வேதாளத்தை ‘தெறி’க்க விட்ட ரெமோ

வேதாளத்தை ‘தெறி’க்க விட்ட ரெமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ (அக். 7ல் ரிலீஸ்) வெளியாகி மூன்று வாரங்களை கடந்துள்ளது.

அடுத்த வாரம் தீபாவளி வரும் வரை இப்படத்திற்கு அமோக வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது வரை சென்னையில் மட்டும் ரூ. 6.45 கோடியை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்குமுன் வெளியான மற்ற படங்கள் சென்னை வசூல் விவரம்…. (காட்சிகளின் விவரம்)

1. கபாலி – ரூ. 10,45,29,825 (காட்சிகள் – 209)
2. ஐ – 8,70,47,097 (காட்சிகள் – 201)
3.தெறி – 8,56,97,198 (காட்சிகள் – 269)
4. கத்தி – 6,69,89,724 (காட்சிகள் – 159)
5. ரெமோ – 6,45,69,289 (காட்சிகள் – 231)
6. வேதாளம் – 6,31,64,379 (காட்சிகள் – 181)
7. இருமுகன் – 5,61,56,219 (காட்சிகள் – 117)

‘மாஸ் ஹீரோ’ பட்டத்தை ஏற்றுக் கொண்டாரா சிவகார்த்திகேயன்..?

‘மாஸ் ஹீரோ’ பட்டத்தை ஏற்றுக் கொண்டாரா சிவகார்த்திகேயன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakarthikeyan imagesரெமோ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மார்கெட் ஜெட் வேகத்தில் முன்னேறி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.

அந்த அழைப்பிதழில் மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன் என அச்சிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவ்விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது….

மக்களுக்கும் சினிமாவிற்கும் ஒரு பாலமாக சினிமா பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு படத்தின் குறை, நிறைகளை மக்களிடமும் எங்களிடமும் கொண்டு சேர்க்கின்றனர்.

அவர்களே என்னை மாஸ் ஹீரோ என்கின்றனர். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால் ரியல் மாஸ் ஹீரோக்கள் ரஜினி-அஜித்-விஜய்தான். அவர்கள் நிறைய சாதித்து இருக்கிறார்கள்” என்றார்.

தமன்னா பற்றிய வதந்தி… பொய்யாக்கிய ‘அஸ்வின் தாத்தா’ சிம்பு

தமன்னா பற்றிய வதந்தி… பொய்யாக்கிய ‘அஸ்வின் தாத்தா’ சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

str in AAAஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

இதில் சிம்புவின் 2வது கேரக்டரான அஸ்வின் தாத்தாவுக்கு 60 வயது.

எனவே இவருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னாவும் பாட்டியாக நடிக்க போவதாக செய்திகள் வந்தன.

ஆனால் இந்த கேரக்டரின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இதில் வயதான தோற்றத்தில் சிம்பு காரை தூக்கி பிடித்து கொண்டு நிற்கிறார்.

ஆனால் தமன்னாவோ மிக இளமையாக சிம்புவை கட்டிப்பிடித்தப்படி நிற்கிறார்.

எனவே, தமன்னா பற்றிய வதந்திக்கு இந்த பர்ஸ்ட் லுக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிம்பு.

அப்பா சிவகுமாரை பெருமிதப்படுத்தும் சூர்யா-கார்த்தி

அப்பா சிவகுமாரை பெருமிதப்படுத்தும் சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakumar suriya karthiநடிகர்கள் சூர்யா-கார்த்தியின் தந்தை சிவக்குமார் அவர்களும் ஒரு நடிகர் என்பது நாம் அறிந்ததே.

மேலும் இவர் ஓர் அழகான ஓவியர் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் தங்கள் தந்தையின் 75 ஆண்டுகள் ஓவியங்களை நினைவு கூறும் வகையில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சியை நடத்த இருக்கின்றனர்.

இந்த நிகழ்வானது அக். 24-26 வரை சென்னையில் உள்ள கிரீம்ஸ் சாலையில் நடைபெறுகிறது.

இன்று தொடக்கவிழாவில் ஓவியர்கள் அல்போன்ஸ் தாஸ், மணியம் செல்வன், ஸ்ரீதர் உள்ளிட்டோருடன் நடிகர் கார்த்தி கலந்து கொள்ளவுள்ளார்.

நிறைவு விழா அன்று தனது தந்தை சிவகுமாருடன் சூர்யா கலந்து கொள்கிறார்.

சூர்யாவிடம் அடி வாங்கியவருக்கு நேர்ந்த கதி (படம் உள்ளே)

சூர்யாவிடம் அடி வாங்கியவருக்கு நேர்ந்த கதி (படம் உள்ளே)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and Thakur Anoop Singhஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எஸ் 3. (சிங்கம் 3)

இப்படத்தின் சூட்டிங் அண்மையில் ஆந்திராவில் உள்ள தலக்கோனா பகுதியில் படமாக்கப்பட்டது.

இப்படத்தின் அதிரடி காட்சிகளில் பிரபல மாடல் ஆன, தாகூர் அனுப் சிங் நடித்துள்ளார்.

இவர் பாடி பில்ட்டிங்கில் மிஸ்டர் வேர்ல்ட் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.

மேலும் இவர் ஒரு பைலட்டாகவும் இருக்கிறார்.

இந்நிலையில் சிங்கம் 3 படம் குறித்து அவர் கூறியதாவது…

ஹரி இயக்கத்தில் நடித்தது நல்ல அனுபவம். இனி அவர்  எப்போது கூப்பிட்டாலும் வந்து நடித்து கொடுப்பேன்.

சூர்யா எனக்கு அண்ணன் மாதிரி. நிறைய அட்வைஸ் செய்தார்.

எப்படி நல்ல படங்களை தேர்ந்தெடுப்பது என வழிகளை சொன்னார்.

அவருடன் நான் மோதும் காட்சிகள் அனல் பறக்கும்” என்றார்.

கூடவே க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் இவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதோ…

anoop-singh-takur-after-climax-shoot

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் அல் பசீனோ..?

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் அல் பசீனோ..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

al pacino dhanushதனுஷின் கொடி படம் வருகிற அக். 28ஆம் தேதி தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து, கௌதம் மேனனின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ‘பவர்பாண்டி’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இதனையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ (Al Pacino) நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாம்.

இவர் Scarface உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்த சிறந்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படுவதால், அவர் ஒப்புக்கொள்ளக்கூடும் எனத் தெரிகிறது.

More Articles
Follows