கார்த்திக் ராஜு இயக்கும் த்ரில்லர் படத்தில் ‘பிக்பாஸ்’ ரைசா

கார்த்திக் ராஜு இயக்கும் த்ரில்லர் படத்தில் ‘பிக்பாஸ்’ ரைசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raiza wilsonகொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த ‘சூரப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது.

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, ‘சூர்ப்பனகை’ தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக தொடங்கி முடித்தும் விட்டார்கள். கொரோனா காலத்தில் உருவான இந்த உணர்வுப்பூர்வமான த்ரில்லர் படத்தில் ரைசா வில்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குறைந்த நடிகர்கள் எனும் போது, நல்லதொரு தொழில்நுட்பக் குழு அமைந்தால் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமையும். அந்த வரிசையில் தனது தொழில்நுட்பக் குழுவினர், படக்குழு மற்றும் கதைக்களம் குறித்து இயக்குநர் கார்த்திக் ராஜுவிடம் கேட்ட போது, “வேல்ராஜ் சார் (ஒளிப்பதிவாளர்), திலிப் சுப்பராயன் (சண்டைப் பயிற்சியாளர்), சாம் சிஎஸ் (இசையமைப்பாளர்), சாபு ஜோசப் (எடிட்டர்) மற்றும் நான், நாங்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். குறைவான படக்குழுவினருடன் படப்பிடிப்பை நடத்த நாங்கள் அனுமதி பெற்றோம். என்னுடைய ‘சூர்ப்பனகை’ படத்தை தயாரித்த ராஜ்சேகர் வர்மா இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இந்தக் கதைக்கு ஏற்ற களமாக இருந்தது. கொரோனா தொற்று இல்லாத அந்த கிராமத்தில் 500-க்கும் குறைவான குடும்பங்களே வசிக்கிறார்கள். படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டது. முழுபடப்பிடிப்பும் முடித்து திரும்பிவிட்டோம், தற்போது எடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகள் இன்று தொடங்கவுள்ளது.

இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் ‘கைதி’ படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எமோசனலான த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் ராஜு.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக பார்வையாளர்களை அடுத்தக் காட்சி என்ன என்று யூகிக்க முடியாத நிலையிலும், அதே வேளையில் நல்ல காமெடியுடனும் இந்த த்ரில்லர் இருக்கும் என்கிறது படக்குழு.

டொவினோ தாமஸ் & குரு சோமசுந்தரம் கூட்டணியில் பன்மொழியில் உருவாகும் ‘மின்னல் முரளி’

டொவினோ தாமஸ் & குரு சோமசுந்தரம் கூட்டணியில் பன்மொழியில் உருவாகும் ‘மின்னல் முரளி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

guru somasundaramபாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.

வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படத்திற்கு “மின்னல் முரளி” எனப்பெயரிட்டுள்ளது.

இப்படத்தின் டீஸர் திருவோன தினத்தில் வெளியாகவுள்ளது. பெங்களூர் டேஸ், முந்திரிவல்லிகள் தாளிர்கொம்பல் போன்ற மெகா ஹிட் படங்களை தந்த (Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர், தங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படம் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.

மாநிலம் கடந்து ரசிகர்களை ஈர்க்கும் மிகப்பெரிய அடுத்த கட்ட வளர்ச்சியை வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் இப்படம் மூலம் முன்னெடுத்துள்ளது.

மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படைப்பை Weekend Blockbuster ) வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் சார்பில் ஷோபியா பால் தயாரிக்கிறார்.

பாசில் ஜோசப் இயக்கும் இத்திரைப்படத்தை சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் உருவான ஜெமினி மேன், தி லாஸ்ட் விட்ச் ஹண்டர், நெட்ப்ளிக்ஸ் லூசிஃபர், டெல் /டேல் சீரிஸ், பாகுபலி 2, சல்மான் கான் நடிப்பில் சுல்தான் போன்ற மிகப்பெரும் படைப்புகளில் சண்டைப்பயிற்சி இயக்குநராக இவர் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தை உருவாக்கும் பாசில் ஜோசப் மிகத்தேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், மிகச்சிறந்த நடிகர்களை உலகம் சினிமா தரத்தில் இப்படத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். இதுவரை இந்திய சினிமா உலகம் கண்டிராத, புத்தம் புதிய சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு தர உழைத்து வருகிறார்.

“மின்னல் முரளி” முழுக்க முழுக்க கேரள கிராமப்புறங்கள் மற்றும் இதுவரை கேமரா காணாத கேரள லோகேஷன்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

நடிகர் குழுவான குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், P பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரிஶ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன், மற்றும் பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்கிறார்கள்.

மின்னல் முரளி மிகத் திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழுவை பெற்றுள்ளது. படத்தின் சவால மிகுந்த கலை இயக்கத்தை, மிக வித்தியாசமான செட்டுகளை வடுவமைக்கிறார் கலை இயக்குநர் மனு ஜகத்.

அனைத்து வகை இசையிலும் அசத்தும் ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மனு மஞ்சித் பாடல் வரிகள் எழுதுகிறார்.

இப்படத்தின் எழுத்து பணிகளை செய்துள்ளனர் அருண் அனிருதன் மற்றும் ஜஸ்டின் மேத்யூ. படத்தின் படத்தொகுப்பை லிவிங்ஸ்டன் மேத்யூ செய்துள்ளார். விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஆண்ட்ரு D கிரஸ் செய்கிறார். ஒலி வடிவமைப்பை நிக்சன் ஜார்ஜ் செய்துள்ளார். ஹாசன் வண்டூர் மேக்கப் செய்ய, J மெல்வி உடை வடிவமைப்பு செய்துள்ளார். சூப்பர் ஹீரோவுக்கான தனித்த உடைவடிவமைப்பை தீபாலி நூர் செய்துள்ளார். அதிகாரப்பூர்வ போஸ்டரை டிசைன் செய்துள்ளார் N T ப்ரதூள். கருத்து வடிவமைப்பை பவி சங்கர் செய்துள்ளார்.

தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை.; ஓடிடி ரிலீசுக்கு தடையில்லை.. அமைச்சர் அதிரடி

தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை.; ஓடிடி ரிலீசுக்கு தடையில்லை.. அமைச்சர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

No permission for reopen theaters in TN says Minister Kadambur Rajuபொது மக்கள் திரையரங்குகளில் அதிகளவில் கூடுவதால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது.

கிட்டதட்ட 5 மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் தியேட்டர் நிர்வாகிகளும் அதனை சார்ந்த வணிகங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.

எனவே திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை தமிழக அரசிடம் திரைத்துறை சங்கங்கள் வைத்தன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்றும். கொரோனா குறைந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.

மேலும் ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் கிடையாது. இதற்கு திரைத்துறையினர் தான் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No permission for reopen theaters in TN says Minister Kadambur Raju

தியேட்டரில்தான் தெய்வத்துக்கு மரியாதை.; கைத்தட்டல் தந்த உயரத்தை மறக்க வேண்டாம்.. சூர்யாவுக்கு ஹரி அட்வைஸ்

தியேட்டரில்தான் தெய்வத்துக்கு மரியாதை.; கைத்தட்டல் தந்த உயரத்தை மறக்க வேண்டாம்.. சூர்யாவுக்கு ஹரி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya must reconsider his OTT release says Director Hariநடிகர் சூர்யாவிற்கு அதிரடியான ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களில் மிக முக்கியமானவர் டைரக்டர் ஹரி.

இவர்கள் இணைந்த சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, ஆறு, வேல் ஆகிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன.

விரைவில் அருவா என்ற படத்திற்காக இருவரும் இணையவுள்ளனர்.

இந்த நிலையில் சூர்யா தனது சூரரைப் போற்று படத்தை ஓடிடியில் வெளியிட போவதாக ஓரிரு தினங்களுக்கு முன் அறிவித்தார்.

அந்த முடிவை சூர்யா மறுபரிசீலனை செய்தால்,சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.. என நடிகர் சூரியாவிற்கு டைரக்டர் ஹரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Suriya must reconsider his OTT release says Director Hari

 

அவரின் அறிக்கை இதோ…

Suriya must reconsider his OTT release says Director Hari

கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதி கேட்ட டெம்பிள்சிட்டி ஓனர் மீது வக்கீல் புகார்

கைலாசாவில் ஹோட்டல் வைக்க அனுமதி கேட்ட டெம்பிள்சிட்டி ஓனர் மீது வக்கீல் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கைலாசா என்ற ஒரு நாட்டையே உருவாக்கி அங்கிருந்து பல வீடியோக்களை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

கைலாசா கரன்சி, கைலாசா பாஸ்போர்ட், கைலாசா பேங்க் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில்… சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் உணவகம் வைக்க அனுமதி கோரி மதுரையிலுள்ள டெம்பிள்சிட்டி ஹோட்டல் அதிபர் குமார் என்பவர் கடிதம் எழுதி அதை இணையத்தில் வெளியிட்டார்.

அதைப்பார்த்த சில மணிநேரங்களில் நித்யானந்தா நேரலையில் தோன்றி உணவகத்திற்கு விரைவில் அங்கீகாரம் அளிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில்…

இந்திய அரசால் தேடப்படும் பாலியல் வழக்கு குற்றவாளியான நித்யானந்தாவிற்கு டெம்பிள்சிட்டி குமார்
என்பவர் ஆதரவு தருவதாக கூறியுள்ளார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான முத்துக்குமார் என்பவர் மதுரை ஆட்சியர் அலுவலகம் & மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

1598107781_2920072_inline

‘டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்

‘டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dikkiloonaபாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மை திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமான பாடல் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘கைவச்சாலும் வைக்காம’ என்ற பாடல்.

சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வைச்சாலும் கைக்காம’ என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இப்போதும் அந்தப் பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது ‘டிக்கிலோனா’ படக்குழு. தற்கால இசையைச் சேர்த்து, இப்போதுள்ள இளைஞர்களும் கொண்டாடும் வகையில் செய்திருப்பதே மார்டனைஸ் என்பதன் பொருள்.

இதற்கான உரிமையை இசைஞானி இளையராஜாவிடமிருந்து வாங்கி, ‘டிக்கிலோனா’ படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன். ஆகையால், அதே போன்றதொரு காமெடி கலட்டாவை ‘டிக்கிலோனா’ படத்திலும் இடம்பெறவுள்ளது என்பதை உறுதியாக நம்பலாம். இதில் ஒரு சிறுபகுதியை மட்டும் ‘டிக்கிலோனா’ ட்ரெய்லரில் காட்டியிருந்தது படக்குழு. படத்தில் அந்தப் பாடலில் உள்ள காமெடி கலாட்டா கண்டிப்பாக ரசிக்க வைக்கும்.

அதே போல் ட்ரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் இப்போதும் ட்ரெண்ட்டாகி வருவது இதற்கு ஒரு சான்று. சந்தானம் படங்களின் ட்ரெய்லர்களில் குறைந்த மணி நேரத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட ட்ரெய்லராக ‘டிக்கிலோனா’ உருவாகியுள்ளது. இதுவரை 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. படக்குழுவினரோ ஹிட் கன்பார்ம் என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.

கார்த்திக் யோகியின் கலகலப்பான இயக்கம், சந்தானத்தின் கவுண்டர் வசனங்கள், யுவனின் மயக்கும் இசை, யோகி பாபுவின் அசத்தல் காமெடி, ஆனந்தராஜ் – முனீஸ்காந்த் – ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘யூடியூப்’ புகழ் பிரசாந்த் உள்ளிட்ட பலருடைய கலாட்டாக்கள் என அனைத்தும் ஒரே படத்தில் இணைந்துள்ளதே இந்த வெற்றிக்குச் சான்று. இந்தப் படத்தின் கதைகளத்தை நம்பி முதலீடு செய்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி சினீஷ் என படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே டபுள் ஹாப்பி.

கார்த்திக் யோகி இயக்கியுள்ள ‘டிக்கிலோனா’ படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணம், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்வி, எடிட்டராக ஜோமின், கலை இயக்குநராக ராஜேஷ், சண்டைக் காட்சிகள் இயக்குநராக தினேஷ் சுப்பராயன், பாடலாசிரியர்களாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண், நடன இயக்குநராக ஷெரீஃப், ஆடை வடிவமைப்பாளராக கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

பார்வையாளர்களை எப்படியெல்லாம் கவலைகளை மறந்து சிரிக்க வைப்பது என்பதற்காகவே இரவு- பகல் பாராமல் உழைத்து வருகிறது ‘டிக்கிலோனா’ படக்குழு. நமக்கெல்லாம் ஒரு தழைவாழை காமெடி விருந்து விரைவில் காத்திருக்கிறது.

More Articles
Follows