தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு படம் ஹிட்டானால் அந்த கதையை போல பல படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.
தமிழ் சினிமாவில் 1990களில் காதலை விதவிதமாக சொன்னார்கள்.
பார்க்காமல் காதல், டெலிபோன் காதல், கடித காதல், கண்களாலே காதல், ஊமை காதல் என நிறைய படங்கள் வந்தன.
அதாவது காதல் கோட்டை, சொல்லாமலே, காதலுக்கு மரியாதை, நினைவிருக்கும் வரை, காலமெல்லாம் காதல் வாழ்க, லவ் டுடே என பல படங்கள் வந்தன.
அதுபோல் டான் கதைகள், பேய் படங்கள், காமெடி படங்கள், அடல்டி ஒன்லி படங்கள், கபடி விளையாட்டு, கிரிக்கெட் இப்படி தமிழ் சினிமாவில் நிறைய சீசன் உள்ளது.
தற்போது புட்பால் சீசன் உருவாகியுள்ளது.
விஜய்யின் பிகில் படத்தில் பெண்கள் புட்பாலை மையப்படுத்தியிருந்தனர்.
அண்மையில் வெளியான பப்பி படத்திலும் இதுபோன்ற புட்பால் காட்சிகள் இருந்தன.
விரைவில் வெளியாகவுள்ள ஜடா மற்றும் சாம்பியன் படங்களிலும் புட்பால் விளையாட்டே கதையின் மையக்கருவாக உள்ளது.
டிசம்பர் 6ல் ஜடாவும் 13ல் சாம்பியன் படமும் வெளியாகவுள்ளது.
இதில் பிகில் மற்றும் ஜடா என 2 படத்திலும் கதிர் புட்பால் ப்ளேயராகவே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து புட்பால் கதைகள் வந்தால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்களோ?
ஒரே போல கதையாக இல்லாமல் வித்தியாசமாக அமைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
Recent Tamil movies based on Foot Ball game