலங்குகளை துன்புறுத்துவது குற்றம் என்பதாலும் சிம்பு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை மீறியிருப்பதாலும் அவர் மீது வழக்கு பதிவு செய்ய விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து படக்குழுவை அழைத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் ‘ஈஸவரன்’ பட இயக்குநர் சுசீந்திரன்.

“உண்மையில் அந்தக் காட்சி போலியான பிளாஸ்டிக் பாம்பு ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராஃபிக்ஸ் செய்யப்படவுள்ளது.

இந்தக் காட்சி கணினி கிராஃபிக்ஸ் செய்யும் போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது.

எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப்பற்றி விசாரித்து வருகின்றோம்.

சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார்.

நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுபடுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளோம்.” இவ்வாறு நடிகர் சுசீந்திரன் விளக்கமளித்துள்ளார்.

Eeswaran Director Suseenthiran explained over snake cruelty

eeswaran movie shooting

Kamal Birthday Special : ஓப்பனிங்குக்கே அல்லாடிய கமல் ஆஸ்கர் கதவுகளை தட்டியது எப்படி.?

Kamal Birthday Special : ஓப்பனிங்குக்கே அல்லாடிய கமல் ஆஸ்கர் கதவுகளை தட்டியது எப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal 232பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து பெற்றோர் சொற்படி 2 சகோதரரர்கள் வழக்கறிஞராக ஆனார்கள் என்றால், கமல் சென்ற பாதையோ நடனம், நடிப்பு கதை என முற்றிலும் நேர்மாறானது.

பள்ளிப்படிப்பைக்கூட முழுதாக முடிக்கமுடியாத அந்த கமல்தான், அண்மையில் சென்னை அமெரிக்க துணை தூதரகத்திற்கு பேட்டி அளித்தபோது வித்தியாசமான பரிணாமத்தை காட்டினார்.

பேட்டி எடுத்தவர், அந்தக்காலத்து ஹாலிவுட் ஜாம்பவான்களான மார்லன் பிராண்டோ மற்றும் ஜான் வெயின் ஆகியோரின் புகழ்பெற்ற வசனங்களை பேசச்சொன்னபோது, அதே மாடூலேஷனில் அப்படியே பேசிக்காட்டி அசத்தினார்.

அந்த அளவிற்கு அவருக்குள் திரை ஆர்வம் ரத்தத்தோடு ஊறிவிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. இவ்வளவிற்கும் காரணம், கமல் பயிற்சி எடுத்துக்கொண்ட பட்டறைகள் அப்படி.

5 வயதில் நடிக்க ஆரம்பித்து 1960ல் கமலின் முதல்படம் களத்தூர் கண்ணம்மா வெளியானது. காலத்தால் அழிக்கமுடியாத காவியங்களை சிவாஜிக்காக இயக்கிய ஏ.பீம்சிங்தான் கமலை முதலை இயக்கியவர். உதவி இயக்குநராக இருந்த எஸ்பி முத்துராமன்தான் பின்னாளில் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி என கமலின் வசூல் மழை படங்களை இயக்கி ரஜினிக்கு பாக்ஸ் ஆபிஸ் போட்டியாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.

ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர் என அவரின் குழந்தை நட்சத்திர படப்பட்டியல் டாப் ஸ்டார்களுடன் ஏறுமுகமாவே அமைந்தது ஒரு மாஜிக் என்றே சொல்லலாம்.

பார்த்தால் பசி தீரும் படத்தில் இரட்டை வேடத்தில் சிறுவனாக அசத்திய கமலை, அப்போதே மலையாளம் அள்ளிக்கொள்ள தவறவில்லை.

1962ல் கண்ணும் கரளும் படத்தில் கமலை இயக்கும்போதே கே.எஸ்.சேதுமாதவனுக்கு சிறுவனின் திறமை தெரிந்திருக்கும்போல.. அதனால்தான் பின்னாளில் தமிழில்வெற்றிகரமான கதாநாயகன் சீட் கிடைக்காமல் தத்தளித்துக்கொண்டிருந்த கமலை 1974ல் கன்யாகுமாரி படத்தின் கதாநாயகனாக்கி மலையாள படவுலகில் நடிப்பின் பரிமாணங்களை அடுத்தடுத்து பெற்றுக்கொள்ள வழிவகுத்துத்தந்தார்.

சிறுவயதில் நட்சத்திரங்களாய் மின்னுபவர்கள் வயது ஏறஏற ரெண்டுங்கெட்டான் நிலையை சந்தித்து தடைபடுவார்கள்.

9 வயது கமலுக்கும் அப்படியொரு கட்டம் வந்தது.

இளைஞனான பிறகு ஓப்பனிங்கே கிடைக்காமல் அல்லாடிய கமலுக்கு, முதன் முதலில் தலைகாட்ட உதவியது தேவரின் மாணவன்(1970) படம். விசிலடிச்சான் குஞ்சுகளா என குட்டி பத்மினியுடன் பாடலுக்கு ஆடினார்.

எம்ஜிஆர்- சிவாஜி சகாப்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய வேளையில் பாலச்சந்தர் தந்த அருமையான வாய்ப்புகளை உள்வாங்கிகொண்ட கமலால், பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் சப்பாணியாக வெறும் கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டுவந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு பார்க்கவைக்கமுடிந்தது.

ஆர்.சி. சக்தியும், அனந்துவும் திரைக்கதை அமைப்பதில் சொல்லிக்கொடுத்த பாடங்களை கமல் அலட்சியப்படுத்தாமல் கற்றுக்கொண்டார்.

குரு (1980) படத்தில் திரைக்கதை வசன வித்தையை தனது 100 வது படத்தை சொந்தமாய் எடுத்த ராஜபார்வையில் காட்டினார்.

1981ல் அந்தப் படம் தோல்வி என்பதால் அந்த பரீட்சை அப்போதைக்கு தற்காலிக தடைவாங்கிக்கொண்டது.
ஆனால், அடுத்த ஆண்டே, எதைப்பற்றியுமே கவலைப்படாமல் நடித்த பக்கா மசாலாவான சகலகலா வல்லவன், சென்னையில் திரையிட்ட நான்கு பெரிய தியேட்டர்களிலும் 175 நாட்கள் ஒடி வெள்ளிவிழா கொண்டாடியபோது கமலஹாசனுக்கு ரசிகர்களின் போக்கே புரியாமல் மிஞ்சியது குழப்பம்தான்.

இருந்தபோதிலும் வசூலுக்காக ரஜினிக்கு ஈடுகொடுக்க, தொடர்ந்து கமர்சியல் மசாலா நாயகனாக ஆடிக்கொண்டிருந்த கமலுக்கு முக்கிய பிரேக் இன்னொரு சொந்தப்படமான விக்ரம் என்று சொல்லலாம்.

எழுத்தாளர் சுஜாதாவுடன் அவர் திரைக்கதை அமைக்க கற்றுக்கொண்ட விதம் பழைய குருமார்களின் பங்களிப்போடு கலந்து, புதிய ரூட்டில் உருவானது.

1987ல் நாயகன் படம் இந்திய அளவில் பேசப்பட்டபிறகு, ஒவ்வொரு திரையுலக அடியை பார்த்துப்பார்த்தே வைத்தார் கமல். அதனால்தான் அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், மகாநதி, குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் என திரைக்கதை உட்பட பல அம்சங்களுக்காக பேசப்படும் படங்கள் பட்டியல் அடுத்தடுத்து மைல்கற்களை ஏற்படுத்திக்கொண்டேபோகின்றன.

இன்னொருபுறம், இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்த படங்களில் கமல் படம்தான் அதிகமுறை என்கிற சாதனையும் உண்டு.

இந்தியில் சாகர்(1985) தெலுங்கில் சுவாதி முத்யம் (1986) நாயகன் (1987) தேவர்மகன் (1992) குருதிப்புனல்(1995) இந்தியன்(1996) ஹேராம் (2000) என ஏழு முறை அவரின் படங்கள் ஆஸ்கரின் கதவுகளை தட்டியிருக்கின்றன.

கமலின் பயணத்தை சற்றே பின்னோக்கி பார்த்தால் கொஞ்சம் மிரட்சியாகவே இருக்கும்.. 1973 ஆம் ஆண்டு அரங்கேற்றம் படத்தில் கமல் கதாநாயகன் அந்தஸ்ந்தில் உதயமானபோது, ஜெயலலிதா, வாணிஸ்ரீ, மஞ்சுளா, லதா, போன்றோர் கொடிகட்டிப்பறந்தனர்.

அதற்கப்புறம், சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி என ஒரு தலைமுறை கடந்து, ராதா, அம்பிகா, ரேவதி தலைமுறை. பின்னர் குஷ்பு,கௌதமி,மீனா, ரம்பா, சிம்ரன், போன்றவர்களின் காலகட்டங்களிலும் கமல் முன்னணி நாயகன். இந்த நடிகைகள் நிலை இன்றைக்கு எப்படி என்று நினைக்கும்போது, நேற்றுவந்த பூஜாகுமாருடன் கமல் ஜோடிபோட்டு அசத்திக்கொண்டிருக்கிறார்.

சுதாகர், பாக்யராஜ், விஜயகாந்த், டி.ராஜேந்தர், மோகன், பிரபு, சத்யராஜ், கார்த்திக், ராமராஜன், என அவ்வப்போது பிளாக் பஸ்டர்களை கொடுத்து ரசிகர்களை ஆட்டிப்படைத்துவந்த திடீர் சூப்பர் பவர் ஹீரோக்களையும் கமலின் திரைப்பயணம் அட்டகாசமாகவே கடந்தது.
விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்றோருடனும் பயணிக்கிறது..

ஜாம்பவான்கள் என எடுத்துக்கொண்டால் ஒவ்வொருவருடனும் கமலின் பயணம் அலாதியானது..

அறுபதுகளின் துவக்கத்தில் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக ஹீரோ ஜெமினிகணேசன் தோளில் அமர்ந்து அறிமுகமான கமலஹாசன், எழுபதுகளில் நான் அவனில்லை எண்பதுகளில் உன்னால் முடியும் தம்பி 90களில் அவ்வை சண்முகி என அசத்தினார்..

1962-ல் சிவாஜி நடித்த பார்த்தால் பசி தீரும் படத்தில் சிறுவனாய் அசத்திய கமல், அதன் பின்னர் அதே சிவாஜியுடன் 30 ஆண்டுகள் கடந்து 1992 இல் வெளியான தேவர் மகன் வரை நடித்த படங்களில் நினைத்துப்பாருங்கள்.

1977 நான் பிறந்த மண் என்ற படத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியான சிவாஜிக்கு முரட்டு மகனாய் வருவார். லஞ்சம் ஊழல் மூலம் முன்னேற வேண்டும் என்று கமல் துடிப்பார் கடைசியில் கமலை தந்தை சிவாஜியே சுட்டுக் கொள்வார்.

இந்தப் படத்தைத்தான் பின்னாளில் ஷங்கர், இந்தியன் என்ற பெயரில் கமலைத் தந்தை மகனாக நடிக்க வைத்து அப்பட்டமாக ரீமேக் செய்தார்..

இதேபோல மக்கள் திலகம் எம்ஜிஆர் க்கும் கமலுக்கும் இடையிலான உறவும் சுவாரஸ்யங்கள் நிறைந்தவை.

1903 இல் வெளியான ஆனந்த ஜோதி படத்தில் எம்ஜிஆரின் காதலி தேவிகாவின் தம்பியாக கமல் வருவார்.படம் முழுக்க சிறுவன் கமலை வாரி அணைத்து கொஞ்சுவார் எம்ஜிஆர். நீ எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆளாக வருவாய் என்று அந்தப் படத்திலேயே கமலை வாழ்த்தி எம்ஜிஆர் பேசுவதுபோல் வசனம் வரும்.

அதே கதாநாயகன் எம்ஜிஆருடன் கமல் பின்னாளில் இணைந்தது, நடிகராக அல்ல உதவி நடன இயக்குனராக.. 1972ல் வெளியான நான் என் பிறந்தேன், சங்கே முழங்கு ஆகிய இரண்டு படங்களிலும் எம்ஜிஆருக்கு கமல் உதவி நடன இயக்குனர்..

மூன்றாம்பிறை பட விழாவில் முதலமைச்சராய் எம்ஜிஆர் பேசும்போது, அந்த காலத்தில் ஈவிரக்கம் பார்க்காமல் என் இடுப்பை ஒடித்தவன் கமல் என்று சொன்னார். நான் ஏன் பிறந்தேன் படத்தில் காஞ்சனாவுடன் என்னம்மா சின்ன பொண்ணு பாடலுக்காக கமல் அமைத்துக் கொடுத்த கடுமையான ஸ்டெப்ஸ்களை நினைவுபடுத்தியே எம்ஜிஆர் அப்படி சொன்னார்.

எம்ஜிஆரின் மட்டுமல்ல சிவாஜி ஜெயலலிதாவையும் உதவி நடன இயக்குனராக கமல் ஆடவிட்டிருக்கிறார்..

ஜெயலலிதாவுடனான திரைப்படம் கமலின் திரைப்பட பயணத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும். இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கின்றனர் என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரியாது.

அது 1974 அன்புத்தங்கை படத்தில் ஒரு ஓரங்க நாடகம். ஆணவத்தின் உச்சத்தில் தாண்டவமாடும் அழகுப்பதுமை பாத்திரம் ஜெயலலிதாவுக்கு. புத்த பிக்குவாக வரும் கமலஹாசனை மயக்கி ஆட்கொள்ள ஜெயலலிதா முயற்சிப்பார். இந்த அழகும் இளமையும் நிலையானது அல்ல என்று புத்திமதி சொல்லி ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டுவார் கமல்.

சவாலே சமாளி படத்தில் ஆரம்பித்த பயணம் 1977ல் ஜெயலலிதாவின் நன்றிகெட்ட தம்பியாக உன்னை சுற்றும் உலகம் படம் வரை தொடர்ந்தது. படத்தில் இருவரும் மோதிக் கொள்ளும் சீன்கள் சூப்பராக இருக்கும்.

குருநாதன் கே பாலச்சந்தருக்கும் கமலுக்கும் இடையிலான பணத்தைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. அது கரடுமுரடுகள் நிறைந்த நீண்ட நெடிய பயணம்.

அரங்கேற்றம்(1973) படத்தை இந்தியில் ராஜேஷ்கன்னா, மும்தாஜ் ஆகியோரை வைத்து ஆய்னா(1976) என இயக்கி னார் கே.பாலசந்தர். அவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கமல், இந்தியில் நல்ல ரோல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

படத்தில் கௌரவ தோற்றமாக வரும் தர்மேந்திரா-நீட்டுசிங் ஜோடியின் டூயட்டை எடுக்கும் அசிஸ்டெண்ட் டைரக்டராக சில விநாடிகள் மட்டும் கமல் வந்து போவார்.

ஆனால் இதே கமலை வைத்து இதே பாலசந்தர் இந்தியில் படம் எடுக்கவேண்டிய ஒரு கட்டாயம் உருவானது. அதுதான் ஏக் துஜேகேலியா (1981). படத்தின் மாபெரும் வெற்றி. பாடல்களின் இனிமை, உலகம் அறிந்த விஷயம்.

ஏக் துஜேகேலியேவின் ஒரிஜினலான கமல்-சரிதா நடித்த மரோசரித்ரா, தெலுங்கு வெர்ஷனிலேயே சென்னை சபையர் தியேட்டரில் 596 நாட்கள் ஓடியது என்றால், ஆந்திராவில் அதன் வெற்றியை கேட்கவேண்டுமா?

இந்தியில் கமலுக்கு மெகா ஓப்பனிங் கிடைத்ததும், அபூர்வராகங்கள், வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய கமலையே பயன்படுத்தினார் கே.பி.

ஒரு புள்ளிவிவரத்திற்கு எடுத்துக்கொண்டால்கூட 1959ல் கமல் சிறுவனாக நடிக்க ஆரம்பித்தபோது தமிழின் முதல் சூப்பஸ்டாரான எம்கே தியாகராஜபாகவதரும் சினிமா களத்தில் இருந்தார் என சொல்லலாம்..

தசாவதாரம் படத்தில் பல்ராம் நாயுடு செல்போனின் ரிங்டோன் ஆக. என்தோ சின்னி த ஜீவிதம் என ஒரு தெலுங்கு பாடல் ஒலிக்கும். 1970களின் துவக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகேஸ்வரராவுக்கு இந்த பாடலுக்காக கமல் உதவி நடன இயக்குனராக நடனம் அமைத்து கொடுத்தபோது அஜித் விஜய் போன்ற போன்றோரெல்லாம் பிறந்தே இருக்க மாட்டார்கள்..

அதே கமல்தான் இப்போது சிவகார்த்திகேயனோடு விஜய்சேதுபதி முட்டிக்கொண்டிருக்கும் வேளையிலும் தனது அடுத்த படம் எப்படி இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அவரின் திரைப்பட வீச்சு எவ்வளவு வீரியமானது!

இந்திய அளவில் இன்றைக்கும் நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் 61 ஆண்டுகால திரைப்பட வரலாறு கொண்ட ஒரே நபர். உலக நாயகன் கமல் மட்டுமே.

திரையுலகில் புதுப்புது உத்திகளையும் நவீன தொழில் நுட்பங்களையும் கமல் அறிமுகப்படுத்தும்போதெல்லாம் அவர் 20 வருடங்கள் அட்வான்ஸாக இருக்கிறார் என்று பலர் சொல்வார்கள். ஆனால் கமலோ, எப்போதுமே ‘நான் 20 வருடங்கள் பின்தங்கியவனாகவே உணருகிறேன்’ என்று சொல்வார், கமல் என்கிற பார்த்தாசாரதி.

ஆம். கமலின் தாயார் ராஜலட்சமி மறைகிறவரை அவர் வைத்த ஒரிஜினல் பெயரான பார்த்தசாரதி என்றுதான் கூப்பிடுவார்.

நன்றி : கோபால்

Kamal birthday special – Unknown facts about Ulaga Nayagan Kamal Haasan

விசு மறைவுக்கு பின்னர் உருவாகும் ‘சம்சாரம் அது மின்சாரம் 2’..; ராஜ்கிரணுடன் பேச்சுவார்த்தை.. மனோரமா & ரகுவரன் கேரக்டர்களில் யார்.?

விசு மறைவுக்கு பின்னர் உருவாகும் ‘சம்சாரம் அது மின்சாரம் 2’..; ராஜ்கிரணுடன் பேச்சுவார்த்தை.. மனோரமா & ரகுவரன் கேரக்டர்களில் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏவிஎம் தயாரிப்பில் 1986 ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வெளியான குடும்ப காவியம் ‘சம்சாரம் அது மின்சாரம்’.

இந்தப் படத்தில் விசு, ரகுவரன், லட்சுமி, மனோரமா, வாகை சந்திரசேகர், மாதுரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விசு இயக்கி நடித்திருந்தார்.

இப்படத்தில் நடித்த விசு, மனோரமா, ரகுவரன் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை.

வெள்ளிவிழா கண்ட இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்றது.

கொரோனா சமயத்தில் உடல் நலக்குறைவால் காலமானார் விசு.

ஆனால் அவரின் மறைவுக்கு முன்பு ‘சம்சாரம் அது மின்சாரம் 2’ படத்துக்கான கதையை எழுதித் தயாராக வைத்திருந்தாராம்.

தற்போது ‘சம்சாரம் அது மின்சாரம் 2’ உருவாகிறது.

மக்கள் அரசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை விசுவின் சிஷ்யர் வி.எல்.பாஸ்கர் ராஜ் இயக்கவுள்ளார்.

உதவி வசனகர்த்தாவாக விசுவின் மகள் லாவண்யா விசு பணிபுரியவுள்ளார்.

இசையமைப்பாளராக பரத்வாஜ், ஒளிப்பதிவாளராக ராஜவேல் மோகன், எடிட்டராக சுரேஷ் அர்ஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

‘சம்சாரம் அது மின்சாரம் 2’ படத்தில் விசு நடிக்க ராஜ்கிரணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மனோரமா & ரகுவரன் கேரக்டர்களில் யார்? நடிக்க போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

இன்றைய சூழலுக்கு ஏற்ற கதையாக இன்னொரு வீட்டில்‌ மின்சாரமாக இருக்கும்‌ சம்சாரத்தின்‌ கதை” என பாஸ்கர் ராஜ் தெரிவித்துள்ளார்.

Samsaram athu minsaram sequel goes on floors soon

More Articles
Follows