மீண்டும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி மோதல்.!

மீண்டும் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி மோதல்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo rekkaசிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ள ரெமோ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

வருகிற அக்டோபர் 7ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

அதுபோல் ஜீவா, பாபி சிம்ஹா நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் இதே நாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடித்துள்ள றெக்க படத்தையும் அந்நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோல் கடந்த 2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் மற்றும் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் ஆகிய இரண்டும் ஒரே நாளில் (மே 1) ரிலீஸ் ஆகி மோதிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கபாலி உரிமை மட்டும் ரூ. 220 கோடி… முழு விபரம்..

கபாலி உரிமை மட்டும் ரூ. 220 கோடி… முழு விபரம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

full details of Kabali rights sold outதிரையுலக சுனாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி வெளியாக 3 நாட்களே உள்ளன.

டீசர், பாடல்கள், புரோமோஷன் என இப்படம் தொடர்பான அனைத்தும் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் விநியோக உரிமையும் கொடி கட்டி பறக்க ஆரம்பித்துள்ளது.

இன்னும் பல மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மற்ற பகுதிகளின் விநியோக உரிமை தகவல்கள் வந்துள்ளன.

  • தமிழ்நாடு உரிமை மட்டும்- ரூ 68 கோடி
  • ஆந்திரா + தெலுங்கானா உரிமை- ரூ 32 கோடி
  • கேரளா உரிமை – ரூ 7.5 கோடி
  • கர்நாடகா உரிமை – ரூ 10 கோடி
  • வட இந்தியா உரிமை – ரூ 15.5 கோடி
  • அமெரிக்கா மற்றும் கனடா உரிமை – ரூ 8.5 கோடி
  • மற்ற நாடுகள் உரிமை – ரூ 16.5 கோடி
  • சாட்டிலைட் & மியூசிக்கல் உரிமை ரூ 40 கோடி
  • மற்றவை – ரூ 12 கோடி

ஆக மொத்தம் வியாபாரம் மட்டுமே ரூ 220 கோடிகளுக்கு மேல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது,

‘விஐபி’யை கொண்டாடும் தனுஷ்-அனிருத் ரசிகர்கள்

‘விஐபி’யை கொண்டாடும் தனுஷ்-அனிருத் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and anirudhதனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் தொடங்கிய இவர்களது கூட்டணி இன்று வரை கோலிவுட்டில் முக்கிய இடம் வகுத்து வருகிறது.

இவர்கள் கூட்டணியில் உருவான வேலையில்லா பட்டதாரி படம் கடந்த 2014ஆம் ஆண்டு இதே நாளில் (ஜீலை 18) வெளியானது.

வேல்ராஜ் இயக்கிய இப்படத்தில் அமலா பால், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் சூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது ஆண்டை இன்று தனுஷ், அனிருத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சச்சிதானந்தா கோயிலில் ரஜினி சாமி தரிசனம்

சச்சிதானந்தா கோயிலில் ரஜினி சாமி தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and aishwaryaரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி வருகிற ஜீலை 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஆனால் அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே ரஜினிகாந்த் சென்னை வரவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சச்சிதானந்தா கோயிலில் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினி சாமி தரிசனம் செய்துள்ள போட்டோக்கள் வெளியாகியுள்ளன.

இதனை ஐஸ்வர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்ற வதந்திகள் வந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் உற்சாகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீயான் விக்ரமுடன் இணையும் சசிகுமார்

சீயான் விக்ரமுடன் இணையும் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and sasiஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் இருமுகன்.

விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 2ஆம் தேதி சென்னையில் வெளியிடுகின்றனர்.

செப்டம்பர் 1ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதே போல் சசிகுமார் தயாரித்து நடித்துள்ள கிடாரி படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 2 தேதியிலும் படத்தை செப்டம்பர் 1ஆம் தேதியும் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

கபாலியின் செங்கல்பட்டு ஏரியாவை வாங்கிய பிரபல நிறுவனம்..!

கபாலியின் செங்கல்பட்டு ஏரியாவை வாங்கிய பிரபல நிறுவனம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali movie stillsசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கபாலி’ தரிசனம் தர தயாராகிவிட்டார்.

இன்னும் சில நாட்களில் இந்த தரிசனம் கிடைக்கவிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து தயாரிப்புக் குழுவினரும் இறுதிக் கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புரோமோஷன், விளம்பரம், விநியோகம் என பல வகைகளில் பிஸியாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் செங்கல்பட்டு ஏரியாவின் வெளியீட்டு உரிமையை AGS நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows