‘சூது கவ்வும்’ 2 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது!

‘சூது கவ்வும்’ 2 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சி.வி. குமார் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என்று அறிவித்தார்.

தற்போது ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மிர்ச்சி சிவா முக்கிய வேடத்தில் நடிக்க கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி கேமியோ தோற்றத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

‘சூது கவ்வும் 2’ படத்தை சித்தார்த் நடித்த ‘யங் மங் சங்’ படத்தை இயக்கிய எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கியுள்ளார்.

‘Soodhu Kavvum 2’ officially announced with cast and crew details

கிரிக்கெட்டர் முத்தையா பிறந்தநாளில் ‘800’ பட பர்ஸ்ட் லுக்.; விஜய்சேதுபதிக்கு பதிலாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ நடிகர்

கிரிக்கெட்டர் முத்தையா பிறந்தநாளில் ‘800’ பட பர்ஸ்ட் லுக்.; விஜய்சேதுபதிக்கு பதிலாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூவி டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் வழங்கும் இயக்குநர் எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘800’ படத்தின் முதல் பார்வை அவரது பிறந்தநாளில் வெளியாகிறது.

கிரிக்கெட் உலகில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், தனது ஒப்பற்ற விளையாட்டுத் திறமையால் அனைவரையும் மகிழ்விக்க தவறியதில்லை.

மூவி டிரையின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ‘800’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இதன் முதல் பார்வை அவரது பிறந்த நாளான இன்று ஏப்ரல் 17 வெளியாக இருக்கிறது.

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாகவும், மஹிமா நம்பியார் மதிமலராகவும் நடிக்கின்றனர்.

இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், ‘கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி, தற்போது ‘800’ படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி உள்ளார்.

இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தை மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்திருக்க விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரித்துள்ளார்.

*கூடுதல் தகவல்..*

முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருந்தார். அவரது புகைப்படமும் அப்போது வெளியானது. ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் ஒரு இலங்கை வீரர் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் நடிக்க கூடாது என தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. எனவே விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

*நடிகர்கள்:*

மதுர் மிட்டல்,
மகிமா நம்பியார்,
நரேன்,
நாசர்,
வேல ராமமூர்த்தி,
ரித்விகா,
வடிவுக்கரசி,
அருள் தாஸ்,
ஹரி கிருஷ்ணன்,
யோக் ஜேபி,
சரத் ​​லோஹிதாஷ்வா

*தொழில்நுட்ப குழு*

எழுத்து & இயக்கம்: எம்.எஸ். ஸ்ரீபதி,
ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர் ஐ.எஸ்.சி,
இசை: ஜிப்ரான்,
எடிட்டர்: பிரவீன் கே.எல்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: விதேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்கள்: பூர்தி பிரவின் & விபின் PR
தோற்ற வடிவமைப்பாளர்கள்: அனிதா மட்கர் & கௌரவ்

Twitter

The untold story of a legend who spun his way to the top.

Starring #MadhurrMittal as #MuthiahMuralidaran, #800MotionPoster ➡️ http://bit.ly/800TheMovieMotionPoster

#MSSripathy @GhibranOfficial @Mahima_Nambiar @RDRajasekar @Cinemainmygenes @MovieTrainiMP
@VivekRangachari @SonyMusicSouth @donechannel1

Insta

The untold story of a legend who spun his way to the top.

Starring #MadhurrMittal as #MuthiahMuralidaran, #800MotionPoster ➡️ story/bio

@murali_800 #MSSripathy @ghibranOfficial @mad.mittal @mahima_nambiar @rdrajasekar.isc @praveenkl @Vivekrangachari @movietrainmp @dirpitchumani @SonyMusic_south @sonymusicindia @donechannel1

Slumdog Millionaire actor Madhurr Mittal replaces Viay Sethupathi, first look revealed

‘லியோ’ பட சூட்டிங் ஜூலை வரை.; 1980s வில்லன் பாபு ஆண்டனி பக்கா அப்டேட்

‘லியோ’ பட சூட்டிங் ஜூலை வரை.; 1980s வில்லன் பாபு ஆண்டனி பக்கா அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து அதில் நடித்து வரும் பாபு ஆண்டனி தன் அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

அவரின் பேட்டியில்..

“தற்போது தான் பான் இந்தியா படங்களின் கான்செப்ட் வந்துள்ளது. நான் 1980களிலேயே இந்தியாவில் உள்ள பலமொழி படங்களில் நடித்திருக்கிறேன்.

இப்போது லோகேஷ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறேன்.

எனக்கு விஜய் த்ரிஷா சஞ்சய் தத் ஆகியோருடன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இனி அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 7 தேதி தொடங்க உள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஜூலை வரை நடைபெறும்” என தெரிவித்தார்.

‘Leo’ film shooting till July.; latest Update by 1980s villain Babu Antony

விஜய் வீட்டு கதவை கட்டிப்பிடித்த ரசிகை.; சிசிடிவி-யை பார்த்து கண்ணீருடன் கோரிக்கை

விஜய் வீட்டு கதவை கட்டிப்பிடித்த ரசிகை.; சிசிடிவி-யை பார்த்து கண்ணீருடன் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்க்கு தமிழக முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ரசிகைகள் உள்ளனர்.

இவர்கள் விஜய் படத்தை திருவிழா போல கொண்டாடுவார்கள். மேலும் விஜய்யின் மீது அளவற்ற அன்பையும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய் வீடு அமைந்திருக்கும் நீலாங்கரைக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ரசிகை ஒருவர் வந்துள்ளார்.

அந்த பெரிய கதவை கட்டிப்பிடித்தபடியே தன் ஆசையை தெரிவித்துள்ளார்.

விஜய் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்து.. “தளபதி அண்ணா நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.. உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என தன் ஆசையை தெரிவித்தார்.

அப்போது அருகில் நின்ற ஒரு நபர் உங்களது ஆசையை விஜய் நிறைவேற்றுவாரா.? அந்த நம்பிக்கை இருக்கிறதா? என கேட்டார்.

ஒரு குழந்தை விஜய்யின் பெயரை சொன்னபோது அந்த குழந்தைக்காக வீடியோ காலில் வந்தார் விஜய்.

நான் அவர் வீட்டு வாசலில் ஏறி வந்து நிற்கிறேன்.. எனவே கண்டிப்பாக நிச்சயம் என்னையும் அழைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார் அந்தப் பெண் ரசிகை.

Vijay’s fan girl video goes viral

தனுசுடன் முதல் முறையாக இணையும் வைகை புயல் வடிவேலு

தனுசுடன் முதல் முறையாக இணையும் வைகை புயல் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில நாட்களுக்கு முன்பு தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸை மீண்டும் தொடங்குவதாகவும், அந்த நிறுவனத்தின் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வைகை புயல் வடிவேலுவை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாக கோலிவுட்டில் செய்திகள் பரவி வருகிறது. மாமன்னன் படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

20 வருட தனுஷ் சினிமா கேரியரில் வடிவேலு முதல் முறையாக இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhanush and Vadivelu joins for the first time

அனைவருக்கும் ‘தெய்வமச்சான்’ தந்த முக்கியத்துவம்.; ஆனந்தத்தில் அனிதா சம்பத்

அனைவருக்கும் ‘தெய்வமச்சான்’ தந்த முக்கியத்துவம்.; ஆனந்தத்தில் அனிதா சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், தீபா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தெய்வ மச்சான்’.

இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அனிதா சம்பத் பேசுகையில்…

“இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் படத்திற்கும் பேராதரவு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தேவையான முக்கியத்துவத்தை இயக்குநர் மார்ட்டின் வழங்கி இருக்கிறார். ” என்றார்.

Anitha Sampath speech at deiva machan press meet

More Articles
Follows