தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸின் ராஜ்சேகர் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்த ’சூர்ப்பனகை’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளை SP சினிமாஸ் இப்போது கைப்பற்றியுள்ளது.
ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், SP சினிமாஸின் கோல்டன் டச் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறது. ‘சூர்ப்பனகை’ படத்திற்கும் இதன் மூலம் சிறப்பான கவனம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.
ஃபேண்டசி- த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ‘சூர்ப்பனகை’ திரைப்படம், 1920கள் மற்றும் தற்போதைய காலம் என இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையாகும். சில தனித்துவமான பழங்கால பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார்.
இது சில மர்மமான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. அக்ஷரா கவுடா, ஜேபி, மன்சூர் அலி கான், ஜீவா ரவி, மைக்கேல், கௌஷிக், யோகி, ரவிராஜா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
சாம் சிஎஸ் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது.
*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*
உலகளாவிய வெளியீடு: SP சினிமாஸ்,
தயாரிப்பு: ராஜ் சேகர் வர்மா,
தயாரிப்பாளர்: ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ்,
இயக்குநர்: கார்த்திக் ராஜு,
இசை: சாம் சிஎஸ்,
ஒளிப்பதிவாளர்: கோகுல் பெனாய்,
படத்தொகுப்பு: சாபு ஜோசப்,
கலை இயக்குநர்: சீனு,
சண்டைப் பயிற்சி: சூப்பர் சுப்புராயன்,
பாடலாசிரியர்: சாம் சிஎஸ்,
நடனம்: ஷெரிப்,
வண்ண மேற்பார்வையாளர்: க்ளென் காஸ்டினோ,
திட்ட வடிவமைப்பாளர்: கே. சதீஷ் (சினிமாவாலா),
கிரியேட்டிவ் ஹெட்: அஷ்வின் ராம்,
ஒலிக்கலவை: டி.உதய் குமார் (நாக் ஸ்டுடியோஸ்),
DI: ஃபயர் ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்,
கலரிஸ்ட்: ஸ்ரீகாந்த் ரகு,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்,
ஆடை வடிவமைப்பாளர்: ஜெயலட்சுமி,
வடிவமைப்பு: Tuney 24AM,
தயாரிப்பு நிர்வாகி: கே.ஆர்.பாலமுருகன்
Regina starrer Soorpanagai directed by Caarthick Raju movie update